ஆண்டிற்கு 8 சிலிண்டர்களுக்கு மானியம் வெளியானது முக்கிய அறிவிப்பு!
இந்தியாவில் பொதுமக்களுக்கு ஒரு ஆண்டுக்கு 8 எல்பிஜி சிலிண்டர்கள் வரைக்கும் மானியம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சகத்தின் எரிவாயு மாற்ற குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலிண்டர்களுக்கு மானியம்
இந்தியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதம மந்திரி உஜ்வாலா திட்டம் பிரதமர் மோடி அவர்களால் துவங்கப்பட்டது. அதாவது, இந்த திட்டத்தின் மூலமாக இந்தியாவில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு கிட்டத்தட்ட 50 மில்லியன் எல்பிஜி இணைப்புகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா காலத்திற்கு முன்பு வரை பொதுமக்களுக்கு ஆண்டுதோறும் 12 சிலிண்டர்களுக்கு மானியம் வழங்கப்பட்டது. இதனிடையே எல்பிஜி சிலிண்டரின் விலை அதிகரித்துள்ளதால் தற்போது 8 எல்பிஜி சிலிண்டர்களுக்கு மானியம் வழங்குவது குறித்தான தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, பொது மக்களுக்கு வழங்கப்படும் சிலிண்டர்களின் எண்ணிக்கையை குறைப்பதால் அரசு வழங்கும் மானியத் தொகையில் 13 முதல் 15 சதவீதம் வரைக்கும் குறைய வாய்ப்புள்ளது.
இந்நிலையில், ஆண்டுதோறும் இந்தியாவில் உள்ள குடும்பங்களுக்கு ஏழு முதல் எட்டு சிலிண்டர்களுக்கு மானியம் வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தில் எரிசக்தி மாற்ற குழுவின் அறிக்கையில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்களுக்கு சிலிண்டருக்கான மானியம் வழங்குவது குறித்தான அறிவிப்பை கூடிய விரைவில் அரசாங்கம் வெளியிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க....
சர்க்கரை ஆலையில் கொதி கலன் பழுதானதால் அரவை பணிகள் நிறுத்தம் விவசாயிகள் வேதனை!!
கோடை உழவு செய்வதால் மண்ணின் ஈரப்பதம் அதிகரிக்கும் வேளாண் அதிகாரி தகவல்!!
தொடரும் கோடை மழை அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் வீணானதால் நிவாரணம் வழங்க கோரிக்கை!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...