பணி ஓய்வு பெற்ற கூடுதல் வேளாண்மை இயக்குனர்! இல்லம் தேடி சென்று வாழ்த்திய தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை பட்டதாரிகள் சங்கம்!! 


வேளாண்மை துறையில் சுமார் 37 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற அக்ரி. சிவக்குமார் அவர்களை தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை பட்டதாரிகள் சங்கம் சார்பாக பட்டுக்கோட்டையில் அவர் இல்லம் தேடி சென்று வாழ்த்தி தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர்.


நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகிலுள்ள  புஷ்பவனம் கிராமத்தில் பிறந்து, வேளாண்மை பட்டதாரியான சிவக்குமார் அவர்கள், தனது இளங்கலை வேளாண்மை பட்டப்படிப்பினை முடித்தவுடன் தமிழக அரசின் வேளாண்மை துறையில் வேளாண்மை அலுவலராக பணியில் சேர்ந்து பல்வேறு பதவிகளில் 37 ஆண்டுகள் விவசாயிகளின் உற்ற தோழனாய் சிறப்பாக பணியாற்றியவர். 



சென்னை வேளாண்மை இயக்குனரக தலைமை அலுவலகத்தில், கூடுதல் வேளாண்மை இயக்குனர் ஆக பதவி உயர்வில் சென்று பணியாற்றி வந்த நிலையில், கடந்த 31.10.22 அன்றுடன் பணிமூப்பு அடிப்படையில் பணி ஒய்வு பெற்றார். 


கடந்த 31.10.22 அன்று சென்னையில் அவரது பணி ஓய்வு பிரிவு உபசார நிகழ்வு முடிந்த நிலையில், ஓய்வு பெற்ற அக்ரி.சிவக்குமார் அவர்களை  கௌரவிக்கும் விதமாக, இன்று (07.11.22) தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை பட்டதாரிகள் சங்க தலைவர் ஜெய்ஜிபால் தலைமையில், மாவட்ட செயலாளர் செல்வராஜ், மாவட்ட பொருளாளர் சங்கீதா மற்றும் தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை பட்டதாரிகள் சங்க உறுப்பினர்கள் ராணி, சாந்தி, பாலையன், முருகேசன், நவீன்சேவியர், சுதா, அப்சரா, வினோதினி மற்றும் அலுவலர்கள் பட்டுக்கோட்டை அவர்கள் இல்லம் சென்று தங்கள் வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர். 



வேளாண்மை பட்டதாரியான அவர்களது மனைவி மாலதி அவர்கள், வேளாண்மை துறையில் தற்போது பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குனர் ஆக பணியாற்றி வருகிறார். வேளாண்மை உதவி இயக்குனர் அலுலவகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் ஓய்வு பெற்ற கூடுதல் வேளாண்மை இயக்குனர் அவர்ளுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.



மேலும் படிக்க....


ஒரு ஏக்கருக்கு ரூபாய் 539 வீதம் பிரிமியம் பயிர்காப்பீட்டு பணியை விவசாயிகள் விரைந்து முடிக்க வேண்டுகோள்!!


விவசாயிகளுக்கு மானியத்தில் ரொட்டவேட்டர் கருவி வேளாண் உதவி இயக்குனர் அறிவிப்பு!!


விவசாயிகள் யூரியாவிற்கு மாற்றாக நானோ யூரியா பயன்படுத்த ஆலோசனை!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post