விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நானோ யூரியா தெளித்த செயல்விளக்க வயலில் ஆய்வு!!


விவசாயிகள் தங்கள் நெல் வயில்களில் அதிக பச்சை பிடிக்க வேண்டும் என்பதற்காக ஏக்கருக்கு 22.5 கிலோயூரியா போடும் இடத்தில் ஒரு மூட்டை யூரியாவை பயன்படுத்துகின்றனர். இதனால் பயிரானது உடனடியாக பச்சை பிடித்து அதிக தழைகளை உண்டாக்கும். இதன் மூலம் அதிக பூச்சிகளையும் வருவிக்கிறது. 


அடுத்து பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தி இன்னும் அதிக செலவு ஏற்படுத்திக் கொள்கின்றனர். மேலும் யூரியாவானது விரைவில் ஆவியாகும் தன்மை உடையது நீர் உள்ள வயல்களில் போட்டவுடன் 45 சதவீதத்திற்கும் மேல் நீரில் கரைதல் ஆவியால் மற்றும் நிலத்தடி நீருடன் கலந்து வீணாகிறது நிலமும் நீரும் மாசடைகிறது.  அதிகப்படியான உரச் செலவும் ஏற்படுகிறது. ஆனால் நானோ யூரியா 4 சத தழைச்சத்து செறிவு உடையது. 



ஒரு ஏக்கருக்கு அரை லிட்டர் போதுமானது. விவசாயிகள்  மேலுரமாக யூரியா இடுவதை தவிர்த்து அதற்கு பதிலாக நானோ யூரியா வினை பயன்படுத்தலாம். ஏக்கருக்கு அரை லிட்டர் நானோ யூரியா போதுமானது. இதனை 20 லிட்டர் நீரில் கலந்து கைத்தளிப்பானில் ஒரு டேங்கிற்கு ஒரு லிட்டர் நானோ யூரியாகரைசல் மீதம் ஒன்பது லிட்டர் தண்ணீர் கலந்து கைத்தெளிப்பான் மூலம் இலைகள் நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும். 


மாலை வேளையில் தெளிக்கலாம் மழைப்பொழிவு உள்ள நேரங்களில் நானோ யூரியா தெளிப்பதை தவிர்க்கலாம். நானோ யூரியா தெளித்த வயல்களில் ஏக்கருக்கு 300 முதல் 500 கிலோ நெல் கூடுதலாக மகசூல் கிடைக்கிறது. இதன் மூலம் விவசாயிக்கு ஏக்கருக்கு 8000 வரை கூடுதல் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது, இதனை கருத்தில் கொண்டு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அனைத்து வட்டாரங்களிலும் வட்டாரத்திற்கு 20 நானோ யூரியா தெளிப்பு செயல் விளக்க தளைகள் அமைத்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தினார். 



அதன் அடிப்படையில் வேளாண் இணை இயக்குனர் தஞ்சாவூர் ஜஸ்டின் அவர்கள் இப்கோ நிறுவனத்தின் மூலம் இரண்டு மேலுரங்களுக்கு பதிலாக நானோ யூரியா பயன்படுத்தும் வகையில் ஒவ்வொரு செயல் விளக்க தளைக்கும் இரண்டு அரை லிட்டர் நேனோ யூரியா பெற்று வழங்கினார். அதன் அடிப்படையில் மதுக்கூர் வட்டாரத்தில் மதுக்கூர் வடக்கு கிராமத்தில் விவசாயி ராமமூர்த்தி அவர்களின் வயலில் நானோ யூரியா செயல் விளக்க தளை அமைக்கப்பட்டது. 


விவசாயி தற்போது என் எல் ஆர் 34449 என்ற சன்ன ரகத்தில் இரண்டாம் மேலுரமாக நானோ யூரியாவினை மட்டும் தெளித்துள்ளார். மாவட்ட ஆட்சியரிடம் இது பற்றி விவசாயி கூறுகையில் யூரியா உரத்தினை மேலுரமாக இடும்போது  நெல் பயிர் உடனடியாக பச்சை பிடித்து அதிக பூச்சிகளை ஈர்க்கிறது மேலும் விரைவில் தன் பச்சையையும் இழந்து விடுகிறது. 



ஆனால் நானோ யூரியா தெளித்த வயலில் அடுத்த 15 நாட்களுக்கு பசுமை மாறாமல் இருப்பதோடு யூரியா வீணாவதும் தடுக்கப்பட்டுள்ளது மண்ணும் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுகிறது என தெரிவித்தார்.  .அத்துடன் மேல் உரமாக இடக்கூடிய, 50 சதவீதம் சாதாரண யூரியாவை தவிர்க்க முடியும். இவ்வாறு அவர் கூறினார். 


ஆய்வின்போது வேளாண் துணை இயக்குனர் பால சரஸ்வதி மற்றும் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி துணை வேளாண்மை அலுவலர் அன்புமணிஉடன் இருந்தனர். வேளாண் உதவி அலுவலர்கள் பூமிநாதன் மற்றும் தினேஷ் ஆகியோர் ஆய்வுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.



தகவல் வெளியீடு


S.திலகவதி,

வேளாண்மை இணை இயக்குனர், மதுக்கூர்

தஞ்சாவூர் மாவட்டம்.


மேலும் படிக்க....


PMFBY இழப்பீடு சரியாக கிடைக்க இதனை விரைவாக செய்யுங்கள்! காப்பீடு செய்யும் முன் இதனை கவனிக்க வேண்டுகோள்!!


விவசாயிகளுக்கு மானியத்தில் ரொட்டவேட்டர் கருவி வேளாண் உதவி இயக்குனர் அறிவிப்பு!!


விவசாயிகள் யூரியாவிற்கு மாற்றாக நானோ யூரியா பயன்படுத்த ஆலோசனை!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post