தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு வானிலை மையம் தகவல்!!
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது,
தமிழகத்தில் அக்னி நட்சத்திர கால கட்டத்தில் மழை பெய்ததால் ஓரளவு பெரிய அளவிலான வெயில் பாதிப்பில் இருந்து மக்கள் தப்பித்தனர். ஆனாலும் இப்போது மீண்டும் வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது.
வெளியில் நடமாட முடியாத அளவுக்கு வெப்பம் தகிக்கிறது. இந்த வெயிலின் உக்கிரத்தை, வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சியால் அவ்வப்போது பெய்யும் மழை தான் தணித்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் மிதமான மற்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக
தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை, கரூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
அதை தொடர்ந்து, 8-ம் தேதி, 9-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மீனவர்களை பொறுத்தமட்டில் இன்று மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்ககடல் பகுதிகளில் பலத்தக்காற்று மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 8.6.22, 9.6.22, 10.6.22 ஆகிய நாட்களில் வடக்கு கேரளா – கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
எனவே, மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும்
படிக்க....
நடப்பு ரபி 2021-22 பருவத்தில் பயிர் காப்பீடு செய்ய பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீட்டு திட்டம்!!
நெற் பயிரில் பாக்டீரியா இலை கருகல் நோயை தடுத்து பயிரை பாதுகாப்பது எப்படி?
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற
YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை
தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக
வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...