Random Posts

Header Ads

பயிர் காப்பீடு தொகை வழங்க தாமதம் ரூ. 91 ஆயிரத்து 420 இழப்பீடு வழங்க உத்தரவு!!



பயிர் காப்பீடு தொகை வழங்க தாமதம் ரூ. 91 ஆயிரத்து 420 இழப்பீடு வழங்க உத்தரவு!! 


இழப்பீடு வழங்க உத்தரவு


பயிர் காப்பீடு தொகை வழங்க தாமதம் ஏற்பட்டதால் பாதிக்கப்பட்ட 2 பெண் விவசாயிகளுக்கு ரூ. 91 ஆயிரத்து 420 இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.



கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த கீழ் அனுபவம் பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மனைவி சரவண சுந்தரி, 40; இவர், கடந்த 2016ம் ஆண்டு பிரதான் மந்திரி பாசல் பீமா யோஜனா திட்டத்தில் ஒரு ஏக்கருக்கு ரூ. 369 வீதம் 2 ஏக்கருக்கு 738 ரூபாயை சிதம்பரத்தில் உள்ள தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பயிர் காப்பீடு செய்திருந்தார்.


2016-2017ல் ஏற்பட்ட வறட்சியால் பாதித்த அவருக்கு, தமிழக அரசு இரண்டு ஏக்கருக்கு 36 ஆயிரத்து 284 ரூபாய் வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. இழப்பீடு தொகை வழங்க தாமதம் ஆனதால் சரவண சுந்தரி கடந்த 2019ல் இழப்பீடு கோரி கடலுார் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மனுத் தாக்கல் செய்தார்.



வழக்கு நிலுவையில் இருந்த போது, 35 ஆயிரத்து 156 ரூபாய் மட்டுமே சுந்தரிக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கியது. மீதமுள்ள காப்பீடு தொகை, சேவை குறைபாட்டிற்காக மொத்தம் 28 ஆயிரத்து 136 ரூபாயை இழப்பீடாக வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டது. 


இதேப் போன்ற வழக்கில் பாதிக்கப்பட்ட அதே கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மனைவி பத்மா,40; என்ற பெண் விவசாயிக்கு பயிர் காப்பீடு தொகை 36 ஆயிரத்து 284 ரூபாய் மற்றும் சேவை குறைபாட்டிற்கு 27 ஆயிரம் என மொத்தம் 63 ஆயிரத்து 284 ரூபாய் இழப்பீடு வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டது.

 


மேலும் படிக்க....


தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தொடங்குகிறது கனமழை!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!


விவசாயத்திற்கு 16 மணிநேரம் மும்முனை மின்சாரம் வழங்க காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் கோரிக்கை!!


விவசாயி வீட்டில் இருந்து இயக்கும் வகையிலான பம்ப் கன்ட்ரோலர் செழிக்கும் விவசாயம்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


Post a Comment

0 Comments