Random Posts

Header Ads

ஆண்டுக்கு 10 டன் பழம் தரும் எலுமிச்சை சாகுபடி குறித்த தொழில்நுட்ப தகவல்கள்!!



ஆண்டுக்கு 10 டன் பழம் தரும் எலுமிச்சை சாகுபடி குறித்த தொழில்நுட்ப தகவல்கள்!!


பழ வகைகளில் ஆண்டு முழுவதும் நல்ல காசு பார்க்க உதவும் எலுமிச்சை எல்லா இடத்திலும் வராது. குறிப்பாக களிமண் மற்றும் களர் மற்றும் உவர் நிலங்கள் உதவாது. 


அதிலும், கோடையில் வெடிப்புகள் கொண்ட தரை பல களிமண் உள்ள இடங்களில் பாதிப்பு வரும். எலுமிச்சைக்கு நீர் தேங்கினால் வேர்கள் அழுகிவிடும். எலுமிச்சைக்கு வளமான வடிகால் வசதி உடைய இரு மண்பாடு நிலமே உகந்தது. 



குளம், ஏரி போன்ற நீர் நிலை அருகில் உள்ள தாழ்வான பகுதியும் ஆகாது. பாறைப்படிவங்கள் மேலாக உள்ள நிலமும் ஏற்றதல்ல. மண் கார அமிலத்தன்மை (பி.எச்) 6.5 முதல் 7.8 வரை இருக்கலாம்.


எலுமிச்சையில் பெரிய குளம் ஒரு வருடம் முழுவதும் காய்க்கும். மரத்துக்கு வருடம் 1500 பழங்கள் வட்டமாக பெரியதாக அதிக சாறு 92 சதம் கொண்டதாக உள்ளது. ஒரு ஏக்கரில் 180 கன்றுகள் நட்டு பராமரித்து 4ம் வருடம் முதல் நல்ல வரவாக 1,70,000 பழங்கள் தவறாமல் கிடைக்கும். 


ஒரு பழம் மூன்றுக்கு 2 தந்தால் கூட சராசரியாக ஆண்டுக்கு 5 இலட்சம் வரவு பெறலாம். 2 ½ அடி ஆழக்குழிகள் 5.5 மீட்டர் இடைவெளியில் எடுத்து 15 நாட்கள் ஆறப்போட்டு மக்கிய மண்புழு உரம் செம்மண் மணல் மற்றும் வேப்பம் பிண்ணாக்கு அசோஸ்பைரில்லம், சூடோமோனாஸ், பாஸ்போ பேக்டீரியா இட்டு நடவு செய்திட குழிகள் எடுத்திட இதுவே தருணம். 


எலுமிச்சையில் விக்ரம், பிரிணாளினி, சாய் சர்பத்தி செலக்ஷ்ன் 49 முதலிய தேர்வு செய்யப்பட்ட இரகங்களும் உள்ளன. விதையில்லா எலுமிச்சை வகையில் தாகித்தி சந்திர கால் என்ற பெயரில் பழங்கள் உள்ளன.



எலுமிச்சையில் வளரும் தருணம், காய்ந்த குச்சிகளை வெட்டி அப்புறப்படுத்துவதும் எல்லா பக்கத்திலும் ஒரே சீராக வளரும்படி செய்து ஆண்டு தோறும் பராமரித்தல் அவசியம். 


கண்டிப்பாக வீட்டுத் தோட்டங்களில் அதிக நீர் தேங்க விடுவதும், சோப்பு நீர் பாய்ச்சுவதும் மகசூல் பெற உதவாது. 30 செ.மீட்டர் ஆழத்திலேயே சல்லி வேர்கள் அதிகம் உள்ளதால் மரத்தின் அடியில் ஆழமாகக் கொத்தக்கூடாது. வரவு தரும் ஊடுபயிர்களாக பயறு வகைகள், காய்கறிகள், நிலக்கடலை முதலியவற்றை முதல் 5 ஆண்டுகள் நடவு செய்யலாம்.



கோடையில் கண்டிப்பாக நீர் தேவை. நிச்சயம் சொட்டு நீர்ப்பாசனம் நல்லது. பாசன நீரிலோ களர், உவர் அல்லது அமிலத்தன்மை இருப்பது ஏற்றதல்ல தெரிந்து கொண்டு பயிர்க்கு உரிய பயிர் பாதுகாப்பும், நுண்ணீர் பாசனம் செய்வதும் நுண்சத்தும் நன்கு இட்டாலே போதும். 


பழ ஈ தடுக்க இனக்கவர்ச்சி பொறி உள்ளது. தண்டு துளைப்பான் தடுப்புக்கு பஞ்சில் மோனாகுரேட்டோபாஸ் தோய்த்து ஓட்டையில் அடைப்பதும் உதவும். மாவுப்பூச்சி தடுக்க மீன் எண்ணெய் காதி சோப் போதும். நூறப்புழு தடுக்க மரத்துக்கு 75 கிராம் கார்போயிரான் குருணை மருந்து தேவை. 


மிக மலிவாக தோட்டக்கலை பண்ணைகளில் தரப்படும். கன்றுகள் உரிய தாய்மர தேர்வால் தரம் மிகுந்ததாக நம்பி வாங்கிடவும், நல்ல காசு பெறவும் இன்றே திட்டமிடுக. மேலும் விபரம் பெற 9842007125 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.



தகவல் வெளியீடு


டாக்டர்.பா.இளங்கோவன், 

வேளாண்மை இணை இயக்குநரின் தகவல்


மேலும் படிக்க....


120 நாட்களில் அறுவடை செய்து அதிக லாபம் பெற அவுரி சாகுபடி! முழு விபரம் உள்ளே!!


விவசாயத்தில் தரமான இடுபொருட்களை உபயோகித்தால் அதிக மகசூல் பெறலாம்!!


இயற்கை விவசாயத்தில் ஊட்டச்சத்து மிகுந்த நஞ்சில்லா இடுபொருள்கள்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments