Random Posts

Header Ads

தென்னை குருத்தழுகல் நோய் அறிகுறிகள் மற்றும் அவற்றை கட்டுப்படுத்த வழிமுறை பற்றிய முழு தொகுப்பு!!


தென்னை குருத்தழுகல் நோய் அறிகுறிகள் மற்றும் அவற்றை கட்டுப்படுத்த வழிமுறை பற்றிய முழு தொகுப்பு!!


தென்னையை நுண்ணுயிரிகளான பூஞ்சாணங்கள், வைராய்டு மற்றும் பைட்டோபிளாஸ்மா போன்றவை தாக்கிப் பல்வேறு நோய்களை உண்டு பண்ணுகின்றன. இவற்றில் பூஞ்சாணங்களினால் ஏற்படும் நோய்களே அதிகமாகும்.


தென்னை குருத்தழுகல் நோய்


இந்நோய் அழுகல் தன்மையை ஏற்படுத்தும் பைட்டோப்தோரா பால்மிவோரா என்ற பூஞ்சாணத்தால் ஏற்படுகின்றது. இந்நோயால் இளங்கன்றுகள் முதல் 10 வயது மரங்கள் வரை அதிகளவில் பாதிக்கப்படுகின்றன. 



அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் காணப்படும் ஈரப்பதமும் மற்றும் குளிர்ச்சியான கால சூழ்நிலையும் இந்த பூசணம் விரைவாக வளர்ச்சியடைய உதவுகிறது. 


இப்பூஞ்சாணத்தின் நுண்ணிய வித்துக்கள் தென்னையின் இளம் குருத்துப்பகுதியில் முளைத்து, பரவி அதன் நூல் போன்ற இழைகள் குருத்தின் எல்லா பகுதிகளிலும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் வளர்ந்து பரவி விடுவதால் குருத்து வெண்மை கலந்த சாம்பல் நிறமாக மாறி விடுகின்றது.


இதனால் குருத்து இலைகள் வாடி பின்பு அழுகத் தொடங்குகின்றது. குருத்தின் அடிப்பாகம் பலமிழந்து விரைவில் அழுகி துர்நாற்றம் வீச ஆரம்பிக்கின்றது. இந்நிலையில் பூசணத்தின் இழைகள் குருத்தோலைகளையும் அவற்றின் இலைக்காம்பு பகுதிகளையும் தாக்குகின்றன. 


பாதிக்கப்பட்ட இளம் குருத்தை மேல் நோக்கி இழுத்தால் அது அடியிலிருந்து பெயர்ந்து கையோடு வந்து விடும். அழுகிய பகுதியில் சிறிய வௌ்ளை நிற புழுக்கள் காணப்படும். இதுவே குருத்தழுகல் நோயின் முக்கிய அறிகுறியாகும்.



நோய் மேலாண்மை


நோயின் அறிகுறி கண்டவுடன் பாதிக்கப்பட்ட குருத்துப் பகுதிகளை வெட்டி எடுத்து எரித்து விட வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதியை சுத்தம் செய்து அதில் போர்டோ பசை தயாரித்து நன்றாக தடவினால் பூசணம் அழியத் தொடங்கும். 


மீதமுள்ள இலைப்பரப்புகளில் 1 சதம் போர்டோ கலவையை நன்றாக படும்படி தெளிப்பதன் மூலம் இந்நோய் மேலும் பரவுவதை தடுக்கலாம். 


காப்பா் ஆக்ஸிகுளோரைடு மருந்தை 3 கிராம் வீதம் 1 லிட்டா் தண்ணீரில் கலந்து குருத்துப்பகுதியில் ஊற்றுவதன் மூலமும் இந்நோயை கட்டுப்படுத்தலாம். சூடோமோனாஸ் புளுரசன்ஸ் 50 கிராம் என்ற அளவில் பாதிக்கப்பட்ட இடத்தில் போட வேண்டும்.


போர்டோ கலவை தயாரித்தல்


தேவையான பொருட்கள்


  • இரண்டு மண் அல்லது பிளாஸ்டிக் தொட்டி அல்லது பாத்திரம்


  • மயில் துத்தம் (காப்பர் சல்பேட்)1 கிலோ


  • நீர்த்த சுண்ணாம்பு 1 கிலோ


  • தண்ணீர் 100 லிட்டர்



ஐம்பது லிட்டர் தண்ணீர் எடுத்து அதில் பொடித்த 1 கிலோ மயில் துத்தத்தை கரைக்கவும். அது போன்ற இன்னும் ஒரு பாத்திரத்தில் 50 லிட்டர் தண்ணீரில் ஒரு கிலோ நீர்த்த சுண்ணாம்பைக் கரைக்கவும். மயில் துத்த கலவையைச் சிறிது சிறிதாக சுண்ணாம்புக் கலவையினுள் விடவும். 


இவ்வாறு விடும்போதே குச்சியால் நன்றாக கலக்க வேண்டும். கலவை பச்சை கலந்த நீல நிறமாக மாறும். மயில்துத்தம், சுண்ணாம்பு ஆகியவற்றின் வேதியியல் கலவை சரியாக இருக்கின்றதா என அறியச் சிறிய ஒரு சோதனை செய்யலாம். அதாவது நன்றாக தீட்டிய ஒரு இரும்பு கத்தியை கலவையினுள் ஒரு நிமிடம் வைக்கும்போது பழுப்பு நிறம் படிந்திருந்தால் மயில் துத்தம் (செம்பு) சற்று அதிகம் என அர்த்தமாகும். 


சற்று சுண்ணாம்பு நீரை விட்டு மேலும் தீட்டிய கத்தியை கலவையினுள் வைத்தால் செம்பு படியாமல் இருந்தால் கலவை சரியாக இருக்கின்றது என அறியலாம்.



போர்டோ பசை தயாரிக்கும் முறை


இருநூறு (200) கிராம் தாமிர சல்பேட்டை ஒரு லிட்டர் தண்ணீரில் கலக்க வேண்டும். பின்பு வேறு பாத்திரத்தில் 200 கிராம் சுண்ணாம்பு ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து கொள்ள வேண்டும். பின்பு மூன்றாவது பாத்திரத்தில் இவ்விரண்டு கரைசலையும் கலந்து பசை போன்று உபயோகித்து கொள்ளலாம்.

 

மேலும் படிக்க....


விவசாயிகளுக்கு தென்னையில் ஊடு பயிர்கள் சாகுபடி செய்யும் முறை பற்றிய விளக்கம்!!


பயிர் காப்பீடு தொகை வழங்க தாமதம் ரூ. 91 ஆயிரத்து 420 இழப்பீடு வழங்க உத்தரவு!!


கரும்பில் கட்டைப் பயிர் குட்டையாதல் நோயும் அதன் மேலாண்மை முறைகளும்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


Post a Comment

0 Comments