Random Posts

Header Ads

விவசாயத்தில், வேளாண் வானிலை மற்றும் பண்ணை மேலாண்மை சார்ந்த வேளாண்மை செய்திகள்!!



விவசாயத்தில், வேளாண் வானிலை மற்றும் பண்ணை மேலாண்மை சார்ந்த வேளாண்மை செய்திகள்!!


தர்மபுரி, வேளண்மை அறிவியல் நிலையம், பாப்பரப்பட்டியில் இயங்கி வரும் மாவட்ட வேளாண் வானிலை பிரிவு மூலம் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வட்டார வாரியாக வேளாண் வானிலை முன்னறிவிப்புகள் வாரம் தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வழங்கப்பட்டு வருகிறது, இப்பிரிவின் நோக்கம் வானிலை சார்ந்த வேளாண்மை செய்து மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்துவதாகும்.


விவசாயத்தில், வேளாண் வானிலை அனைத்து வகையான விவசாய உக்திகளிலும் மற்றும் பண்ணை மேலாண்மையிலும் பெரும்பங்கு வகிக்கிறது, வானிலை மற்றும் காலநிலை விவசாயத்தின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாகும். 



பயிர்களை விதைப்பது முதல் அறுவடை வரை அனைத்து வகையான விவசாய மேலாண்மை நடவடிக்கைகளும் வானிலையை பொறுத்ததே அமைகிறது. மழை பற்றிய முன்னறிவிப்பு நிச்சயமான பயிர் உற்பத்திக்கு வழி வகுத்து நாட்டின் பொருளாதார வளர்ச்சியை, மேம்படுத்துகிறது. 


வானிலை மாற்றங்களால் ஏற்படும் பூச்சி நோய் தாக்குதல் பற்றி அறிந்து இழப்பைத் தவிர்க்கலாம். சாதகமற்ற வானிலையால் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏற்படும் இழப்புகளைக் குறைக்கலாம். ஊடுசாகுபடி வேவைகளான உரமிடுதல், களை எடுத்தல், பயிர்ப்பாதுகாப்பு முறைகள் போன்றவற்றை நிர்மையம் செய்ய உதவுகிறது. 


அறுவடை மற்றும் அறுவடை பின் தொழில்நுட்பங்களை மேற்கொள்ள வானிலை முன்னறிவிப்பு வழி வகை செய்கிறது. அதிக மழை பெறும் போது வெள்ளநிவாரணப் பணிகளையும், குறைந்த மழை பெறும் சமயத்தில் நீர் சேமிப்பு மற்றும் வறட்சி மேலாண்மை முறைகளையும் திட்டமிடலாம். 


கால்நடைப் பராமரிப்பு முறைகளைத் திட்டமிட வானிலை முன்னறிவிப்பு அவசியமாகிறது. நிகழ்கால முன்னறிவிப்பு ஒரு நாளைக்கு இருமுறை அல்லது ஆறு மணி நேரத்திற்கு ஒரு முறை செய்யப்படுகிறது. குறுகிய கால முன்னறிவிப்பு வானிலை முன்னறிவிப்புக்கான கால அளவு அதிகபட்சமாக 72 மணி நேரம் ஆகும். பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இவ்வறிவிப்பு உதவுகிறது. 



மத்திய கால முன்னறிவிப்பு ஒரு நாளில் ஒரு முறை மட்டும் அறிவிக்கப்படும். இந்த வானிலை முன்னறிவிப்பின் கால அளவை 3-10 நாட்களாகும். இது நடவுப்பணிகளை திட்டமிட உதவுகிறது. நீண்டகால முன்னறிவிப்பு ஒரு நாளில் ஒரு முறை மட்டும் அறிவிக்கப்படு இந்த வானிலை முன்னறிவிப்பின் கால அளவு 10 நாட்களுக்கும் அதிகமானது. 


இது ஒரு மாதம் அல்லது ஒரு பருவம் வரை நீடிக்கும் இது பட்டம் மற்றும் பட்டத்திற்கு ஏற்ற பயிரை தேர்ந்தெடுக்க உதவுகிறது. வானிலை மற்றும் காலநிலை ஆகியவை பயிர் சூழலின் ஏற்படுத்தும் பொதுவான காரணிகள்.


