PM Kisan 2019-க்கு பிறகு புதியதாக நில உரிமை பெற்றவர்களுக்கு 5 ஆண்டுகளில் நிதி உதவி வழங்கப்படும்!!
வேளாண்மை உதவி இயக்குநர் அழைப்பு
தற்போது பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான கௌரவ நிதித் திட்டத்தின் கீழ் தங்களது பெயரில் நேரடி நிலமுள்ள சிறு, குறு மற்றும் இதர விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2000/- வீதம் ஆண்டிற்கு ரூ.6000/- பயிர் சாகுபடிக்கு தேவையான இடுபொருட்களை குறித்த நேரத்தில் கொள்முதல் செய்து அதிக விளைச்சல் பெற்று பண்ணை வருவாயை உயர்த்திடும் பொருட்டு வழங்கப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டார விவசாயிகள் பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான கௌரவ நிதித் திட்டத்தில் தொடர்ந்து ஊக்கத்தொகை பெற பிஎம் கிசான் வலைதளத்தில் இ-கே.ஒய்.சி செய்ய வேண்டும் என்று ச.கிருஷ்ணமூர்த்தி, ஆவுடையார்கோவில் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்கள்.
இத்திட்டத்தில் பயன்பெற குடும்ப அட்டை உள்ள ஒரு விவசாய குடும்பம் அலகாக எடுத்துக் கொள்ளப்படும். ஒரு குடும்ப அட்டையில் ஒருவர் மட்டுமே பயன் பெற முடியும்.
மேலும் 1.2.19 அன்று வருவாய் கணக்கு சிட்டாவில் நில உரிமை பெற்றுள்ள நபர்களே இத்திட்டத்தில் பயன் பெற தகுதி உடையவர்கள் ஆவார்கள்.
1.2.19க்கு பிறகு புதியதாக நில உரிமை பெறும் நிலங்களின் உரிமையாளர்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு நிதி உதவி பெற தகுதியற்றவர்கள் ஆவர்.
1.2.19 அன்றைய தேதியில் நில உரிமையாளர் இறந்துவிடும் பட்சத்தில் வாரிசு அடிப்படையில் பட்டா மாறுதல் செய்து கொண்டால் வாரிசுதாரர் இத்திட்டத்தில் பயன்பெற தகுதி உடையவர்கள் ஆவார்கள்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 1,28,995 விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு இதுவரை 11 தவணை ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் ஊக்கத்தொகையானது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கிற்கு விடுவிக்கப்படும்.
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS
எனவே தொடர்ந்து ஊக்கத்தொகையினை பெற்றிட விவசாயிகள் தங்களின் ஆதார் விவரத்தினை சரிபார்த்து இ-கே.ஒய்.சி செய்து பதிவை வருகிற 15.8.22 தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும். இதனை https://pmkisan.gov.in/ என்ற வலைதளத்தில் சென்று ஆதார் எண் மற்றும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி எண்ணை இ-கே.ஒய்.சி யில் உள்ளீடு செய்து ஆதார் விவரத்தினை உறுதி செய்யலாம்.
இவ்வாறு புதுப்பித்தால் மட்டுமே தொடர்ந்து ஊக்கத்தொகை பெறமுடியும். எனவே ஆவுடையார்கோவில் வட்டார விவசாயிகள் இ-கே.ஒய்.சி செய்து பயனடையுமாறு வேளாண்மை உதவி இயக்குநர் ச.கிருஷ்ணமூர்த்தி கேட்டுக்கொண்டார்.
மேலும் படிக்க....
பயிர் காப்பீடு திட்டம் ரூ.2,057 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு!!
ராபி பருவத்திற்கு விவசாயிகள் இந்த வங்கியில் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...