வயலில் சாயாது மகசூல் குறையாது சம்பாபருவத்திற்கேற்ற நடுத்தர சன்னரக நெல்!!


வயலில் சாயாது மகசூல் குறையாது சம்பாபருவத்திற்கேற்ற நடுத்தர சன்னரக நெல் ஏடீடி 54* மதுக்கூர் வட்டாரத்தில் செப்டம்பர் 15 முடிய இதுவரை 1100 எக்டரில் சாகுபடி முடிவடைந்துள்ளது. மதுக்கூர் வேளாண் விரிவாக்கம் மையத்தின் மூலம் சாவித்திரி சப் ஒன் ஏடி 51 போன்ற ரகங்கள் 50 டன் வரை விவசாயிகளுக்கு 50% மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 135 நாள் வயதுடைய ஏடி டி 54 சான்று பெற்ற நெல் விதைகள் விவசாயிகளுக்கு 50% மானியத்தில் மதுக்கூர் வேளாண் விரிவாக்கம் மையத்தில் இருப்பு வைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.


ஏ டிடி 54 ரகம் சம்பா பருவத்துக்கு ஏற்றது. பெரும்பாலும் சம்பா பருவத்தில் நெற்கதிர் அறுவடை நேரத்தில் மழை பெய்யும் போது நீரில் மூழ்கி விடுகிறது சில வயல்களில் காற்றினால் சாய்ந்துவிடும். இதனை எதிர்கொள்ளும் வகையில் ஆடுதுறை 54 என்ற நடுத்தர சன்னரக நெல் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மூலம் அறிமுகம் செய்யப்பட்டது.



நெல் மகசூலின் போது நெல் கதிர் செங்குத்தாக இருக்கும் வயலில் சாயாது இலை சுருட்டு புழு மற்றும் குருத்துப் பூச்சிகளின் தாக்கத்தை எதிர்த்து வளரும் தன்மையுடையது ஏக்கருக்கு அதிகபட்சமாக 3,500 கிலோ மகசூல் தர வல்லது. சதுர மீட்டருக்கு பிபிடி 52 04 ரகம் 500கிராம் மகசூல் தரும் இடங்களில் ஏடீடி54 700-750கிராம் மகசூல் தரும். இலை சுருட்டு புழு மற்றும் குருத்துப் பூச்சிகளுக்கு எதிர்ப்பு தன்மை உள்ள ரகம் என்பதால் விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு செலவினம் குறையும்.


விவசாயிகள் பரிந்துரைத்த யூரியாவை மட்டும் பயன்படுத்தி சாகுபடி செய்வதன் மூலம் நிறைவான மகசூலை பெற முடியும். இந்த ரகத்தின் நெல் அரிசியானது அரைவைத்திறன் 73 சதவீதமும். ஆயிரம் நெல் மணிகளின் எடை 16.5 கிராம் கொண்டதாக உள்ளது.இந்த ரகமானது சுமார் 4 அடி உயரமும், கதிர் உறை 30 செமீ, கதிருக்கு சராசரியாக 320 நெல் மணிகளை கொண்டது எனவே விவசாயிகள் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒரு ஆதார் கார்டுக்கு 100 கிலோ வரை கிலோவுக்கு ரூபாய் 19 மானியத்தில் ஏடிடி 54 விதையினை சாகுபடிக்கு பயன்படுத்தி பலன் பெற வேளாண் உதவி இயக்குனர் மதுக்கூர் திலகவதி கேட்டுக்கொண்டார்.



தகவல் வெளியீடு

S.திலகவதி,

வேளாண்மை உதவி இயக்குனர், மதுக்கூர்

தஞ்சாவூர் மாவட்டம்.


மேலும் படிக்க....



விவசாயிகளே இனி கவலை வேண்டாம்! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி பூச்சிகளையும் பிடிக்கும் பூச்சிகளையும் கண்காணிக்கும்!!


விதை முதல் அறுவடை வரை தேவையான அனைத்து இடுபொருட்களும் 50 சத மானியத்துடன் முன்னுரிமை!!


பயிர்களில் ஏற்படும் நோய் தாக்கங்கள் பற்றிய வேளாண் கண்காட்சி !!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post