குறைவான பராமரிப்பில் அதிக லாபம் தரும் பலா சாகுபடி செய்வது எப்படி?


தோட்டக்கலை சாகுபடியில் குறைவான பராமரிப்பில் அதிக லாபம் தரும் பலா மரங்களை பயிரிட்டு நினைத்த வருமானம் பெறலாம்.


பலா ரகத்தில் பண்ருட்டி பர்லியார்-1,  சிங்கப்பூர் பலா, ஒட்டுப் பலா, வெளிப் பலா, பி.எல்.ஆர்-1, பி.பி.ஐ-1 மற்றும் PLR. (J-2) ஆகிய ரகங்கள் உள்ளன. பலா கன்றுகள் எல்லாவிதமான நிலத்திலும் நன்கு வளரும். ஆனால், நல்ல வடிகால் வசதி உள்ளதாக நிலம் இருக்க வேண்டும். அமில பாங்கான நிலங்களில் 1 சதவீதம் ஆழமாக சல்பேட் இட்டு அமிலத் தன்மையை குறைக்கலாம்.


நிலத்தை நன்றாக உழுது பின்பு, ஒரு மீட்டர் அகல ஆழத்தில் குழிகள் எடுக்க வேண்டும். ஒவ்வொரு குழியிலும் கன்று நடுவதற்கு 10 நாட்களுக்கு முன்பு 10 கிலோ தொழு உரத்துடன் மண் நன்கு கலக்கப்பட்டு இட வேண்டும். பொதுவாக ஒட்டுச்செடிகளை 8x8 மீட்டர் இடைவெளியில் ஜூன்-டிசம்பர் வரை உள்ள காலக்கட்டத்தில் நடவேண்டும். நன்றாக வளரும் வரை வாரம் ஒரு முறையும், பின்பு தேவைப்படும் போதும் மட்டுமே நீர்ப்பாய்ச்ச வேண்டும்.

பரிந்துரைக்கப்பட்ட அளவில் தொழு உரம், தழைச் சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து மற்றும் இப்கோ காம்ப எக்ஸ் 10:26:26, யூரியா உரங்களை இட வேண்டும். இந்த உரங்களை மே, ஜூன் மாதங்களில் ஒருமுறையும், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் ஒரு முறையும் என 2 முறை பிரித்து இடவேண்டும்.


வண்டு போன்ற ஒரு வகைப்பூச்சிகள் காணப்பட்டால் மீதைல் பாரத்தியான் 50 இ.சி 2 மில்லி ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். அல்லது நடுத்தர வயதுடைய மரங்களுக்கு மீதைல் பாரத்தியான் 2 சதவீதம் அல்லது குயினால்பாஸ் தூவும் மருந்து 1.5 சதவீதம் மருந்தை மரம் ஒன்றுக்கு 5 கிலோ வீதம் தூவ வேண்டும். அழுகல் நோய் தென்பட்டால் கட்டுப்படுத்த ஒரு சத வீதபோர்டோக்கலவை அல்காப்பர் ஆக்சிகுளோரைடு 2.5 கிராமை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் 3 முறை தெளிக்க வேண்டும்.


விதைகள் மூலமாக வளர்ந்த செடிகள் 8 ஆண்டுகளில் காய்ப்புக்கு வரும். ஆனால் ஓட்டுக்கட்டப்பட்ட செடிகள் 5 ஆண்டுகளில் காய்ப்புக்கு வரும். பழங்களை மார்ச் முதல் ஜூலை வரையில் அறுவடை செய்யலாம். ஒரு ஆண்டில் ஒரு எக்டேருக்கு 30-40 டன் பழங்கள் கிடைக்கும். இதன் மூலம் நல்ல வருமானமும் கிடைக்கும்.

மேலும் படிக்க....


கிராமப்புறங்களில் நாட்டுக்கோழி பண்ணை வைக்க மானியம்!!


மாடு வளர்க்க தமிழ்நாடு அரசு வழங்கும் ஜாக்பாட் ரூ.1,20,000 பெறுவது எப்படி?


விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட குட் நியூஸ் - 100% மானியம், உடனே விண்ணப்பிக்கவும்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். 


Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post