PMFBY 2023 ஆண்டிற்கான சம்பா பயிர் காப்பீடு நவம்பர் 22 வரை அவகாசம் நீட்டிப்பு!!


சம்பா நெல்பயிரை காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நவம்பர் 22 ஆம் தேதி வரை நீட்டித்து மாண்புமிகு தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.


இதுகுறித்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் வேளாண் இணை இயக்குனர் தஞ்சாவூர் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின்படி முதல்வர் வடகிழக்கு பருவமழையினை தொடர்ந்து காலடி சாகுபடி மேற்கொண்டுள்ள விவசாயிகளின் கோரிக்கையின் அடிப்படையில் பயிர் காப்பீட்டுக்கான கடைசி தேதியை நவம்பர் 22 வரை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதினார். 




இயற்கை இடர்பாடுகள் ஏற்படக்கூடிய காலங்களில் காப்பீடு செய்திட வழிவகை இல்லாத போதும் விடுபட்ட விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழ்நாடு முதல்வர் விடுத்த கோரிக்கையை ஏற்று ஒன்றிய அரசு சம்பா தாளடி நெல் பயிர் காப்பீட்டுக்கான கடைசி தேதியை நவம்பர் 22 வரை நீட்டிக்க ஒப்புதல் வழங்கி உள்ளது. 


எனவே நமது வட்டார விவசாயிகள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி பயிர் காப்பீட்டு பணியினை உடனடியாக மேற்கொண்டு பயன்பெற மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் கேட்டுக்கொண்டார். 


மேலும் ஒரே கிராமத்தில் கடந்த மூன்று வருடங்களில் தொடர் சாகுபடியில் இருந்து இந்த வருடம் 75 சதவீதத்துக்கு அதிகமான பரப்பு விதைப்பு அல்லது நடவு தோல்வி ஆகும் பட்சத்தில் அந்த கிராமம் முழுமைக்கும் 25 சதவீத காப்பீட்டு தொகையை முன்கூட்டியே பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. 




எனவே அனைத்து விவசாயிகளும் அரசின் வழிகாட்டுதல்படி உடனடியாக உங்கள் பயிரினை காப்பீடு செய்து பயன்பெற வேளாண் உதவி இயக்குனர் மதிப்பு கேட்டுக் கொண்டார். காப்பீடு குறித்து ஏதேனும் சந்தேகம் இருப்பின் தங்கள் பகுதி வேளாண் உதவி அலுவலர்களை அணுகிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தகவல் வெளியீடு

S.திலகவதி,

வேளாண்மை உதவி இயக்குனர், மதுக்கூர்

தஞ்சாவூர் மாவட்டம்.


மேலும் படிக்க....


விஷமுள்ள நிலத்தையும் வசமாக்கும் தொழில்நுட்பத்திற்கான இடுபொருள் உற்பத்தி பயிற்சி!!


கிரிஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் அத்திவெட்டி தென்னை இயற்கை விவசாயிகள் குழுக்களுக்கு பயிற்சி!!


விவசாயிகளுக்கான பயிர் அறுவடை பரிசோதனை குறித்த புத்தாக்க பயிற்சி!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post