வேளாண் காலநிலையின் சிறப்பியல்பு


சூரிய கதிர்வீச்சு, காற்றின் வெப்பநிலை, மழைப்பொழிவு, காற்று, ஈரப்பதம் போன்றவை பயிர் வளரும் பருவத்தை தீர்மானிக்கிறது. ஒரு பயிரின் வளர்ச்சி, வளர்ச்சி மற்றும் மகசூலில் முக்கிய பங்கு வகிப்பது காலநிலை காரணிகளாகும். 


அதிகபட்ச பயிர் உற்பத்தி மற்றும் பொருளாதார நன்மைகள் அந்த அந்த பகுதியின் வானிலை காரணிகளை பொருத்து மதிப்பீடு செய்யபடுகிறது.


நிலையான உற்பத்திக்கான பயிர் திட்டமிடல்


வானிலையில் பயிர்களில் எற்படும் நஷ்டத்தை குறைக்க, சாதகமற்ற வானிலையில் உகந்த விளைச்சலை பெற, தகுந்த பயிர், ரகங்கள் தேர்வு செய்ய, பயிர் செய்யும் முறை, தற்செயலான பயிர்த் திட்டமிடல், நீர்தேவை, கிடைக்கும் பயனுள்ள மழை மற்றும் மண்ணில் ஈரப்பதம் ஆகியவற்றை கொண்டு திட்டமிடலாம்



பயிர் மேலாண்மை


விதைப்பு, உரமிடுதல், களை மேலாண்மை, பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்ற பல்வேறு பண்ணை நடவடிக்கைகளின் தகுந்த நேரத்தில் நடைமுறைப்படுத்தி கையாளுவதில் வானிலை முன்னறிவிப்பு முக்கிய பங்கு வகுக்கிறது இதனால் சாதகமான வானிலை நிலைமைகளைப் பயன்படுத்தவும் மற்றும் சாதகமற்ற வானிலைக்கு தேவையான மாற்றங்களைச் முன்கூட்டியே செய்யவும் உதவுகிறது. 


உதாரணமாக, வறட்சிக்கால முன்னறிவிப்பின் போது களையெடுத்தல், தழைக்கூளம் அமைத்தல் போன்றவை மேற்கொள்ளப்படுகின்றன, மழை அதிகமாக இல்லாதபோது, மற்றும் மண்ணின் ஈரப்பதம் 30 முதல் 80 சதவீதம் வரை இருக்கும் போது உரமிடுதல், மழை இல்லாதபோது மண்ணின் ஈரப்பதம் 90 சதவீதம் மற்றும் காற்றின் வேகம் மணிக்கு 25 கிமீ குறைவாக உள்ளபோது மருத்து தெளித்தல் அறிவுறுத்தபடுகிறது


பயிர் கண்காணிப்பு


ஒரு பயிரின் வளர்ச்சி மற்றும் செயல்திறனைச் சரிபார்க்க, பயிர் வளர்ச்சி உருவாக்கப்படுத்துதல் மாதிரிகளை பயன்படுத்துதல், நீர் சமநிலை நுட்பம் அல்லது தொலையுணர்வு மற்றும் புவிசார் தகவல் போன்ற பொருத்தமான வானிலைக் தொழில்நுட்ப பயன்படுத்தலாம்.



பயிர் மாதிரியாக்கம் மற்றும் மகசூல்-காலநிலை கணிப்புகள்


தற்போதைய மற்றும் கடந்த கால வானிலை காரணிகளின் தரவுகளை கொண்டு பொருத்தமான பயிர் உருவாக்கப்படுத்துதல் மாதிரிகள் பயன்படுத்தப்படும் போது வளர்ச்சி மற்றும் மகசூல் பற்றிய தகவல்களை வழங்க அல்லது கணிக்க முடியும்.


காலநிலை உட்சநிலைகள்


வானிலை முன்னறிவிப்பின் மூலம் காலநிலை உட்ச நிலைகளான வெள்ளம், வறட்சி, அதிக காற்று, உறைபனி, ஆலங்கட்டி புயல் போன்ற காலநிலை உச்ச நிலைகளை முன்னறிவைப்பதன் மூலம், விவசாயத்தில் ஏற்படும் சேதம் மற்றும் நஷ்டத்தைக் குறைத்து பயிரைப் பாதுகாக்கலாம் மேலும் பூச்சி மற்றும் நோய் தாக்குதலால் ஏற்படும் பாதிப்புகளையும் குறைக்கலாம்.


