கோடை பெருமழை பாதிப்பிலிருந்து பயிர்களை தற்காத்துக் கொள்ள வேளாண்மை இணை இயக்குனர் வேண்டுகோள்!!
கோடை பெருமழை பாதிப்பிலிருந்து பயிர்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் வேளாண்மை இணை இயக்குனர் வேண்டுகோள் எதிர்வரும் பத்து தினங்களில் வரலாறு காணாத அளவில் பெரும் கோடை மழை பெய்ய உள்ளதாக வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் பெறப்பட்ட வண்ணம் உள்ளன.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் 12000 ஏக்கர் பரப்பில் அறுவடை நிலை கோடை நெற்பயிரும், 40,000 ஏக்கர் முன்குறுவை இளம் நடவு நெற்பயிரும், 10000 ஏக்கர் அறுவடை நிலை உளுந்து பயிரும், 5000 ஏக்கர் வளர்ச்சி பருவத்தில் உள்ள எள்ளு பயிரும், 600 ஏக்கர் வளர்ச்சி நிலை நிலக்கடலை பயிரும், 2000 ஏக்கர் வாழையும், 3000 ஏக்கர் பல வகையான காய்கறி கீரை வகைகள், வெள்ளரி, தர்பூசணி உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டு வயல்களில் உள்ளன. இவ்வாறு இயற்கை இடர்கள் நேரிடும் பொழுது வயல்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் நேரிடையான முதல் நிலை பாதிப்பிற்கு ஆளாகின்றன.
நெற்பயிரைத் தவிர ஏனைய அனைத்து பயிர்களும் கடும் மழைப்பொழிவையும் மழைநீர் வயல்களில் தேங்குவதையும் தாங்க இயலாதவை. எனவே மாற்றுப் பயிர்களான எள்ளு, உளுந்து, நிலக்கடலை, காய்கறிகள், கீரை வகைகள், வெள்ளரி தர்ப்பூசணி ஆகியவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்கள் வயல்களில் அவசரகதியில் வடிகால் வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
தகவல் வெளியீடு
S.திலகவதி,
வேளாண்மை உதவி இயக்குனர், மதுக்கூர்
தஞ்சாவூர் மாவட்டம்.
மேலும் படிக்க....
விதை முதல் அறுவடை வரை தேவையான அனைத்து இடுபொருட்களும் 50 சத மானியத்துடன் முன்னுரிமை!!
பயிர்களில் ஏற்படும் நோய் தாக்கங்கள் பற்றிய வேளாண் கண்காட்சி !!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...