பண்ணை குட்டை வெட்டி உள்ள விவசாயிகளுக்கு மீன் வளர்ப்பு செய்திட 18,000 ரூபாய் மானியம்!!
மதுக்கூர் வட்டாரம் அத்திவெட்டி பஞ்சாயத்தில் பண்ணை குட்டையில் மீன் வளர்க்க விருப்பம் தெரிவித்திருந்த 15 விவசாயிகளின் கள விபரங்களை மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் ஆய்வு.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட அத்திவெட்டி பஞ்சாயத்தில் சொந்த செலவிலும் ஊரக வளர்ச்சித் துறையின் மூலமும் வேளாண் பொறியியல் துறை மூலமும் பண்ணை குட்டை வெட்டி உள்ள விவசாயிகளில் மீன் வளர்ப்பு செய்திட விருப்பம் தெரிவித்த 15 விவசாயிகளின் விபரங்கள் மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் அவர்களால் களவிபரம் ஆய்வு செய்யப்பட்டது.
அத்திவெட்டி கிழக்கு, அத்திவெட்டி மேற்கு அத்தி வெட்டி மறவக்காடு ஆகிய கிராமங்களில் பண்ணை குட்டை அமைத்துள்ள விவசாயிகளுக்கு தஞ்சை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள பண்ணை குட்டையில் மீன் வளர்ப்பு திட்டத்தில் 50 சத மானியத்தில் மீன் குஞ்சுகள் மற்றும் மீன் தீவனம் ஆனது வழங்கப்பட உள்ளது.
இதற்காக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் வேளாண் இணை இயக்குனர் அவர்களின் அறிவுரைப்படி பண்ணை குட்டை யார் பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது, தற்போது பண்ணை குட்டையில் உள்ள நீரின் அளவு விவசாயிகளின் விருப்ப நிலை போன்றவை மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் மற்றும் துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி ஆகியோரால் தனித்தனியாக கள ஆய்வு செய்யப்பட்டது.
விருப்பம் தெரிவித்து இருந்த விவசாயிகளில் ஒரே குடும்பத்தில் பண்ணை குட்டை அமைத்த விவசாயிகள் மற்றும் பண்ணை குட்டைகளில் நீர் இல்லாதவர்கள் நீங்களாக பிற விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு தஞ்சை மாவட்ட மீன்வள உதவி இயக்குனருக்கு பரிந்துரை செய்து அனுப்பப்பட உள்ளது.
மாவட்ட மீன்வள உதவி இயக்குனர் கள ஆய்வுக்கு பின் கலைஞர் திட்ட விவசாயிகளுக்கு 250 முதல் ஆயிரம் சதுர மீட்டர் பல்நோக்கு பண்ணை குட்டைகளுக்கு மீன் வளர்ப்பினை ஊக்குவிக்க மீன் குஞ்சுகள் மீன் தீவனம் மற்றும் பறவை தடுப்பு வசதிகளிற்கான மொத்த செலவீனம் 36000 ரூபாய் இதில் 18,000 ரூபாய் 50% மானியமாக அனுமதிக்கப்பட உள்ளது.
இதன் மூலம் தென்னந் தோப்புகள் மற்றும் நெல் வயல்களில் நீர் சேமிப்புக்காக மட்டும் உருவாக்கப்பட்ட பண்ணை குட்டைகளில் மீன் வளர்ப்பின் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேலும் உயரும் என்பது திண்ணம் என மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி தெரிவித்தார்.
துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி விவசாயிகளின் அடிப்படை விபரங்களை பதிவு செய்து கொண்டார். அத்திவெட்டி பஞ்சாயத்தை சேர்ந்த குமாரவேல், மாரியம்மாள், வடிவேல், மூர்த்தி, புஷ்பவல்லி, ராதாகிருஷ்ணன், ராதா, பாலசுப்ரமணியன், பழனி, ராஜா, கஸ்தூரி, சிவசங்கர், வைரவ மூர்த்தி மற்றும் போஸ் ஆகிய விவசாயிகளின் பண்ணை குட்டைகள் ஆய்வு செய்யப்பட்டது.
ஆகஸ்ட் முதல் வாரத்திற்குள் படிவங்கள் உரிய ஆவணங்களுடன் தஞ்சை மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் வசம் ஒப்படைக்கப்பட உள்ளதால் விருப்பமுள்ள விவசாயிகள் எவரும் இருப்பின் தங்கள் பகுதி வேளாண் உதவி அலுவலரிடம் விவரம் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் படிக்க....
துல்லியமான பயிர் விளைச்சல் கணக்கீடு நாட்டின் உணவுதானிய உற்பத்தி மற்றும் தேவை பற்றிய பயிற்சி!!
குறுவை தொகுப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு 70% மானியத்தில் ரூ.4000 தவறவிடாதீர்கள்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...