தமிழக கிராம மக்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு !! 25 ஆயிரம் இலவச கால்நடைக் கொட்டகைகள் கட்டித்தருகிறது மத்திய அரசு!!
மேலும் விபரங்களுக்கு இங்கே தொடவும்
ஆனால்
இன்றைக்கு கிராமங்களில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறிய வண்ணம் உள்ளனர்.இதற்கான
காரணம் கிராமங்களில் உள்ள விவசாயத்தில் இலாபம் இல்லாமையே.அதனால் கிராமப்புற விவசாயிகள்
தங்கள் வருமானத்தை பெருக்க ஆடுகள்,கோழிகள்,மாடுகள் போன்றவற்றை வளர்த்து அதன் மூலம்
கூடுதல் பெற வேண்டிய சூழலில் உள்ளனர்.
அவ்வாறு
ஒரு கூடுதல் வருமானம் அவர்களுக்கு கிடைக்கும் பட்சத்தில் விவசாயம் பொய்த்துப் போகும்
காலங்களில் கூட அவர்களால் சற்று பொருளாதார சுமையை சமாளிக்க முடியும்.இதற்காக பல்வேறு
திட்டங்களை மத்திய மாநில அரசுகள் வகுத்த செயல்படுத்திவருகிறது.
ஆனால்
இதைப்பற்றிய தகவல்களை கிராமப்புற மக்களுக்கு கொண்டுசெல்வதில் பிரச்சனை உள்ளது.அவ்வாறு
மக்கள் அறியாமலே உள்ள திட்டங்களில் ஒன்றே இலவச மாட்டுக்கொட்டகை திட்டம்.
இத்திட்டம்
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.இத்திட்டத்தின்
கீழ் 2,3,5,9 மாடுகள் என பல்வேறு வகையில் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின்
கீழ் பயன்பெற ஊரக வேலைவாய்ப்பு உறுத்தித்திட்ட அட்டை வைத்திருக்க வேண்டும்.அவரது பெயரிலேயே
கொட்டகை அமைக்க தேவையான நிலம் இருத்தல் அவசியம்.
இத்திட்டத்தில்
பயன் பெற மகளிர் சுய உதவிக்குழுக்ளையோ , ஊராட்சி மன்ற தலைவரையோ , அரசு கால்நடை மருத்துவரையோ
அல்லது நேரடியாக திட்டங்கள் தொடர்பான வட்டார வளர்ச்சி அலுவலரையோ (scheme BDO),ஆவின்
பால் சங்கத்தையோ அனுக வேண்டும்.
இரண்டு
மாடு கொட்டகை அமைக்க ரூபாய் 98,500 மூன்று மாடுகள் தங்கும் கொட்டகைக்கு ரூபாய்
1,20,000 என பல்வேறு விதங்களில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இதுபோல் அதிகபட்சம்
ரூபாய் பத்துலட்சம் வரை அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது.இத்திட்டம் தமிழகத்தில் உள்ள
அனைத்து மாவட்டங்களையும் செயல்படுத்தப்படுகிறது.
இதுபோன்ற
திட்டங்கள் செயல்படுத்தும் போது உரிய விழிப்புடன் இருக்கும் பட்சத்தில் கிராமங்களில்
வாழும் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்க வழிவகுக்கும்.
மகாத்மாகாந்தி
தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 25 ஆயிரம் கால்நடைக் கொட்டகைகளைக்
(Cow and Goat Shelters) கட்டித்தர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கால்நடை விவசாயிகளை ஊக்குவிப்பதன் மூலம் மாநிலத்தின் பால் உற்பத்தியைப் பெருக்க முடியும் என்பதில் மத்திய அரசு முனைப்புடன் செயல் பட்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக தமிழகத்தின் கிராமப்பகுதிகளைச் சேர்ந்த கால்நடை விவசாயிகளுக்கு மொத்தம் 25 ஆயிரம் கால்நடை கொட்டகைகளைக் கட்டித்தர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு (Rural Development and Panchayat Raj (RDPR ) எனப்படும் ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து துறை மூலம் மொத்தம் 431 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது.
இந்த 25 ஆயிரம் கொட்டகைகளில், 40 சதவீதம், மலைஜாதியினருக்கு (Scheduled Castes) ஒதுக்கப்படும்.
இதுகுறித்து ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து துறை இயக்குநர் கே.எஸ். பழனிசாமி கூறுகையில், கொட்டகைக் கட்டுவதற்கான செலவு முழுவதும் மத்திய அரசு ஏற்கும்.
இந்தத்திட்டம் கிராம பஞ்சாயத்துகள் மூலம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும். இதில் 15 ஆயிரம் மாட்டுக் கொட்டகைகளும், 10 ஆயிரம் ஆட்டுக் கொட்டகைகளும் கட்டித்தரப்பட உள்ளது.2 மாடுகளைக் கொண்ட கொட்டகையாக இருப்பின் ரூ.1.35 லட்சமும், 5 மாடுகளுக்கு ரூ.2.12 லட்சமும் செலவிடப்பட உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பால்உற்பத்தியாளர்கள் வரவேற்பு (Welcome to Dairy
Producers) மத்திய அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ள தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்
சங்கப் பொதுச்செயலாளர்
எம். ஜி.ராஜேந்திரன், இதன்மூலம் பால் உற்பத்தி வாயிலாக மட்டும் விவசாயிகள் ஒரு வாரத்திற்கு 500 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும் என்றார்.
மேலும் படிக்க...
பால் பண்ணை அமைக்க ரூ.1.75 லட்சம் மானியம்- மத்திய அரசின் மகத்தானத் திட்டம்!!
Follow us:
Watch On YouTube Channel Time to Tips....
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...