சம்பா சாகுபடி முன் பயிரில் குருத்து பூச்சியின் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?


வேளாண் உதவி இயக்குனர்  தகவல்


தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் வட்டாரத்தில் நடைபாண்டில் சம்பா பருவத்தில் இதுவரை 1500  எக்டர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டு வளர்ச்சி பருவத்தில் உள்ளது இந்த பருவத்தில் பூச்சி நோய் தாக்குதல் ஏற்பட்ட உடனே கண்காணித்து உடனடியாக பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் அவசியமாகும்.


தற்போது மதுக்கூர் வட்டாரத்தில் சாவித்திரி சப் ஒன் மற்றும் ஏடீடி51 சாகுபடி செய்துள்ள நெல் வயல்களில் தற்போது குருத்துப் பூச்சியின் தாக்குதல் வளர்ச்சி பருவத்தில் தென்படுகிறது.


பாதிக்கப்பட்ட பயிர்களில் இலையின் நுனியில் பழுப்பு நிற முட்டை கூட்டம் காணப்படும் முட்டையில் இருந்து வெளிவரும் புழுக்கள் வாயிலிருந்து வரும் இழைகள் மூலம் நேரடியாக குருத்துப் பகுதிக்குள் நுழைந்து தண்டில் வளரும் குருத்தை உட்கொள்வதால் குருத்து காய்ந்து விடும் எனவே. சரியான நேரத்தில் இதனை கட்டுப்படுத்தாவிட்டால் அதிக வெண்கதிர்களை உருவாக்கும் குருத்தை பிடித்து இழுக்கும்போது கையோடு வந்துவிடும்.


மஞ்சள் நிற அந்து பூச்சிகள் வயலில் காணப்படும். இலைகளின் நுனியை கிள்ளி விடுவதால் குருத்து பூச்சிகளின் முட்டை குவியல் அழிக்கப்படுகிறது. வேப்பங்கொட்டை சாறு தெளிப்பதன் மூலம் குருத்துப் பூச்சியினை கட்டுப்படுத்தலாம்.


அசாடிராட்டின் 0.03% சத மருந்தினை இரண்டரை ஏக்கருக்கு ஒரு லிட்டர் வீதம் தெளித்து கட்டுப்படுத்தலாம். பூச்சியின் தாக்குதல் அதிகம் இருக்கும் பட்சத்தில் உடனடியாக குளோரோ டிரோனிலிபுருள்18.5எஸ்சி எக்டர்க்கு 50 மில்லி அல்லது ப்ளூ பென்டமைடு 20% குருணை எட்டருக்கு 125 கிராம் ஆகிய ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லு மருந்தை தெளித்து குருத்து பூச்சியினை கட்டுப்படுத்தலாம்.


ஏக்கருக்கு தேவையான மருந்தினை 20 லிட்டர் நீரில் கலந்து கொண்டு ஒரு லிட்டர் மருந்து கரைசலை 9 லிட்டர் நீருடன் கலந்து மாவுக்கு ஏழு டேங்க் ஏக்கருக்கு 21 டேங்க் மிகாமல் அடிக்க வேண்டும். தற்போது புதிய தலைமுறை பூச்சிக்கொல்லி மருந்துகள் நீண்ட கால கட்டுப்பாட்டுடன் பயிர் மேம்பாட்டு நன்மைகளுடன் கிடைக்கிறது. 


சயன்ட்ரோனிலிப்ரோல் 16.9% லுபெனுரான் 16.9 எஸ்சி கடந்த பூச்சிக்கொல்லி மருந்து மினிக்டோ எக்ஸ்ட்ரா என்ற பெயரில் தற்போது பயன்பாட்டில் உள்ளது இது நெற்பயிரை நீண்ட காலம் பாதுகாத்து சேதத்தை உடனடியாக நிறுத்துகிறது. குருத்துப் பூச்சியின் முட்டை முதல் அனைத்து வளர்ச்சி பருவத்தையும் வலுவாக கட்டுப்படுத்துகிறது. 


மழை பொழிந்தாலும் நீண்ட நாட்களுக்கு பயிரை பாதுகாக்க கூடிய தன்மை உடையது. இந்த மருந்தினை ஏக்கருக்கு 20 மில்லி 30 முதல் 45 நாள் வயதுடைய நெல்லின் வளர்ச்சி பருவத்தில் ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து உடனடியாக கட்டுப்படுத்தலாம். இவ்வாறு திலகவதி  வேளாண் உதவி இயக்குனர் மதுக்கூர் தெரிவித்துள்ளார்.


தகவல் வெளியீடு

S.திலகவதி,

வேளாண்மை உதவி இயக்குனர், மதுக்கூர்

தஞ்சாவூர் மாவட்டம்.


மேலும் படிக்க....


விஷமுள்ள நிலத்தையும் வசமாக்கும் தொழில்நுட்பத்திற்கான இடுபொருள் உற்பத்தி பயிற்சி!!


கிரிஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் அத்திவெட்டி தென்னை இயற்கை விவசாயிகள் குழுக்களுக்கு பயிற்சி!!


விவசாயிகளுக்கான பயிர் அறுவடை பரிசோதனை குறித்த புத்தாக்க பயிற்சி!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post