கரும்பில் கட்டைப் பயிர் குட்டையாதல் நோயும் அதன் மேலாண்மை முறைகளும்!!



கரும்பில் கட்டைப் பயிர் குட்டையாதல் நோயும் அதன் மேலாண்மை முறைகளும்!!


இந்நோய் கரும்புப் பயிராகும் எல்லா நாடுகளிலும் காணப்படுகிறது. இது பெரும்பாலும் கட்டைப் பயிரை அதிகம் தாக்குகிறது. கரும்பில் கட்டைப் பயிர் குட்டையாதல் நோயும் அதன் மேலாண்மை முறைகள் பற்றியும் காண்போம்.


நோய்க் காரணி


இந்நோய் ஒரு வகை நச்சுயிரியினால் (பாக்டீரியா) தோற்றுவிக்கப்படுகிறது. இந்த நச்சுயிரி கோள வடிவில் காணப்படும்.



நோயின் அறிகுறிகள்


இந்நோயால் தாக்கப்பட்ட பயிர் வளர்ச்சி குன்றி நலிந்துக் காணப்படும். செடிகளின் கணுவிடைப்பகுதி மிகவும் குட்டையாகக் காணப்படும். வெப்பக் காலங்களில் வாடல் நோயைப் போன்ற அறிகுறிகள் தென்படும். 


தாக்கப்பட்ட இளம் பருவத்துக் கரும்பின் தண்டை நீளவாக்கில் பிளந்துப் பார்த்தால் கணுப்பகுதியில் இளம் சிவப்பு நிறப்புள்ளிகள் தென்படும். முற்றியக் கரும்பின் தண்டில் சாற்றுக்குழாய்த் தொகுதிகள் கிவப்பு அல்லது பழுப்பு நிறமாகக் காணப்படும்.


  • கணுப் பகுதிகள் இளஞ்சிவப்பு நிறத்தில் தென்படல்


  • பயிர்கள் வளர்ச்சி குன்றித் தென்படல்


  • நோய்ப் பரவும் விதமும், பரவுவதற்கு ஏற்ற காலநிலைகளும்



நோய்த் தாக்கியச் செடிகளிலிருந்து எடுக்கும் விதைக் கரணைகள் மற்றும் சாறு மூலமாக மொய் பரவக் கூடியது. நோய்த் தாக்கியிருப்பதற்கான அறிகுறிகள் எளிதில் கண்டுபிடிக்க முடியாத நிலையில், நோயுற்ற செடிகளிலிருந்து எடுக்கப்படும் கரணைகள் மூலமாக நோய் எளிதில் பரவுகிறது. பூச்சிகளால் இந்நோய்ப் பரப்பப் படுவதில்லை.


அறுவடையின் போது உபயோகிக்கப்படும் கத்திகளில் ஒட்டிக்கொண்டிருக்கும் சாறு மூலமாகவும் ஒரு கரணையிலிருந்து வேறு கரணைகளுக்கு நோய் பரவக்கூடியது. 


எலி, பன்றிப் போன்ற மிருகங்கள் நோயுற்றக் கரும்பைக் கடித்து விட்டுப் பின்னர் மற்ற கரும்புகளைக் கடிக்கும் போது அவற்றின் பல்லில் ஒட்டிக்கொண்டிருக்கும் நச்சுயிரிகள் மூலமாகவும் நோய் பரவக் கூடியது. சோளம், மக்காச்சோளம், அருகம்புல் போன்றவற்றையும் இந்நோய்த் தாக்குகிறது.


நோய்க்கட்டுப்பாடு உழவியல் முறைகள்


நோய்த் தாக்காத வயல்களிலிருந்து நல்ல திடமான கரும்புகளிலிருந்து, விதைக்கரணைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். வளர்ச்சி குன்றிய நலிந்த பயிர்களை மறுதாம்புக்கு விடக்கூடாது. 



விதைக்கரணைகள் வெட்டும் போது, கத்திகளை அடிக்கடி லைசால் அல்லது பீனால் போன்ற தோற்று நீக்கியில் நனைத்தெடுக்க வேண்டும். கரணைகள் எடுப்பதற்கென பிரத்தியேகமாக பராமரிக்கப்பட்ட நோயற்ற நாற்றாங்கால்களை வைத்திருப்பது நல்லது.


விதை சிகிச்சை 


விதைக் கரணைகளை 540 செ.கி வெப்பக் காற்றில் தொடர்ந்து 8 மணி நேரம் வைத்திருந்து, பின்னர் நன்கு ஆற வைத்து, நடவுக்குப் பயன்படுத்த வேண்டும். விதைக்கரணைகளை 500 செ.கி வெப்பநிலை உள்ள நீரில் தொடர்ந்து 2 மணி நேரம் அமிழ்த்து வைத்திருந்து ஆற வைத்துப் பின்னர் நட வேண்டும். 


இவ்வாறு ஏதாவது ஒரு முறையில் விதைக் கரணைகளுக்கு வெப்ப சிகிச்சை அளிக்க பல சர்க்கரை ஆலைகளில், பிரத்தியேகமாக இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


தகவல் வெளியீடு


கு.விக்னேஷ், முனைவர் பட்டப்படிப்பு மாணவர் – தாவர நோயியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தொடர்பு எண்: 82488 33079, மின்னஞ்சல் : lakshmikumar5472@gmail.com, இரா. அருண்குமார், முனைவர் பட்டப்படிப்பு மாணவர் – வேளாண் விரிவாக்கத் துறை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர், 



தொடர்பு எண்: 73052 81993. மின்னஞ்சல் : arunkumarr698@gmail.com, பா.தமிழ்செல்வன், முதுநிலை வேளாண் பட்டதாரி – தாவர நோயியல் துறை, உதவி ஆய்வாளர், ICAR – KVK – கரூர்.

 

மேலும் படிக்க....


கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளுக்கு பொது நகை கடன் வட்டியில்லா கடன் அறிவிப்பு!!


விவசாயிகளுக்கு 60% மானியத்தில் மதிப்புக்கூட்டு இயந்திரங்கள் ரூ.9 லட்சத்து 47 ஆயிரம் ஒதுக்கீடு!!


சம்பா பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.6080 வரையில் உயர்வு!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


Post a Comment

0 Comments