நஞ்சில்லா உணவு உற்பத்தி குறித்து பட்டுக்கோட்டை வட்டார அங்கக விவசாய குழுக்களுக்கு பயிற்சி!!



நஞ்சில்லா உணவு உற்பத்தி குறித்து பட்டுக்கோட்டை வட்டார அங்கக விவசாய குழுக்களுக்கு பயிற்சி!!


பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மை துறையின் சார்பாக 13.09.24 அன்று அணைக்காடு கிராமத்தில் பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் (பரம்பிரகாட் கிரிஷி விகாஸ் யோஜனா ) அங்கக வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.




இந்த பயிற்சிக்கு பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குனர் பொறுப்பு செல்வி ச. சன்மதி அவர்கள் தலைமை எ ற்று பேசும் பொழுது அங்கக வேளாண்மை குறித்த மத்திய மாநில திட்டங்களை பற்றி எடுத்துக் கூறினார். அங்கக வேளாண்மை குறித்த தொழில்நுட்ப கருத்துக்களை விதை சான்று அலுவலர் திருமதி சங்கீதா அவர்கள் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறும் போது இயற்கை இடுபொருட்களான ஜீவாமிர்தம், அமிர்த கரைசல், கற்பூர கரைசல், இயற்கை பூச்சி விரட்டி ஆகியவற்றை எவ்வாறு உற்பத்தி செய்வது மற்றும் பயன்படுத்தும் முறை பற்றியும் பாரம்பரிய நெல் ரகங்களான தூயமல்லி, சீரக சம்பா, மாப்பிள்ளை சம்பா ஆகியவற்றின் உற்பத்தி முறை மற்றும் பயன்களை எடுத்து கூறினார்.



இந்த பயிற்சியில் பட்டுக்கோட்டை வட்டாரத்தை சேர்ந்த இயற்கை விவசாய குழுவை சார்ந்த இயற்கை விவசாயிகள் கலந்து கொண்டு தங்களின் அனுபவங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் அணைக்காடு ஊராட்சி மன்ற தலைவர் கலந்துகொண்டு விவசாயிகளிடையே இயற்கை விவசாயம் பற்றி கலந்துரையாடினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேளாண்மை உதவி அலுவலர்கள் மற்றும் அட்மா திட்ட பணியாளர்கள் செய்திருந்தனர்.

தகவல் வெளியீடு

சங்கீதா Msc.agri,

விதை சான்று அலுவலர் 

பட்டுக்கோட்டை.


மேலும் படிக்க....



விவசாயிகளே இனி கவலை வேண்டாம்! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி பூச்சிகளையும் பிடிக்கும் பூச்சிகளையும் கண்காணிக்கும்!!


விதை முதல் அறுவடை வரை தேவையான அனைத்து இடுபொருட்களும் 50 சத மானியத்துடன் முன்னுரிமை!!


பயிர்களில் ஏற்படும் நோய் தாக்கங்கள் பற்றிய வேளாண் கண்காட்சி !!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments