ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் என்ற புதிய திட்டம்!!


முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம். புதிய திட்டம் ரூபாய் பத்து லட்சம் மதிப்பீட்டில் பட்டுக்கோட்டை வட்டாரத்தில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை துவக்கி வைத்தார்.

முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் என்ற புதிய திட்டம் ரூபாய் பத்து லட்சம் நிதி ஒதுக்கீட்டில் பட்டுக்கோட்டை வட்டாரத்தில் இன்று பட்டுக்கோட்டை வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் நடைபெற்றது.


மண் வளத்தை பேணி காக்கவும் மக்கள் நலம் காக்கும் விதமான உயிர் வேளாண்மை போன்ற அனைத்து வேளாண் செய்முறைகளையும் ஊக்கப்படுத்தவும் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் என்ற புதிய திட்டம் ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் பட்டுக்கோட்டை வட்டாரத்தில் செயல்படுத்தப்படும்.


ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைத்து மண்ணின் வளம் காக்க ரூபாய் ஏழு லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பட்டுக்கோட்டை வட்டாரத்தில் 725 ஏக்கரில் ஏக்கருக்கு 20 கிலோ விதம் தக்கை பூண்டு விதைகள் 50% மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.


மேலும் வேம்பினை பரவலாக்கம் செய்யும் வகையில் ரூபாய் 44,000 மற்றும் நொச்சிக்குச்சிகளை பூச்சி நோய் தடுப்புக்காக பயன்படுத்தும் வகையில் ரூபாய் 44,000 மண்புழு உர உற்பத்தினை அதிகரிக்கும் வகையில் விவசாயிகளுக்கு மண்புழு உர படுக்கைகள் வழங்கிட ரூபாய் 44,000 வட்டார அளவில் இயற்கை இடுபொருள் தயாரிப்பு மையம் அமைத்திட ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு ரூபாய் ஒரு லட்சம் மானியம் மானாவாரி நிலங்களில் உளுந்து கடலை சிறுதானியம் போன்றவைகளை கொண்டு வருவதற்காக உழவு மானியமாக ரூபாய் ஒரு லட்சம் மற்றும் இயற்கை உர செயல் விளக்கதிடல் வட்டார அளவில் ரூபாய் பத்தாயிரம் மானியத்தில் ஆர்வமுள்ள இயற்கை விவசாயிகளுக்கு வழங்கிடவும் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.





மேலும் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் இந்த வருடம் 8 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட உள்ளது கிராமங்களில் மறுமலர்ச்சி ஏற்படுத்திட ஒரு கிராமம் ஒரு பயிர் என்ற புதிய திட்டம் அனைத்து வருவாய் கிராமங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது.


போன்றவைகள் பற்றி வேளாண் உதவி இயக்குனர் பட்டுக்கோட்டை பொறுப்பு திலகவதி விளக்கிக் கூறினார். விதைஆய்வுஅலுவலர் நவீன் சேவியர் 50% மானியத்தில் உயிர் உள்ளங்கள் வழங்கப்படுவதின் முக்கியத்துவம் பற்றி எடுத்து கூறினார். வேளாண் அலுவலர் சன்மதி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு பயிர் சாகுபடி குறித்த தொழில்நுட்பபிரசுரங்களை வழங்கினார்.


பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் துவக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 22 முன்னோடி விவசாயிகளுக்கு 420 கிலோ தக்கை பூண்டு விதைகளை 50% மானியத்தில் வழங்கி தலைமை உரையாற்றினார்.


மேலும் திட்டத்தின் மூலம் அனைத்து விவசாயிகளும் பசுந்தாளுர விதைகளை பயன்படுத்தி மண்வளம் கூட்டவும் கேட்டுக் கொண்டார். வேளாண் உதவி அலுவலர்கள் ரமணி சித்ரா ஜெயபாரதி ராஜ்குமார் சரவணன் மற்றும் பாண்டியன் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தனர்.


ஆத்மா திட்ட அலுவலர்கள் கருத்துக்காட்சியினை ஏற்பாடு செய்திருந்தனர். வருகை புரிந்த அனைத்து விவசாயிகளுக்கும் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி நன்றி கூறினார்.

தகவல் வெளியீடு

S.திலகவதி,

வேளாண்மை உதவி இயக்குனர், மதுக்கூர்

தஞ்சாவூர் மாவட்டம்.


மேலும் படிக்க....



விவசாயிகளே இனி கவலை வேண்டாம்! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி பூச்சிகளையும் பிடிக்கும் பூச்சிகளையும் கண்காணிக்கும்!!


விதை முதல் அறுவடை வரை தேவையான அனைத்து இடுபொருட்களும் 50 சத மானியத்துடன் முன்னுரிமை!!


பயிர்களில் ஏற்படும் நோய் தாக்கங்கள் பற்றிய வேளாண் கண்காட்சி !!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post