காலநிலையை கொண்டு மண்ணின் ஈரப்பத அழுத்தத்தைக் கண்டறிதல்


மண்ணின் ஈரப்பதத்தை காலநிலை நீர் சமநிலை முறையில் மூலம் தீர்மானிக்கலாம், இது மண்ணின் ஈரப்பதம் மற்றும் வறட்சியைக் கண்டறியப் பயன்படுகிறது, இதன் மூலம் நீர்ப்பாசனம், தழைக்கூளம், நீராவிப்போக்கு தடுப்பான் பயன்பாடு, இலையுதிர்தல், பயிர்களை களைதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளைத் முன்கூட்டியே ஏற்பாடு செய்ய பயன்படுகிறது மேலும் பயிர் செயல்திறனை மேம்படுத்த உதவுகிறது



பயிர் தகவமைப்பு மற்றும் உற்பத்தித்திறனுக்காக ஒத்த பயிர் சூழல்களை இணைத்தல்


பயிர் தகவமைப்பு மற்றும் உற்பத்தித்திறனுக்காக ஒரே மாதிரியான பயிர் சூழல்களை இணைக்க வேளாண் வானிலைதகவல் பயன்படுத்தப்படலாம். காலநிலை அபாயங்கள் மற்றும் உற்பத்தி மற்றும் அறுவடை முன்னறிவிப்புகளின் இடர் பகுப்பாய்வுக்கும் இது பயன்படுத்தப்படலாம்,


கால்நடை உற்பத்தி


கால்நடை உற்பத்தி விவசாயத்தின் ஒரு பகுதியாகும். கால்நடைகளின் வளர்ச்சி, மேம்பாடு மற்றும் உற்பத்திக்கான சாதகமான மற்றும் சாதகமற்ற காலநிலைகளின் தொகுப்புகளை வேளாண் வானிலை ஆய்வில் ஆய்வு செய்யப்படுகிறது. 



இவ்வாறு, பால் மற்றும் கோழி உற்பத்தியை மேம்படுத்த, இயல்பான காலநிலைக்கு எற்ற மற்றும் பொருத்தமான இனங்களை தேர்வு செய்யவும், உருவாக்கவும் மற்றும் தற்போதுள்ள உள்ள இனங்களுக்கு ஏற்ற இணக்கமான சூழ்நிலையை வழங்கவும் உதவுகிறது


ஆகவே, வேளாண் தொழிலில் ஈடுபடும் ஒவொருவரும் தனது பகுதியில் நிலவ்வுகின்ற தட்பவெட்பநிலையைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும், 


அருகில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலைத்தில் உள்ள மாவட்ட வேளாண் வானிலை பிரிவை அணுகி தங்கள் வாரம் இருமுறை (செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை) வழங்கப்படும் வட்டார வேளாண் வானிலை முன்னறிவிப்புகளை பெற்று விவசாயத்தில் வானிலை சார்ந்த விவசாயதை நடைமுறை படுத்த கேட்டுக்கொள்கிறோம், 



இவ்வாறாக விவசாயத்தில் வேளாண் வானிலையின் பங்கை பற்றி தொழில்நுட்ப வல்லுநர் ப. அருண்குமார், மாவட்ட வேளாண் வானிலை பிரிவு, ம. விஜயகுமார், திட்ட ஒருங்கிணைப்பாளர், இரா. தங்கதுரை உதவி பேராசிரியர் (கால்நடை) இவ்வாறு கூறினார்.


மேலும் படிக்க....


தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தொடங்குகிறது கனமழை!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!


விவசாயத்திற்கு 16 மணிநேரம் மும்முனை மின்சாரம் வழங்க காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் கோரிக்கை!


விவசாயி வீட்டில் இருந்து இயக்கும் வகையிலான பம்ப் கன்ட்ரோலர் செழிக்கும் விவசாயம்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments