பயிர் பாதுகாப்பு மருந்துகளை பாதுகாப்பாக கையாளுவது குறித்த விவசாயிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி!!


பயிர் பாதுகாப்பு மருந்துகளை பாதுகாப்பாக கையாளுவது குறித்த விவசாயிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி!! 


தஞ்சை மாவட்டம் மதுக்கூர் வட்டாரத்தில் உள்ள மதுக்கூர் வடக்கு பஞ்சாயத்தில் அட்மா திட்டத்தின் கீழ் பயிர் பாதுகாப்பு மருந்துகளை பாதுகாப்பாக கையாள்வது குறித்த விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது.


துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி பயிர் பாதுகாப்பு மருந்துகளை கையாளும் முறை பாதுகாப்பு உடை அணிந்து தெளித்தல் பயிர்ப் பாதுகாப்பு மருந்துகளின் தன்மைக்கேற்ப கையாளும் முறைகள் அதன் முக்கியத்துவம் பற்றி விளக்கி கூறினார். 



பூச்சிக்கொல்லிகளின் நச்சுத்தன்மைக்கேற்ப பச்சை மஞ்சள் மற்றும் சிவப்பு முக்கோணங்கள் பாட்டில்களில் குறித்திருப்பது பற்றி  விளக்கி கூறினார். வயலின் மருந்தடிக்கும் நபர் அவசியம் கையுறை அணிந்திருக்க வேண்டும்.முகத்தில் பூச்சி மருந்து படுவதை தவிர்க்க பைபர் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும். 


காற்றடிக்கும் திசையில் பூச்சி மருந்து அடிக்க வேண்டும். வேளாண்துறை மூலமும் தொழில்நுட்ப அலுவலர்களாலும் பரிந்துரைக்கப்படும் அளவில் மட்டுமே மருந்துகளை பயன்படுத்த வேண்டும். 





உடனடியாக கட்டுப்படுத்துவதாக நினைத்து அதிக அளவில் மருந்துகளை பயன்படுத்துவது நீர் காற்று மண் ஆகியவற்றின் சூழலை கெடுப்பதோடு பயிரிலும் நச்சுத்தன்மை அதிக அளவில் சேர வாய்ப்புள்ளது. 



எனவே விளை பொருட்களிலும் பயன்படுத்தும் வைக்கோலிலும் நச்சின் தன்மையை அதிகரிப்பதோடு மனிதர்களுக்கும் உடல்நலக் குறைவை ஏற்படுத்தும்.மருந்து தெளித்த பின் தெளித்த வர் கைகளை சோப்பு மற்றும் சுத்தமான தண்ணீர் கொண்டு சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.


பயன்படுத்திய கலன்களையும் தூய்மை செய்து பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும். பயிர்ப் பாதுகாப்பு மருந்துகள் மீதம் இருப்பின் குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் பாதுகாப்பாக வைக்க அறிவுறுத்தப்படுகிறது. 


வேளாண்மை உதவி அலுவலர்கள் கார்த்தி மற்றும் தினேஷ் தென்னங்கன்றை நடவு செய்தல் மற்றும் வரப்பில் உளுந்து சாகுபடி செய்வதன் அவசியம் பற்றி எடுத்துக் கூறினார். மதுக்கூர் வடக்கு ஊராட்சி மன்ற தலைவர் நாராயணன் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார் .அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப அலுவலர் ராஜு பயிற்சியை ஒருங்கிணைத்தார்.



மதுக்கூர் வடக்கு கிராமத்தை சேர்ந்த விவசாயிக்கு 50 சத மானியத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஊராட்சி மன்ற தலைவர் நாராயணன் மற்றும் கோவிந்தராஜ் ஆகியோர் வழங்கினர்.


தகவல் வெளியீடு


S.திலகவதி,

வேளாண்மை இணை இயக்குனர், மதுக்கூர்

தஞ்சாவூர் மாவட்டம்.


மேலும் படிக்க....


கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன்! அதிகாரபூர்வ அறிவிப்பு!!


சின்ன வெங்காயத்திற்கான சராசரி பண்ணை விலை கிலோ ரூ.22 வரை இருக்கும்!!


மாதம் ரூ. 30,000 லாபம் தரும் காடை வளர்ப்பு! எவ்வளவு முதலீடு தேவை?


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


Post a Comment

0 Comments