Random Posts

Header Ads

துல்லியமான பயிர் விளைச்சல் கணக்கீடு நாட்டின் உணவுதானிய உற்பத்தி மற்றும் தேவை பற்றிய பயிற்சி!!


துல்லியமான பயிர் விளைச்சல் கணக்கீடு நாட்டின் உணவுதானிய உற்பத்தி மற்றும் தேவை பற்றிய பயிற்சி!!


துல்லியமான பயிர் விளைச்சல் கணக்கீடு நாட்டின் உணவுதானிய உற்பத்தி மற்றும் தேவை பற்றி எடுத்துக் கூறும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அலுவலர்களுக்கான பயிர் அறுவடை பரிசோதனை புத்தாக்க பயிற்சியில் வேளாண் இணை இயக்குனர் ஜஸ்டின் அறிவுறுத்தல்.


பட்டுக்கோட்டை மதுக்கூர் பேராவூரணி மற்றும் சேதுபாவா சத்திரத்தை சேர்ந்த வேளாண் துறை மற்றும் தோட்டக்கலைத்துறை கள அலுவலர்களுக்கு பயிர் அறுவடை பரிசோதனை குறித்த புத்தாக்க பயிற்சி பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் புள்ளியல் துறை அலுவலர்களால் தஞ்சாவூர் வேளாண் இணை இயக்குனர் ஜஸ்டின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.



புள்ளியியல் துறை துணை இயக்குனர் செல்வம் முன்னிலை வகித்தார். புள்ளியியல் துறை உதவி இயக்குனர் பாஸ்கரன் மற்றும் மத்திய அரசின் புள்ளியல் துறை சேர்ந்த அலுவலர் கலந்து கொண்டு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சேர்ந்த அனைத்து கள அலுவலர்களுக்கும், 


உணவு தானிய உற்பத்தி திறனை நிர்ணயிக்கும் பொருட்டு, மேற்கொள்ள வேண்டிய பணிகள், பயிர் காப்பீடு திட்டத்தில் பயிர் அறுவடை பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் கலப்பு பயிர் மற்றும் தனி பயிர்களுக்கான பயிர் அறுவடை மகசூல் கணக்கிடும் முறைகள் மற்றும் பயிர்  அறுவடை பரிசோதனை தளைகளை தேர்வு செய்யும் முறைகள்குறித்து விளக்கிப் பேசினார். 



வேளாண் உதவி இயக்குனர் மாலதி பயிற்சி அளித்த அனைத்து அலுவலர்களுக்கும் நன்றி கூறினார் பயிற்சிக்கான ஏற்பாடுகளை பட்டுக்கோட்டை மதுக்கூர் மற்றும் பேராவூரணி சேதுபாவசத்திரத்தை சேர்ந்த புள்ளியியல் ஆய்வாளர்கள்  செய்திருந்தனர். 


கூட்டத்தில் பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் உட்பட்ட வட்டார வேளாண்மை அலுவலர்கள், துணை வேளாண்மை அலுவலர்கள், உதவி வேளாண்மை அலுவலர்கள், உதவி தோட்டக்கலை அலுவலர்கள், பயிர் பரிசோதனை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



தகவல் வெளியீடு


S.திலகவதி,

வேளாண்மை இணை இயக்குனர், மதுக்கூர்

தஞ்சாவூர் மாவட்டம்.


மேலும் படிக்க....


குழித்தட்டு நாற்றுகள் ஒரு கன்று ஒரு ரூபாய்க்கு விற்பனை தோட்டக்கலைத்துறை அறிவிப்பு!!


விவசாயிகளை ஊக்குவிக்க பயிர் விளைச்சல் போட்டி பதிவுக்கட்டணம் ரூ. 150 பரிசுத்தொகையோ ரூ. 25,000!!


விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை வழங்கும் மானியம் ஒரு ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


Post a Comment

0 Comments