தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை? - விவரம் இதோ!!
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
இதனால் இன்று (04.11.2022) ஒருநாள் மட்டும் சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல திருவள்ளூர் மாவட்டத்திலும் மழை காரணமாக 4 தாலுகாவில் மட்டும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆவடி, பூந்தமல்லி, பொன்னேரி, திருவள்ளூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்றும் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியில் இயங்கும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவிடுள்ளார்.
நாகை மாவட்டம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என நாகை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மேலும் படிக்க....
விவசாயிகளுக்கு 10 HP சோலார் பம்ப்செட் 90% மானியம் வேளாண் துறை அசத்தல்!!
விவசாயிகள் நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம்! வேளாண்துறை அறிவிப்பு!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...