பயிர் காப்பீட்டை தீவிரப்படுத்தும் பணிகளை, மாவட்ட கலெக்டர்களிடம் அரசு ஒப்படைத்துள்ளது!!
பயிர் பாதிப்பு ஏற்படும்போது, விவசாயிகள் நஷ்டத்தில் சிக்குகின்றனர். இதற்கு தீர்வு காணும் வகையில், பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தை, மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தி வருகின்றன. நடப்பாண்டில் பயிர் காப்பீட்டிற்கான பங்களிப்பு தொகையாக 2,300 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது.
பயிர் காப்பீடு செய்ய இந்திய வேளாண் காப்பீட்டு கழகம், இப்கோ-டோக்கியோ, பஜாஜ் அலையன்ஸ், ரிலையன்ஸ், எச்.டி.எப்.சி., இர்கோ ஆகிய ஐந்து நிறுவனங்கள் தேர்வாகி உள்ளன. இதனிடையே, பயிர் பாதிப்புக்கு இழப்பீடு பெறுவது, மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் அதிகமாக உள்ளதால், இங்கு பயிர் காப்பீடு திட்டத்தை செயல்படுத்த காப்பீட்டு நிறுவனங்கள் தயங்கின.தமிழக அரசின் தீவிர முயற்சியால், ஐந்து நிறுவனங்கள், பயிர் காப்பீடு பணியை மேற்கொள்ள முன்வந்துள்ளன.
அதேநேரம், 60 சதவீத பயிர்களை காப்பீடு செய்ய வலியுறுத்தியுள்ளன.சம்பா பருவ பயிர்களை காப்பீடு செய்யும் பணிகள் தற்போது துவங்கியுள்ளது. பயிர் கடன் பெற்ற விவசாயிகள், கட்டாயத்தின் அடிப்படையிலும், கடன் பெறாத விவசாயிகள் விருப்பத்தின் அடிப்படையிலும் பயிர் காப்பீடு செய்து வந்தனர்.தற்போது, அனைத்து விவசாயிகளும், விருப்பத்தின் அடிப்படையில் பயிர் காப்பீடு செய்யலாம் என அனுமதி அளித்துள்ளது.
இதனால், பயிர் காப்பீட்டில் விவசாயிகள் ஆர்வமில்லாமல் உள்ளனர். எனவே, பயிர் காப்பீட்டை தீவிரப்படுத்தும் பணிகள், மாவட்ட கலெக்டர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. மாவட்டந்தோறும் இலக்கு நிர்ணயிக்கப் பட்டு, அந்த இலக்கை அடைய நடவடிக்கை எடுக்கவும் கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும் படிக்க....
2021-22 பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு செய்த விவசாயிகளுக்கு ரூ.481 கோடி இழப்பீடு!!
விவசாயிகளுக்கு PM கிசான் திட்டத்தின் அடுத்த தவணைப் பணம் எப்போது?
கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...