PM Kisan 12வது தவணை கிடைக்க விரைவாக இதைச் செய்யுங்கள்!!

 


PM Kisan 12வது தவணை கிடைக்க விரைவாக இதைச் செய்யுங்கள்!!


பிரதமர் விவசாய நிதியுதவித் திட்டத்தின் கீழ் 11ஆவது தவணையாக உதவித் தொகையை விவசாயிகளுக்கு இந்த மாத தொடக்கத்தில் மத்திய அரசு வழங்கியது. இந்த 11வது தவணை விடுவிக்கப்பட்டதில் 10 கோடி விவசாயிகள் பலன் அடைந்தனர். 



ஹிமாச்சல் மாநிலம், சிம்லாவில் கடந்த செவ்வாய்க்கிழமை மத்திய அரசின் நலத்திட்ட விழா நடைபெற்றது. அந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற போது 10 கோடி விவசாயிகளுக்கான ரூ.21 ஆயிரம் கோடி நிதியை விடுவித்தார்.


பிஎம் கிசான் (eKYC) அப்டேட்


ஆண்டுதோறும் 4 மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் தவணைத் தொகையை விவசாயிகள் பெற்றுள்ளனர். 11வது தவணைத் தொகை வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்தத் திட்டத்தில் இகேஒய்சி (eKYC) அப்டேட் செய்வதற்கான காலக்கெடுவை மத்திய அரசு நீட்டித்துள்ளது.


விவசாய நிதியுதவித் திட்டப் பயனாளிகள்


முன்னதாக, பிரதமரின் நிதியுதவித் திட்டத்தின் கீழ் இகேஒய்சி அப்டேட் செய்வதற்கான காலக்கெடுவை மே மாதம் 31ஆம் தேதி வரை மத்திய அரசு வழங்கியிருந்தது. இத்தகைய சூழலில், மத்திய அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், பிரதமரின் விவசாய நிதியுதவித் திட்டப் பயனாளிகள் இகேஒய்சி அப்டேட் செய்வதற்கான காலக்கெடு ஜூலை மாதம் 31ஆம் தேதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



இகேஒய்சி (eKYC) அப்டேட் செய்வது எப்படி?


  • அதிகாரப்பூர்வ இணையதள பக்கம் https://pmkisan.gov.in/ செல்லவும். HOME PAGE பக்கத்தில் வலது பக்கத்தில் உள்ள இகேஒய்சி ஆப்சனை தேர்வு செய்யவும்.

  • இகேஒய்சி பேஜ் உள்ளே சென்ற பிறகு, உங்கள் ஆதார் எண் குறிப்பிட வேண்டும். கேப்சா கோடு எண்டர் செய்து, சேர்ச் கொடுக்கவும். இப்போது, உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் கொடுக்கவும்.


  • தேவையான விவரங்கள் அனைத்தும் கொடுத்த பிறகு, 'கெட் ஓடிபி' என்ற ஆப்சனை தேர்வு செய்யவும். இப்போது நீங்கள் ஏற்கனவே வழங்கிய மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். இதை குறிப்பிட்ட பாக்ஸ் உள்ளே எண்டர் செய்யவும்.


  • இதை செய்த பிறகு இகேஒய்சி நடவடிக்கை நிறைவடையும். இதை நீங்கள் ஜூலை 31ஆம் தேதிக்குள் செய்து முடிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இல்லையேல், உங்கள் அடுத்த தவணை பணம் வந்து சேராது.



பயனாளி பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என எப்படி சரிப்பார்ப்பது


  • அதிகாரப்பூர்வ இணையதள பக்கம் https://pmkisan.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும். HOME PAGE பக்கத்தில் உள்ள விவசாயிகள் கார்னர் என்ற ஆப்சனை தேர்வு செய்யவும்.


  • இதில் உள்ள பயனாளிகள் பட்டியல் என்பதை கிளிக் செய்யவும். இங்கு உங்கள் ஆதார் எண், திட்ட பயனாளி எண் அல்லது மொபைல் எண் என ஏதேனும் ஒன்றை நீங்கள் குறிப்பிட வேண்டும்.


  • விவரங்களை உள்ளிட்ட பிறகு கெட் டேட்டா என்ற ஆப்சனை தேர்வு செய்யவும். இப்போது, உங்கள் பயனாளி நிலை என்ன என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

 


மேலும் படிக்க....


விவசாயிகளுக்கு புதிய பயிர் கடன் ஒரு ஏக்கருக்கு 8640 ரூபாய் கிடைக்கும், முழு விவரம்!!


விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் கடன் பெற விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம் உள்ளே!


தமிழக அரசின் இலவச ஆட்டுக்கொட்டகை திட்டம் 2022 விண்ணப்பிப்பது எப்படி?


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments