விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்தாகும் ஆபத்து? என்ன காரணம்?
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மின் சட்டத்திருத்த மசோதாவால், விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுவரும் இலவச மின்சாரம் ரத்தாகும் ஆபத்து உருவாகியுள்ளது. இதனை தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும் உறுதி செய்துள்ளார்.
மின்சார சட்ட திருத்த மசோதா
தமிழகத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு, அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி, விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்தத் திட்த்தின் மூலம் 114.3 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பயனடைந்து வருகின்றன.
விவசாயிகள் மகிழ்ச்சியாக உள்ளனர். இந்நிலையில், இந்த வாய்ப்பை ரத்து செய்யும் வகையில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள மின்சார சட்ட திருத்த மசோதா, விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.
உறுதி செய்த அமைச்சர்
இதுகுறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:- மத்திய அரசின் கதி சக்தி மசோதா என்ற மின்சார திருத்த மசோதாவால், இலவச மின்சார திட்டத்துக்கு பாதிப்பு ஏற்படும்.
இந்த மசோதா ஏழை, எளிய மக்கள், நெசவாளர்கள் என ஒட்டுமொத்த மக்களையும் பாதிக்கும். அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத வகையில் உருவாக்கப்பட்டு உள்ளதால், அந்த மசோதாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இதனால் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம், ஏழைகளுக்கான 100 யூனிட் இலவச மின்சாரம், விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம், குடிசை வீடுகளுக்கான இலவச மின்சாரம் பெறும் நுகர்வோர்களுக்கு மின்சார திருத்த சட்ட மசோதாவால் பாதிப்புகள் ஏற்படக்கூடிய சூழல் உள்ளது.
100 மடங்கு அபராதம்
மேலும் மத்திய அரசு பிறப்பிக்கும் உத்தரவை மாநில அரசுகள் செயல்படுத்தவில்லை என்றால், அதற்கான அபராத தொகை 100 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. கடும் எதிர்ப்பால் மின்சார திருத்த சட்ட மசோதா நிலைக்குழுவுக்கு அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த மசோதாவால், இலவச மின்சார திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியாத நிலை இந்த மசோதாவில் இருக்கிறது. எனவே அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்.
இந்த மசோதா நாடாளுமன்றம் அல்லது நிலைக்குழுவில் விவாதத்துக்கு வரும்போது தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு குரலை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
மேலும் படிக்க....
75 சதவீத மானியத்தில் இயந்திர புல் வெட்டும் கருவி விண்ணப்பிக்க அழைப்பு!!
பண்ணை அமைக்க ரூ.1.66 லட்சம் மானியம் பயன்பெற தமிழக அரசு அழைப்பு!!
பயிர் காப்பீட்டுக்கு இணையத்தில் பதிவு செய்யாவிட்டால் இழப்பீடு கிடைக்காது!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...