விவசாயிகளுக்கு தென்னையில் ஊடு பயிர்கள் சாகுபடி செய்யும் முறை பற்றிய விளக்கம்!!
சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் வட்டாரத்தில் பெரும்பாலும் தென்னை அதிகமாக பயிர் செய்வார்கள். ஆகையால் தென்னை மரங்களுக்கு இடையில் உள்ள இடைவெளியில் ஊடுபயிர் சாகுபடி செய்யும் முறை பற்றியும் அதன் பயன்கள் பற்றியும் அ.அம்சவேணி, வேளாண்மை உதவி இயக்குநர் எடுத்து கூறினார்.
தென்னை பயிருக்கு நடுவில் ஊடுபயிர் சாகுபடி செய்யும் தொழில் நுட்பத்தினையும் எடுத்து கூறினார். பயிரைத் தேர்வு செய்யும் போது அந்தந்தப் பகுதி தட்பவெப்ப நிலை / மண் மற்றும் அந்த விளை பொருளுக்கு ஏற்ற சந்தை ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
மேலும் தென்னை மரங்களின் இலைகளின் சுற்றளவுள்ள இடைவெளி மற்றும் வயது / தென்னந்தோப்பில் கிடைக்கும் சூரிய ஒளி மற்றும் காற்று ஆகியவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
10 ஆண்டுகளுக்கு குறைந்த வயதுடைய மரங்கள்
அந்தந்தப் பகுதியில் பருவநிலை / மரத்தின் பரப்பளவு மற்றும் மண்ணின் தன்மைக்கேற்ப ஐந்தாண்டுகள் வரை / ஒரு பருவப் பயிர்களான நிலக்கடலை, எள், சூரியகாந்தி, மரவள்ளி, ஆகியவற்றைப் பயிர் செய்யலாம். கரும்பு மற்றும் நெல் போன்ற பயிர்களைச் சாகுபடி செய்வதைத் தவிர்க்கலாம்.
7-20 ஆண்டுகள் வயதுள்ள தோப்புகள்
இந்தக் காலக்கட்டத்தில் பசுந்தாள் உரம் மற்றும் தீவனப்பயிர்களை (நேப்பியர் மற்றும் கினியாபுல்) பயிர் செய்யலாம்.
20 ஆண்டுகளுக்கு மேல் உள்ள தோப்புகள்
சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலான வயதுடைய மரங்கள் உள்ள தோப்புகளில் நிலக்கடலை, வெண்டை, மஞ்சள், மரவள்ளி, சர்க்கரை வள்ளி மற்றும் அன்னாசி ஆகியவற்றை சாகுபடி செய்யலாம். (ஊடுபயிர் செய்ய தோப்புக்குள் வரும் சூரிய ஒளி 50 சதவிகிதத்திற்கு மேல் இருக்க வேண்டும்).
கொகொ, மிளகு (பன்னியர் 1/ பன்னிய{ர் 2ஃ பன்னியர் 5 அல்லது கரிமுண்டா), சாதிக்காய் மற்றும் வனிலா ஆகிய பல வருட பயிர்களையும் ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். இதில் கொகொ, சாதிக்காய் மற்றும் வனிலா ஆகியவை பொள்ளாச்சி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் சில பகுதிகளுக்கு ஏற்றவை.
மேலேகூறிய பயிர்களில் ஒவ்வொரு பயிருக்கும் பரிந்துரைக்கப்பட்ட உரம் மற்றும் நீர்ப்பாசனத்தைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். தென்னந்தோப்பில் ஊடு பயிர் செய்யத் தேர்ந்தெடுக்கும் பயிர் தென்னை மரத்தின் வயது நடப்பட்டிருக்கும் இடைவெளி ஆகியவற்றின் அடிப்படையில் அமைய வேண்டும்.
இதனால் தென்னை மரங்களுக்கு அதன் வளர்ச்சி மற்றும் காய்ப்பு திறனில் எந்தக் குறைபாடும் இல்லாமல் தொடர்ச்சியான லாபம் கிடைக்கச் செய்திட முடியும்.
பல அடுக்குப் பயிர்கள் சாகுபடி தென்னை மரத்தின் உச்சியில் காணப்படும் கொண்டையில் அடுக்கடுக்காக வட்டமாக அமைந்திருக்கும் நீண்ட ஓலைகளின் இலைப்பரப்பின் மேல் சூரிய ஒளி முழுமையான அளவில் கிடைக்கும்படி ஓலைகள் அமைந்திருக்கின்றன.
ஆகவே சூரிய ஒளி அடிப்படையில் தென்னையின் இலைப்பரப்பை முதல் அடுக்கு அல்லது முதல் மாடி என அழைக்கலாம். தென்னை மரத்தின் தண்டைச் சார்ந்து 12 முதல் 15 அடி உயரம் மட்டும் வளர்ந்து தென்னை ஓலைகளில் ஊடுருவிப்பாயும் சிறிய அளவு சூரிய வெளிச்சத்தைப் பயன்படுத்தி நன்றாக வளர்ந்து காய்க்கும் திறன் பெற்ற குறுமிளகு செடிகளை இரண்டாம் அடுக்குப் பயிர் என அழைக்கலாம்.
நான்கு தென்னை மரஙகளில் மத்தியில் உள்ள இடைவெளியில் நேராக ஊடுருவிப்பாய்ந்து கிடைக்கும் குறைந்த அளவு உரிய வெளிச்சத்தையும் தென்னை மரங்களின் இலை சிதறிப் பாய்ந்து கிடைக்கும் வெளிச்சத்தையும் பயன்படுத்தி 8 முதல் 12 அடி உயரம் வரை வளர்ந்து நன்றாக காய்க்கும் தன்மை பெற்ற கொகொ மற்றும் கிராம்பு பொன்றவற்றை 3ம் அடுக்கு செடிகள் என அழைக்கலாம்.
இவ்வாறு செடியின் உயரம், இலைகளின் அமைப்பு, ஆகியவற்றினால் தேவைப்படும் சூரிய வெளிச்சம் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கபடும் ஊடுபயிர்கள் ஒன்றுக்கொன்று உறுதுணையாக நின்று வளர்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இது போன்ற தோப்புகளின் உள்பகுதியில் அதன் தட்பவெப்ப நிலை, காற்றின் ஈரப்பதம், மண்ணில் காணப்படும் வெப்பம், ஈரப்பதம் ஆகியவற்றில் விரும்பத்தகும் பல மாறுபாடுகள் ஏற்படுவதைக் காண முடிகின்றது.
பல பயிர் அமைப்பு
தென்னை பயிர் செய்யப்பட்டும் தோப்பில் ஊடுபயிராக வளர்க்கப்படும் செடிகளுக்கும், தென்னை மரங்களுக்கும் தனித்தனியே அவசியமான சத்துப் பொருட்களைத் தகுந்த உரங்களின் மூலம் மண்ணில் சேர்ப்பது மிகுந்த அவசியமாகும். இதனால் மண்ணின் வளமானது மாறுபடாமல் நீண்ட காலம் வரை பாதுகாக்கப்படுகின்றது.
இவ்வாறு இதமான அடிப்படையில் குறைந்த நிலப்பரப்பிலிருந்து அதிக மகசூலை பெறுவதறகாக ஏற்ற பயிர்களை இணைத்து வளர்க்கப்படும் இந்த பல அடுக்குப் பயிர் முறையானது மிகச் சிறந்தது என கருதப்படுகிறது.
தென்னையில் ஊடு பயிர்கள்
- வாழை,
- மரவள்ளி,
- வெண்டை.
மேலும் படிக்க....
பயிர் காப்பீடு தொகை வழங்க தாமதம் ரூ. 91 ஆயிரத்து 420 இழப்பீடு வழங்க உத்தரவு!!
விவசாயத்தில், வேளாண் வானிலை மற்றும் பண்ணை மேலாண்மை சார்ந்த வேளாண்மை செய்திகள்!!
விவசாயி வீட்டில் இருந்து இயக்கும் வகையிலான பம்ப் கன்ட்ரோலர் செழிக்கும் விவசாயம்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...