2022-23 ராபி பருவத்தில் பயிர்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு!!



2022-23 ராபி பருவத்தில் பயிர்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு!!


பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.  திருத்தியமைக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2022-23 ராபி பருவத்தில் சம்பா-நெல், மக்காச்சோளம், சிறுதானியங்கள், பயறு வகைகள், பருத்தி, எண்ணெய் வித்து பயிர்கள் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெறலாம் அறிவிக்கப்பட்டுள்ளது.


பயிர் காப்பீடு


பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் (PMFBY) 2016ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் இந்த ஆண்டு (2022-23) முதல் பஜாஜ் அல்லயன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிட் மூலம் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.



அக்டோபர் முதல் காப்பீடு 


ராபி பருவத்தில் (அக்டோபர் முதல்) பயிரிடப்படும் பயிர்களுக்கு விவசாயிகள் அனைவரும் வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ, பொது சேவை மையங்கள் மூலமாகவோ பயிர்களை காப்பீடு செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.


பிரீமியம் தொகை ஏக்கருக்கு


வேளாண் பயிர்களுக்கு பயிர் காப்பீட்டுக் கட்டணம் ஏக்கருக்கு சம்பா-நெல் பயிருக்கு ரூ. 391 எனவும், மக்காச்சோளம் பயிருக்கு ரூ. 289 எனவும், சோளம் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.123 எனவும், கம்பு பயிருக்கு ரூ.145 எனவும், பாசிப்பயறு, உளுந்து, துவரை பயிர்களுக்கு ரூ.209 எனவும், 


பருத்தி பயிருக்கு ரூ.469 எனவும், நிலக்கடலை பயிருக்கு ரூ.303 எனவும், எள் பயிருக்கு ரூ.116 எனவும், சூரியகாந்தி பயிருக்கு ரூ.186 எனவும் கரும்பு பயிருக்கு ரூ.2729 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



தேவையான ஆவணங்கள்


விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் விதைப்பு அறிக்கை, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டணத் தொகையை செலுத்திய பின் அதற்கான ரசீதையும் பொதுச் சேவை மையங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம்.


பதிவு செய்ய கடைசி நாள்


எனவே, விவசாயிகள் கடைசி நேர தாமதத்தை தவிர்த்து உடனடியாக பயிர் காப்பீடு செய்து பயன் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் 2022-23ஆம் ஆண்டின் நடப்பு ராபி பருவத்தில் பயிர் காப்பீடு பெற பதிவு செய்ய கடைசி நாள் உளுந்து மற்றும் பாசிப்பயறு வகைகளுக்கு 15.11.2022 என அறிவிக்கப்பட்டுள்ளது.



இதேபோல், மக்காச்சோளம், கம்பு, துவரை மற்றும் பருத்தி பயிர்களுக்கு 30.11.2022, சம்பா-நெல் மற்றும் சோளம் பயிருக்கு 15.12.2022 கடைசிநாளாகும். நிலக்கடலை மற்றும் சூரியகாந்தி பயிர்களுக்கு 31.12.2022ம் தேதியும், எள் பயிருக்கு 31.01.2023ம் தேதியும், கரும்புக்கு 31.03.2023ம் தேதியும் காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


தோட்டக்கலை பயிர்களுக்கு பயிர் காப்பீடு பதிவு செய்ய கடைசி நாள் கொத்தமல்லி மற்றும் மிளகாய் பயிர்களுக்கு 31.12.2022 எனவும், வெங்காயம் மற்றும் வாழை பயிர்களுக்கு 31.01.2023 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS


ஆட்சியர் அழைப்பு


எனவே, பயிர்களுக்கான காப்பீடை அருகிலுள்ள பொதுச்சேவை மையங்களிலோ (CSC) தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலோ (PACCS) அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ உரிய காப்பீடு கட்டணம் (Premium) செலுத்தி விவசாயிகள் தங்களது பயிர்களை காப்பீடு செய்து பயன் அடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி கேட்டுக் கொண்டுள்ளார்.



மேலும் படிக்க....


2021-22 பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு செய்த விவசாயிகளுக்கு ரூ.481 கோடி இழப்பீடு!!


நெல் முதல் மிளகாய் வரை 30 வகையான பயிர்களுக்கு காப்பீடு!! வேளாண்மைத் துறை அமைச்சர் வேண்டுகோள்!!


PMFBY 2022-23 பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments