பலவித நோய்களிலிருந்து பாதுகாக்கும் சூடோமோனாஸ் விவசாயிகள் வாங்கி பயன்படுத்த வேண்டுகோள்!!
பயிர் எதுவானாலும் பலவித நோய்களிலிருந்து பாதுகாக்கும் சூடோமோனாஸ் விவசாயிகள் வாங்கி பயன்படுத்த மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் வேண்டுகோள். தற்போது நிலவும் பருவ கால சூழலில் அதிக வெப்பமும் மழையை தொடர்ந்து ஏற்படும் வெப்பநிலை மாறுபாடுகளும் காற்றின் ஈரப்பதத்தை அதிகரித்து நோய்க்கிருமிகளை ஈர்த்து வளரும் பயிரை தாக்கி மகசூலை குறைக்கின்றது.
அனைத்து பயிர்களிலும் மண்ணின் மூலம் பரவும் நோய்களான வேரழுகல் நோய், வாடல் நோய், நாற்றுஅழுகல் நோய் போன்றவற்றை கட்டுப்படுத்துவதுடன் குலை நோய் இலை உறை கருகல் நோய் இலைப்புள்ளி நோய் மற்றும் ஆந்த்ரக்னோஸ் போன்ற நோய்களின் பாதிப்பையும் குறைக்கிறது. சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் பயிரில் ஏற்படக்கூடிய நோய்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் கட்டுப்படுத்துகிறது.
நோய் எதிர்ப்பு பொருள்களான பயோலூட்ரின் மற்றும் பைரால் நைட்ரின் போன்றவற்றை உற்பத்தி செய்து நேரடியாக நோயை கட்டுப்படுத்துகிறது மறைமுக நோய் எதிர்ப்பு முறையில் நோய் உண்டாக்கும் காரணிகளை தாக்காமல் நோய் எதிர்ப்பு நொதிகளை தாவரத்தில் அதிக அளவில் சுரக்கச் செய்து அதன் மூலம் நோய்க்காரணிகளின் வளர்ச்சி வீதத்தை கட்டுப்படுத்துகிறது.
இந்த பாக்டீரியத்தின் சிறப்பம்சம் பயிர் வளர்ச்சி ஊக்கி ஹார்மோன்களான ஆக்சின், ஜிப்ரலின் ஆகியவற்றை சுரந்து பயிரின் வளர்ச்சியை அதிகரிக்கிறது. நெல்லில் நோய் வருமுன் காக்க கிலோவுக்கு பத்து கிராம் வீதம் சூடோமோனஸ் கலந்து அந்த தண்ணீரில் விதையை ஊற வைத்து பின் பயன்படுத்த வேண்டும். நாற்றங்கால் நிலையில் இருந்தால் நாற்றுகளை அரை மணி நேரம் வரை ஊற வைத்து பின் நட வேண்டும்.
நாற்று நட்ட 30 நாட்களுக்கு பின் 2.5 கிலோ சூடோமோனஸ் கலவையை 50 கிலோ நன்கு மக்கிய சாண எருவுடன் கலந்து இட வேண்டும். நடவு நட்ட 45 நாட்களுக்குப் பின் 0.5 சத சூடோமோனஸ் கரைசலை நோயின் தீவிரத்தை பொறுத்து 10 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்கலாம். மற்ற அனைத்து வித பயிர்களுக்கும் விதைப்பிற்கு முன்பு எக்டருக்கு 2 .5கிலோ சூடோமோனஸ் கலவையை 50 கிலோ மக்கிய சாணம் எருடன் கலந்து நிலத்தில் இட வேண்டும்.
வாழையில் ஏற்படும் வாடல் நோய் மற்றும் அழுகல் நோயை கட்டுப்படுத்த பொதியுரை(கேப்ஸ்யூல்)முறையில் 50 மில்லி கிராம் சூடோமோனஸை கேப்சூலில் இட்டு இன்ஜெக்டர்கள் மூலம் வாழையின் கிழங்கு பகுதிகளில் துளையிட்டு அதில் கேப்ஸ்யூல் வைத்து துளையை களிமண் கொண்டு மூடி விட வேண்டும். இதுபோல் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை செய்ய வேண்டும்.
மாம்பழத்தில் ஏற்படும் பழஅழுகல் நோய் மற்றும் ஆன்த்ரக்னோஸ் நோய்களுக்கு 0.5% சூடோமோனஸ் கலவையை காய் பிடித்த 15 நாட்களில் இருந்து 30 நாட்களுக்கு ஒரு முறை தெளிப்பதன் மூலம் நோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்கலாம்.
சூடோமோனஸ் தெளிக்கும்போது முக்கியமாக கவனிக்க வேண்டியது
ரசாயன பூச்சி மற்றும் பூசணிக்கொல்லி மருந்துகளுடன் கலந்து பயன்படுத்தக்கூடாது. பாதுகாப்பான ஒரு எதிர் உயிரியாக சிக்கனமான முறையில் நோய்களை கட்டுப்படுத்தி பயிரின் வளர்ச்சியை அதிகரித்து அதன் மூலமாக மகசூலையும் அதிகரிக்க செய்கிறது.
இயற்கையாக மண்ணில் உள்ள ஊடகங்களில் பல மடங்காக பெருகி நீண்டகால பாதுகாப்பையும் தருகிறது. வயல் சூழலில் உள்ள இதர நன்மை செய்யும் பூச்சிகளுக்கு மண்ணில் உள்ள மண்புழுக்களுக்கு தீமை விளைவிப்பதில்லை.
எனவே விவசாயிகள் உயிரியல் முறையில் தங்கள் பயிரை பாதுகாத்திட சூடோமோனஸ் ஒரு மிகச் சிறந்த தேர்வு. அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும் விவசாயிகளின் தேவைக்கு இருப்பு வைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
எனவே விவசாயிகள் வாங்கி பயன்பெற மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் கேட்டுக் கொண்டார். தளிக்கோட்டை சந்திரசேகரின் ஏடீடி51 விதை பண்ணை நாற்றங்காலில் பயிர் மேலாண்மை குறித்து வேளாண் உதவி இயக்குனர் மதுக்கூர். திலகவதி எடுத்துக் கூறினார்.
தகவல் வெளியீடு
S.திலகவதி,
வேளாண்மை இணை இயக்குனர், மதுக்கூர்
தஞ்சாவூர் மாவட்டம்
மேலும் படிக்க....
PM Kisan 12-வது தவணைத் தொகை விவசாயிகளுக்கு அக்டோபர் 17 தேதியில் வருகிறது!!
2022-23 ராபி பருவத்தில் காப்பீடு செய்ய அறிவிப்பு! ஏக்கருக்கு ரூ.29,237 இழப்பீட்டு தொகை!!
பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.26,300 இழப்பீடு!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...