Random Posts

Header Ads

ஒரு ஹெக்டேர்க்கு ரூ.13,400 விவசாயிகள் தாமாகவே முன்வந்து விண்ணப்பித்து பயன்பெறலாம்!!



ஒரு ஹெக்டேர்க்கு ரூ.13,400 விவசாயிகள் தாமாகவே முன்வந்து விண்ணப்பித்து பயன்பெறலாம்!!


1,812 ஹெக்டர் தரிசு நிலங்கள் 


கடந்த இரண்டு ஆண்டுகளில் கடலூர் மாவட்டத் தில், இத்திட்டத்திற்காக அரசு ரூ. 69.65 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 555 ஹெக்டேர் தரிசு நிலங்கள் கண்டறியப்பட்டு, விளைநிலங்களாக மாற்றப்பட்டன. இதன் தொடர்ச்சியாக நடப்பு ஆண்டில் கடலூர் மாவட்டத்திற்கு 1,812 ஹெக்டர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அரசிடமி ருந்து ரூ.2.55 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்படவுள்ளது.



சாகுபடிக்கு உகந்த தரிசு மற்றும்இதர தரிசு நிலங்கள் உள்ள அனைத்து வட்டார விவசாயிகள், தாமாகவே முன்வந்து ‘உழவன் செயலி’ மூலம் பதிவு செய்யலாம் அல்லது விருப்பமுள்ள விவசாயிகள் தகுந்த ஆவணங்களான ஆதார், சிட்டா, அடங்கல் மற்றும்வங்கி கணக்கு நகல் ஆகியவற்றுடன், வேளாண் துறை அலுவலர்களை அணுகி விண்ணப்பித்து பயன்பெறலாம்.


அனைத்து உழவியல் பணிகளுக்கும் மானியம்


பல்வேறு காரணங்களினால் மூன்று ஆண்டுகளுக்கு மேல் நிலத்தை தரிசாக வைத்திருக்கும் விவசாயிகள் இத்திட்டத்தில் பயன்பெறலாம். முன்னுரிமை பதிவேடு அடிப்படையில் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, தகுதியுள்ள விவசாயிகளின் நிலத்தில் உள்ள முட்புதர் மற்றும் சீமகருவேல மரம் அகற்றுதல், நிலத்தை உழுதல், சமப்படுத்துதல் போன்ற அனைத்து உழவியல் பணிகளுக்கும், நேரடியாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் ஆய்விற்கு பிறகு பின்னேற்பு மானியம் வழங்கப்படும்.



பருவத்திற்கு ஏற்றாற்போல் விவசாயிகள் உளுந்து, தானிய வகை அல்லது எண்ணெய் வித்து பயிர்கள் என விருப்பத்திற்கு ஏற்ப பயிரிடலாம். அதற்கான விதை, உயிர்உரம், நுண்ணூட்டக்கலவை, உயிரியல் உரங்கள் போன்ற இடுபொருட்கள் மானிய விலையில் வேளாண் விரிவாக்க மையங்களிலிருந்து வழங்கப்படும்.



மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS


ஒரு ஹெக்டேர் உளுந்து,எள், தானிய வகை பயிர்களுக்கு ரூ.13,400 மானியமாக வழங்கப்படுகிறது. ஒரு விவசாயி அதிகபட்சம் 2 ஹெக்டேர் வரை தரிசு நில மேம்பாட்டு திட்டத்தில் பயன் பெறலாம் எனத் தெரிவித்துள்ளார். அதிகபட்சம் 2 ஹெக்டேர் வரை தரிசு நில மேம்பாட்டு திட்டத்தில் பயன் பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.



மேலும் படிக்க....


பயிர் காப்பீடு 2023 - 24 ஆம் ஆண்டிலிருந்து புதிய மாற்றங்கள் மத்திய அரசு அறிவிப்பு!!


PM Kisan 70 லட்சம் விவசாயிகள் அடுத்த தவணை திட்டத்தில் இருந்து இழக்கப்படலாம்!!


சுய உதவி குழு, விவசாய குழுக்களுக்கு 10.5 லட்சம் ரூபாயை அரசு மானியமாக வழங்குகின்றது!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments