75 சதவீத மானியத்தில் இயந்திர புல் வெட்டும் கருவி விண்ணப்பிக்க அழைப்பு!!
75 சதவீத மானியத்தில் இயந்திர புல் வெட்டும் கருவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே, விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு பலன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 2020-21 ஆம் ஆண்டில் கூடுதலாக இயந்திர புல் வெட்டும் கருவி 75% சதவீத மானியத்தில் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்திற்கு திட்டக்குறியீடாக 30 எண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் தகுதி
இத்திட்டத்தின் கீழ் பலனடைய குறைந்தபட்சம் 2 மாடுகள் மற்றும் 0.25 ஏக்கர் நிலப்பரப்பில் தீவனம் உற்பத்தி செய்ய ஏதுவாக, மின்சார வசதியுடன் கூடிய நிலம் வைத்திருக்க வேண்டும்.
சுய உதவிக்குழு உறுப்பினர்கள் இத்திட்டத்தின் கீழ் குழுவாக பயன் பெற குறைந்தபட்சம் ஒரு மாடு மற்றும் 0.25 ஏக்கர் நிலப்பரப்பில் தீவனம் உற்பத்தி செய்ய ஏதுவாக, மின்சார வசதியுடன் கூடிய நிலம் வைத்திருக்க வேண்டும்.
சுய உதவிக்குழு உறுப்பினர்கள் முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். பயனாளி கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் இதை போன்ற திட்டத்தின் கீழ் ஏற்கெனவே 5 ஆண்டுகளுக்குள் பயனடைந்தவராக இருக்கக்கூடாது.
தேர்வு செய்யப்படும் பயனாளிகளில் ரூ.4919/- (25% ஜிஎஸ்டி சேர்த்து) பங்குத் தொகையைச் செலுத்துவதற்கு தயார் நிலையில் இருக்க வேண்டும். 30 சதவீத பயனாளிகள் ஆதிதிராவிடர், பழங்குடி இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும்.
அரசின் நெறிமுறைகளுக்கு உட்பட்டு, தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு, மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் வழங்கிய பின்னர் திட்டம் செயல்படுத்தப்படும்.
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS
விண்ணப்பிப்பது எப்படி?
இத்திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள கால்நடை வளர்ப்போர் அருகில் உள்ள கால்நடை உதவி மருத்துவரை அணுகி விவரங்களைப் பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க....
பண்ணை அமைக்க ரூ.1.66 லட்சம் மானியம் பயன்பெற தமிழக அரசு அழைப்பு!!
தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!!
நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.12,500 உற்பத்தி மானியம் அறிவிப்பு!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...