Random Posts

Header Ads

விவசாயிகளை ஊக்குவிக்க பயிர் விளைச்சல் போட்டி பதிவுக்கட்டணம் ரூ. 150 பரிசுத்தொகையோ ரூ. 25,000!!



விவசாயிகளை ஊக்குவிக்க பயிர் விளைச்சல் போட்டி பதிவுக்கட்டணம் ரூ. 150 பரிசுத்தொகையோ ரூ. 25,000!!


விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டி, மணிலா மற்றும் உளுந்து பயிரிடும் போட்டி ஆகியவை  நடத்தப்பட உள்ளது. 


இதில் குத்தகைக்கு சாகுபடி செய்யும் விவசாயிகளும் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் விவசாயிக்கு ரூ.5 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசும், பதக்கமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



திருந்திய நெல் சாகுபடி


இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சுரேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பயிர் விளைச்சல் போட்டியானது நெற்பயிரில் திருந்திய நெல் சாகுபடி முறையில் பயிர் செய்யும் விவசாயிகளுக்கு மாநில அளவில் நடத்தப்படுகிறது.


இந்த போட்டியில் கூடுதல் விளைச்சல் பெறும் விவசாயி ஒருவருக்கு ரூ.5 லட்சம் மற்றும் ரூ.7 ஆயிரம் மதிப்பிலான பதக்கமும் நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறன் விருது என்ற பெயரில் வழங்கப்படுகிறது.


விரும்பும் விவசாயிகள் ரூ.150 கட்டணம்


இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண்மைத்துறை அலுவலர்களை அணுகி நுழைவு கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும். இதுதவிர, தங்களது சாகுபடி நில விவரங்கள் சிட்டா அடங்கல் போன்ற ஆவணங்களை அளித்து பதிவு செய்து கொள்ளவும்.



கூடுதல் மகசூல் பெறும் விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசு


மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் மணிலா மற்றும் உளுந்து பயிரிடும் விவசாயிகளுக்காக நடைபெறவுள்ளது. மணிலா பயிரில் கூடுதல் மகசூல் பெறும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.25 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.15 ஆயிரமும் வழங்கப்படும். 


உளுந்து பயிரில் கூடுதல் மகசூல் பெறும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும். இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண்மைத்துறை அலுவலர்களை அணுகி உரிய ஆவணங்களுடன் ரூ.100 நுழைவுக் கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளவும்.


பதிவு அவசியம்


செங்கல்பட்டு மாவட்ட அளவில் மணிலா பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கான பயிர் விளைச்சல் போட்டியில் கலந்துகெண்டு விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் ரூ.50 நுழைவுக்கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டியது அவசியம்.



மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS 


கூடுதல் மகசூல்


இந்தப் போட்டியில் கூடுதல் மகசூல் பெறும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும். மேற்கண்ட மாநில, மாவட்ட அளவிலான போட்டிகளில் குத்தகைக்கு சாகுபடி செய்யும் விவசாயிகளும் கலந்து கொள்ளலாம். 


கூடுதல் விவரங்களுக்கு தங்கள் பகுதி வேளாண்மைத்துறை அலுவலர்களை அணுகி பயன் பெறுங்கள். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் படிக்க....


விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை வழங்கும் மானியம் ஒரு ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம்!!


குறுவை தொகுப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு 70% மானியத்தில் ரூ.4000 தவறவிடாதீர்கள்!!


PMFBY 2019 முதல் 2021 வரை தமிழ்நாட்டில் ஃபசல் பீமா யோஜனா மோசமாக செயல்படுகிறது!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments