கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு!!
5 சவரனுக்கு உட்பட்டு கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் பெற்றவர்கள் உறுதிமொழி பத்திரம் கொடுத்தால் அவர்களுக்கும் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, தற்போது வரை 5,22,514 விவசாயிகளுக்கு ரூ. 3,969 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் சுமார் 14 லட்சம் பேருக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் சுமார் 1 லட்சம் பேர், 5 சவரனுக்கு உட்பட்டு நகைக்கடன் வைத்து தற்போது வரை நகை கடனுக்கான உறுதிமொழி பத்திரம் கொடுக்காததால் அவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்ய முடியாத நிலை உள்ளதாகவும் கூறினார். அவர்கள் உறுதிமொழி பத்திரத்தை சமர்பிக்கும் பட்சத்தில் அவர்களது கடன் தள்ளுபடி செய்யப்படும் என உறுதியளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், சென்னை அண்ணாநகர், திருமங்கலம், திருநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 10 நியாயவிலை கடைகள் மற்றும் கூட்டுறவு மருந்தகங்களில் கூகுள் பே மூலம் பணம் செலுத்தி பொருட்களை பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS
மேலும் வடகிழக்கு பருவ மழை காரணமாக காய்கறி விலை உயர்வு ஏற்பட்டால், பசுமை பண்ணை காய்கறி கடைகளில் குறைந்த விலைக்கு காய்கறிகள் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதியளித்தார்.
மேலும் படிக்க....
நெல் முதல் மிளகாய் வரை 30 வகையான பயிர்களுக்கு காப்பீடு!! வேளாண்மைத் துறை அமைச்சர் வேண்டுகோள்!!
விவசாய பணிகளை மேற்கொள்ள கூட்டுறவு வங்கிகளில் ரூ.3,700 கோடி பயிர் கடன்!!
PMFBY 2022-23 பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...