2022-23 ராபி பருவத்தில் காப்பீடு செய்ய அறிவிப்பு! ஏக்கருக்கு ரூ.29,237 இழப்பீட்டு தொகை!!
சிவகங்கை மாவட்டத்தில் பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நெற் பயிருக்கு நவ., 15 க்குள் காப்பீடு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் 2022-23 ராபி பருவத்தின் நெல், மிளகாய், நிலக்கடலை, வாழை, கரும்பு மற்றும் வெங்காயம் உள்ளிட்ட பயிர்களுக்கு காப்பீடு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்ததாவது: நடப்பு சம்பா பயிர் காப்பீட்டு திட்டத்தை பஜாஜ் அலையன்ஸ் பொதுக்காப்பீட்டு நிறுவனம் அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
நெல் பயிருக்கு ஒரு ஏக்கருக்கு விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரிமியம் தொகை 438 ரூபாய் 57 காசுகள் நெல் பயிருக்கான இழப்பீட்டு தொகை நுாறு சதவீதத்திற்கு 29,237 ஏக்கருக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
காப்பீட்டு தொகை செலுத்த நவ., 15 கடைசிநாளாகும். நிலக்கடலை ஒரு ஏக்கருக்கான பிரிமியம் 340 ரூபாய் 36 காசுகள். மிளகாய் பயிருக்கு 1259 ரூபாய் 46 காசுகள், சின்ன வெங்காயம் பயிருக்கு 1409 ரூபாய்,40காசுகள். வாழை பயிருக்கு 2408 ரூபாய் 98 காசுகள், கரும்பு பயிருக்கு 2728 ரூபாய், 84 காசுகள் விவசாயிகளால் செலுத்தப்படும் பிரிமியம் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நிலக்கடலை மற்றும் மிளகாய் பயிர்களுக்கு டிச., 31,எனவும் வெங்காயத்தில் 2023 ஜன., 31 எனவும், வாழைக்கு 2023 பிப்., 28, கரும்புக்கு 2023 மார்ச் 31 க்குள் காப்பீடு பிரிமியம் தொகையை செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.
நெல் பயிருக்கு அதனத்து வருவாய் கிராமங்களுக்கும் மற்ற பயிர்களுக்கு அதிகளவில் சாகுபடி செய்யும் குறு வட்டங்களுக்கும் காப்பீடு அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
அறிவிப்பு செய்யப்பட்டுள்ள ராபி பருவ பயிர்களை அறிவிப்பு செய்யப்பட்ட பகுதிகளில் சாகுபடி செய்யும் விவசாயிகள் நடப்பு பருவ சாகுபடி அடங்கல், கருத்துரு படிவம், ஆதார் மற்றும் வங்கி கணக்கு புத்தக நகலுடன் அருகாமையில் உள்ள கூட்டுறவு வர்த்தக வங்கிகள், அல்லது பொது சேவை மையங்களில் பிரிமியம் தொகையை செலுத்தி உரிய காலக்கெடுவுக்குள் பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS
கடன் பெறும், பெறாத விவசாயிகளுக்கு ஒரே அளவிலான பிரிமியம் தொகை மற்றும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் தங்கள் விருப்பத்தின் பேரில் பயிரினை காப்பீடு செய்து இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் இழப்பீடுகளை ஈடு செய்து கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க....
பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.26,300 இழப்பீடு!!
பயிர் காப்பீட்டை தீவிரப்படுத்தும் பணிகளை, மாவட்ட கலெக்டர்களிடம் அரசு ஒப்படைத்துள்ளது!!
2021-22 பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு செய்த விவசாயிகளுக்கு ரூ.481 கோடி இழப்பீடு!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...