விவசாயிகளுக்கு 60% மானியத்தில் மதிப்புக்கூட்டு இயந்திரங்கள் ரூ.9 லட்சத்து 47 ஆயிரம் ஒதுக்கீடு!!



விவசாயிகளுக்கு 60% மானியத்தில் மதிப்புக்கூட்டு இயந்திரங்கள் ரூ.9 லட்சத்து 47 ஆயிரம் ஒதுக்கீடு!!


விவசாயிகளுக்கு மானிய விலையில் மதிப்புக்கூட்டு பொருட்கள் வழங்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட விவசாயிகள் இந்த அரியவாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டுப் பயனடையுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



ரூ.9 லட்சத்து 47 ஆயிரம் ஒதுக்கீடு


இதன்படி, தமிழ்நாடு அரசு வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் தேசிய வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் அறுவடைக்கு பின்சார் தொழில்நுட்பம் மற்றும் மதிப்பு கூட்டும் எந்திரங்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் 13 மதிப்பு கூட்டும் எந்திரங்கள் வழங்க ரூ.9 லட்சத்து 47 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.


என்னென்ன  எந்திரங்கள் மானியத்தில் பெறலாம்


விவசாயிகள் தங்கள் பகுதிகளில் விளையும் விளைபொருட்களை தங்கள் பகுதிகளிலேயே மதிப்புக்கூட்டி அதிக விலைக்கு விற்று லாபம் பெற முடியும். வேளாண் விளைபொருட்களை மதிப்பு கூட்டும் எந்திரங்களான, 


  • மாவு அரைக்கும் எந்திரம், 


  • தேங்காய் மட்டை உரித்தெடுக்கும் எந்திரம், 


  • நிலக்கடலை செடியில் இருந்து காய் பிரித்தெடுக்கும் எந்திரம், 


  • நிலக்கடலை தோல் உரித்து தரம் பிரிக்கும் எந்திரம், 


  • எண்ணெய் பிழிந்தெடுக்கும் செக்கு எந்திரம், 


  • வாழைநார் பிரித்தெடுக்கும் கருவி 


  • கால்நடை தீவனம் அரைக்கும் எந்திரம் போன்றவை வழங்கப்படுகிறது.



60% மானிய விலையில் மதிப்புக்கூட்டும் எந்திரங்கள்


இவை அனைத்து விவசாயிகளுக்கும் 40 சதவீத மானியத்திலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், சிறு, குறு விவசாயிகளுக்கு 60% மானியமும் வழங்கப்படுகிறது.



மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS


விவசாயிகள் மானிய விலையில் மதிப்புக்கூட்டும் எந்திரங்கள் பெற விருப்பமுள்ள விவசாயிகள் ஈரோடு வள்ளிபுரத்தான்பாளையம் கருங்கவுண்டன்பாளையத்தில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தையும், கோபிசெட்டிபாளையம் தெற்கு பார்க் வீதியில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தையும் தொடர்பு கொள்ளலாம்.


மேலும் தொடர்புக்கு


கூடுதல் விபரங்களுக்கு mis.aed.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.



தகவல் வெளியீடு


ஈரோடு விவசாயிகளுக்கு மானிய விலையில் மதிப்புக்கூட்டு பொருட்கள் வழங்கப்படுகிறது என்று ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி கூறியுள்ளார்.

 

மேலும் படிக்க....


சிறு குறு விவசாயிகளுக்கு 50% மானியத்தில் நெல் அறுவடை இயந்திரம் பெறுவது எப்படி?


PM Kisan 12வது தவணை கிடைக்க விரைவாக இதைச் செய்யுங்கள்!!


PM Kisan புதிய மாற்றம் 12 வது தவணை ரூ.2000 இனி விவசாயிகள் வீடு தேடி வரும்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


Post a Comment

0 Comments