மகசூல் அதிகரிப்பில் முகவரியாக செயல்படும் ஜிங்க் சல்பேட். விவசாயிகள் பயன்படுத்த வேளாண் உதவி இயக்குனர் மதுக்கூர் வேண்டுகோள்!!
வேளாண் துறை மூலம் வேளாண் விரிவாக்க மையங்களில் மானிய விலைகளில் 10 கிலோ பைகளில் ஜிங்க்சல்பேட வழங்கப்பட்டு குறுவை தொகுப்பு திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டுவருகிறது. பயிர் எதுவானாலும் அதன் வளர்ச்சியை அதிகரிப்பதில் ஜிங்க் முக்கிய பங்காற்றுகிறது. முக்கியமாக நெல் வயல்களில் பயிரை சுற்றி மண் மற்றும் நீர் குளிர்ந்த வெப்பநிலையில் இருக்கும்.
குறைந்த வெப்பநிலையில் மண்ணில் உள்ள கரிமச்சத்துகளின் செயல்பாடும் குறைகிறது. இதனால் வேரின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு நெற்பயிர் வளர்ச்சி குன்றி காணப்படும். அதிக ஜிங்க் பற்றாக்குறையின் போது நெல் வயலில் பயிரானது சிவந்து சுட்டி சுட்டியாக காணப்படும். இத்தகு இடங்களில் வயலில் தெளிக்கப்படும் சிங் சல் பேட் நெல்பயிரின் வேர் வளர்ச்சிக்கு உதவுகிறது.
அதிக வேர் அதிக தூர் என்ற வகையில் செயல்பட்டு மகசூல் அதிகரிப்பதில் முகவரியாக செயல்படுகிறது. மணல் சாரியான இடங்களில் மற்றும் குறைந்த அளவு கரிம கார்பன் உள்ள இடங்களில் ஜிங்க்சல்பேட் இடுவதால் மண்ணில் உள்ள பிற சத்துக்களை எடுப்பதிலும் இது பயிர்களுக்கு உதவி செய்து பயிரின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகிறது.
மண்ணில் மணி சத்து அதிகம் உள்ள இடங்களில் பாசிகளின் வளர்ச்சியும் அதிகமாக இருக்கும். இத்தகு வயல்களில் சிங்க் பற்றாக்குறை ஏற்பட்டு வேர் மற்றும் தூர்களின் வளர்ச்சி குறைந்து மகசூல் பாதிக்கப்படும் இந்த இழப்பை குறைப்பதற்கு அவசியம் சிங் சல்பேட் ஏக்கருக்கு 10 கிலோ இட வேண்டும். சிங் சல்பேட் எளிதாக நீரில் கரையக்கூடிய தன்மையுடையது அனைத்து பயிர்களிலும் இலைகள் விரைந்து பச்சை நிறம் அடைவதை சிங்சல்பேட் உறுதி செய்து அதன் மூலம் மகசூல் அதிகரிக்கிறது.
ஜிங்க்சல்பேட் அனைத்து பயிர்களிலும் அதிக பூக்கள் உருவாவதையும் கனிகளாக மாறுவதையும் உறுதி செய்கிறது. தென்னையில் மட்டைகள் முதிர்ச்சி அடையாமல் கீழேவிழுவதுதென்னம்பாளையில் பூக்கள் உருவாகி குரும்பை வைப்பதில் தாமதம்இலைகளின் நீளம் குறைவது போன்ற குறைபாடுகளை ஜிங்க்சல்பேட் இடுவதால் சரிசெய்யலாம்.
மதுக்கூர் வட்டாரத்தில் 8.5 டன் ஜிங்க்சல்பேட் இருப்பு வைக்கப்பட்டு 10 கிலோ பைக்கு ருபாய் 250 வீதம் மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. எனவே அனைத்து விவசாயிகளும்ஜிங்க்சல்பேட் மானியத்தில் பெற்று பயனடைய கேட்டுக்கொள்கிறேன். பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை மதுக்கூர் வட்டார விவசாயிகளுக்கு சிங்சல்பட்டினை மானியத்தில் வழங்கினார்.
தகவல் வெளியீடு
S.திலகவதி,
வேளாண்மை உதவி இயக்குனர், மதுக்கூர்
தஞ்சாவூர் மாவட்டம்.
மேலும் படிக்க....
விவசாயிகளே இனி கவலை வேண்டாம்! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி பூச்சிகளையும் பிடிக்கும் பூச்சிகளையும் கண்காணிக்கும்!!
விதை முதல் அறுவடை வரை தேவையான அனைத்து இடுபொருட்களும் 50 சத மானியத்துடன் முன்னுரிமை!!
பயிர்களில் ஏற்படும் நோய் தாக்கங்கள் பற்றிய வேளாண் கண்காட்சி !!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
Time to Tips – 5
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...