50% மானியத்தில் விவசாயயிகள் பயன் பெறும் வகையில் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் புதிய திட்டம்!!


முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்.. புதிய திட்டம் ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் 1 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி துவக்கி வைத்தார்.

முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் என்ற புதிய திட்டம் ரூபாய் 3 கோடி நிதி ஒதுக்கீட்டில் ஒரு லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 22 இனங்களில் தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று சந்தனஆரோக்கிய மஹாலில் தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது.



மண் வளத்தை பேணி காக்கவும் மக்கள் நலம் காக்கும் விதமான உயிர்ம வேளாண்மை போன்ற அனைத்து வேளாண் செய்முறைகளையும் ஊக்கப்படுத்தவும் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் என்ற புதிய திட்டம் ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் தஞ்சை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும்.


ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைத்து மண்ணின் வளம் காக்க ரூபாய் 175 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்தில் 14500 ஏக்கரில் ஏக்கருக்கு 20 கிலோ விதம் தக்கை பூண்டு விதைகள் 50% மானியத்தில் 15000 விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.




மேலும் வேம்பினை பரவலாக்கம் செய்தல் , நொச்சிக்குச்சிகளை பூச்சி நோய் தடுப்புக்காக பயன்படுத்துதல், மண்புழு உர உற்பத்தியினை அதிகரிக்கும் வகையில் விவசாயிகளுக்கு மண்புழு உர படுக்கைகள் வழங்குதல் ,இயற்கை இடுபொருள் தயாரிப்பு மையம் அமைத்திட ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு ரூபாய் ஒரு லட்சம் மானியம் மானாவாரி நிலங்களில் உழவுமானியம் போன்றவைகளை கொண்டு வருவதற்காக உழவு மானியம் இயற்கை உர செயல் விளக்கதிடல் வட்டார அளவில் ரூபாய் பத்தாயிரம் மானியத்தில் ஆர்வமுள்ள இயற்கை விவசாயிகளுக்கு வழங்கிடவும் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.




மேலும் கிராமங்களில் மறுமலர்ச்சி ஏற்படுத்திட ஒரு கிராமம் ஒரு பயிர் என்ற புதிய திட்டம் அனைத்து வருவாய் கிராமங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது. போன்றவைகள் பற்றி வேளாண் இணை இயக்குனர் பொறுப்பு சுஜாதா விளக்கிக் கூறினார். அதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி அவர்கள் விவசாயிகள் பசுந்தாள் உரங்கள் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் பற்றி எடுத்துக்கூறி பின் அரசின் திட்டங்களை விவசாயிகள் தெரிந்து கொண்டு மானியத்துடன் பயன் பெற கேட்டுக்கொண்டு அம்மாபேட்டை மற்றும் தஞ்சாவூர் வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு 50% மானியத்தில் தக்கை பூண்டு விதைகளை வழங்கினார்.



பின் தோட்டக்கலை துறை மூலம் ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து தொகுப்புகளை விவசாயிகளுக்கு 75 சத மானியத்தில் வழங்கினார். வேளாண் விற்பனை துறை மூலம் அம்மாபேட்டை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு உற்பத்தி முதலீடாக 12.5 லட்சம் பயனாளிகளுக்கு வழங்கினார். மேலும் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் நீலமேகம் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.



மேலும் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் வெங்கட்ராமன், மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை துணை இயக்குனர் வித்யா விவசாயிகளுக்கு தங்கள் துறை திட்டங்களை பற்றி எடுத்து கூறினர். தேசிய உணவு பாதுகாப்பு திட்ட ஆலோசகர் இளஞ்செழியன் மற்றும் பயிர் காப்பீடு வேளாண் உதவி இயக்குனர் கவிதா நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தனர். வேளாண் துணை இயக்குனர் ஐயம்பெருமாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.


தகவல் வெளியீடு

S.திலகவதி,

வேளாண்மை உதவி இயக்குனர், மதுக்கூர்

தஞ்சாவூர் மாவட்டம்.


மேலும் படிக்க....



விவசாயிகளே இனி கவலை வேண்டாம்! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி பூச்சிகளையும் பிடிக்கும் பூச்சிகளையும் கண்காணிக்கும்!!


விதை முதல் அறுவடை வரை தேவையான அனைத்து இடுபொருட்களும் 50 சத மானியத்துடன் முன்னுரிமை!!


பயிர்களில் ஏற்படும் நோய் தாக்கங்கள் பற்றிய வேளாண் கண்காட்சி !!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post