சம்பா சாகுபடி செய்யும் நெல் விவசாயிகளுக்கு 50% மானியத்தில் ஒரு ஏக்கருக்கு 1.2 கிலோ உளுந்து விதை!!


மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மதுக்கூர் வட்டார விவசாயிக்கு மாவட்ட ஆட்சியர் வரப்பில் உளுந்து சாகுபடியின் கீழ் 50% மானியத்தில் விதைகள் வழங்கினார்.


தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் தஞ்சை மாவட்டம் மதுக்கூர் வட்டாரத்தில் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் சம்பா நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அனைவரும் வரப்பில் உளுந்து சாகுபடி செய்து அதன் மூலம் தீமை செய்யும் பூச்சிகளை விரட்டிடவும் பூக்கும் தருணத்தில் உருவாகும் அதிக மஞ்சள் பூக்களால் அதிக அளவில் பொரி வண்டுகள் ஈர்க்கப்பட்டு அவை தீமை செய்யும் பூச்சிகளை அதிக அளவில் உண்டு பூச்சி மருந்து அடிக்காமல் இயற்கையான முறையில் கட்டுப்படுத்துகின்றன. 



இதனை கருத்தில் கொண்டு சம்பா சாகுபடி செய்யும் நெல் விவசாயிகளுக்கு 50% மானியத்தில் ஒரு ஏக்கருக்கு 1.2 கிலோ உளுந்து விதை ரூபாய் 60 மானியத்தில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.


அனைத்து விவசாயிகளும் நவம்பர் 15க்குள் வரப்பில் உளுந்து சாகுபடி செய்வதன் மூலம் இயற்கையான பூச்சி முறை கட்டுப்பாடுகளை கையாளலாம் இதனால் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் செலவும் குறைகிறது. அடிப்படையில் மதுக்கூர் வேளாண் உதவி அலுவலர் பூமிநாதன் மூலம் தேர்வு செய்யப்பட்ட விவசாயி சுந்தரமூர்த்தி அவர்களின் வயலில் நெல் நடவு செய்துள்ள வரப்புகளில் உளுந்து விதைப்புசெய்யும் பொருட்டு மாவட்ட ஆட்சியர் மூலம் விவசாயிக்கு நேரடியாக வழங்கப்பட்டு இன்றைய தினம் வரப்பில் உளுந்தும் விவசாய மூலம் விதைக்கப்பட்டது. 



மாவட்ட ஆட்சியர் அனைத்து விவசாயிகளும் இவ்வாறு வரப்பில் உளுந்து சாகுபடி செய்து இயற்கையான முறையில் பூச்சிகளை கட்டுப்படுத்திடவும் உபரி வருமானம் பெறவும் விவசாயிகளை கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வின் போது வேளாண் துணை இயக்குனர் பால சரஸ்வதி வேளாண் உதவி இயக்குனர் திலகவதி துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி ஆகியோர் உடன் இருந்தனர்.


தகவல் வெளியீடு


S.திலகவதி,

வேளாண்மை இணை இயக்குனர், மதுக்கூர்

தஞ்சாவூர் மாவட்டம்.



மேலும் படிக்க....


வேளாண் இயந்திரங்கள், கருவிகளை 50% மானியத்தில் பெற இன்றே விண்ணப்பிக்கவும்!!


விவசாயிகளுக்கு 10 HP சோலார் பம்ப்செட் 90% மானியம் வேளாண் துறை அசத்தல்!


கடப்பாரை, இரும்புச்சட்டி, களைக்கொத்து வேளாண் கருவிகள் வாங்க மானியம்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post