சம்பா பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.6080 வரையில் உயர்வு!!



சம்பா பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.6080 வரையில் உயர்வு!!


சம்பா பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அரசின் இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.



சம்பா பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) உயர்த்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 2022-23ஆம் சந்தை ஆண்டுக்கு சம்பா பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரைவை ஒப்புதல் கொடுத்துள்ளது.


குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு


விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும் என்பதற்காக குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டுள்ளது.


  • அதிகபட்சமாக எள்ளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு 523 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 


  • அடுத்தபடியாக பாசிப்பருப்புக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு 480 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 


  • இதையடுத்து சூரியகாந்தி விதைகளுக்கு குவிண்டாலுக்கு 385 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.



  • இதன்படி ஒரு குவிண்டால் நெல்லின் தற்போதைய விலையான ரூ.1940-லிருந்து ரூ.2040-ஆகவும், 'A' கிரேடு நெல் ரகங்கள் விலை ரூ.1960-லிருந்து ரூ.2060-ஆகவும் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. 


  • பருத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு 6080 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. நீள பருத்திக்கு குவிண்டாலுக்கு 6380 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.


  • நிலக்கடலைக்கு குவிண்டாலுக்கு 5850 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

  • கேழ்வரகு விலை குவிண்டாலுக்கு ரூ.3,578 ஆகவும், சோளத்தின் விலை குவிண்டாலுக்கு ரூ.1,962 ஆகவும், 

  • பயத்தம் பருப்பின் விலை குவிண்டாலுக்கு ரூ.7,755 ஆகவும், உளுத்தம் பருப்பின் விலை குவிண்டாலுக்கு ரூ.6,600 ஆகவும்,  உயர்த்தப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



எமிரேட்ஸ் ஒப்பந்தம் 


மேலும் இந்தியா - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே தொழில்துறை மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத் துறைகளில் ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 



மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS

இந்த ஒப்பந்தம் அமலாகும் போது, பரஸ்பர ஒத்துழைப்புள்ள அனைத்துத் துறைகளிலும், குறிப்பாக புதுப்பிக்கவல்ல எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு, தொழில் துறை சார்ந்த தொழில்நுட்பங்கள், சுகாதாரம் மற்றும் வாழ்க்கை அறிவியல் துறைகளில் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுப்பிடிப்பை அதிகரிக்க வழிவகுக்கும்.


மேலும் படிக்க....


சிறு குறு விவசாயிகளுக்கு 50% மானியத்தில் நெல் அறுவடை இயந்திரம் பெறுவது எப்படி?


விவசாயிகளுக்கு உயிர் உரங்கள் போரான் நுண்ணூட்டச்சத்து மற்றும் தக்கைபூண்டு மானியத்தில் வழங்கப்பட்டது!!


PM Kisan புதிய மாற்றம் 12 வது தவணை ரூ.2000 இனி விவசாயிகள் வீடு தேடி வரும்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


Post a Comment

0 Comments