தமிழக விவசாயிகளுக்கு நிவர் மற்றும் புரவி புயல் நிவாரணம் ஒரு ஏக்கருக்கு எவ்வளவு இழப்பீடு கிடைக்கும்!!



தமிழக விவசாயிகளுக்கு நிவர் மற்றும் புரவி புயல் நிவாரணம் விண்ணப்பபடிவம் PDF.


Application Form


தமிழக விவசாயிகளுக்கு நிவர் மற்றும் புரவி புயல் நிவாரணம் ஒரு ஏக்கருக்கு எவ்வளவு இழப்பீடு கிடைக்கும்!!


நிவர், புரெவி புயல்களால் 3.10 லட்சம் ஹெக்டேர் பயிர் பாதிப்பு; 5 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.600 கோடி இடுபொருள் நிவாரணம்: ஜன.7 முதல் வங்கிக் கணக்கில் வரவு வைக்க முதல்வர் உத்தரவு தமிழகத்தில் நிவர் மற்றும் புரெவி புயல்களால் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர் சாகுபடி பாதித்த 5 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.600 கோடி இடுபொருள் நிவாரணமாக அவர்கள் வங்கிக் கணக்கில் வரும் ஜன.7-ம் தேதி முதல் வரவு வைக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். 



இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென் மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த நிவர் புயல் கடந்தாண்டு நவ.25 மற்றும் 26-ம் தேதிகளில் புதுச்சேரி அருகில் கரையைக் கடந்தது. நிவர் புயல் காரணமாக ஏற்பட்ட சேதங்களை சீரமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், அடுத்ததாக புரெவி புயல் தாக்கத்துக்கு தமிழகம் உள்ளாகியது. 


தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக, ‘நிவர் மற்றும் ‘புரெவி புயல்களின்போது மனித உயிரிழப்பு மற்றும் கால்நடை சேதம் பெருமளவில் தவிர்க்கப்பட்டுள்ளது. எனினும் நிவர் மற்றும் புரெவி புயல்கள் கரையைக் கடக்கும்போது வீசிய பலத்த காற்று மற்றும் கனமழையால், மாநிலத்தின் பல பகுதிகளில் மின்சாரம், சாலை மற்றும் உள்ளட்சி அமைப்புகளுக்கு சொந்தமான பல உட்கட்டமைப்புகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டது. 


இதுமட்டுமின்றி, வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கும் பெருமளவு சேதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் காரணமாக புயல் பாதிப்புக்கு உள்ளான மாவட்டங்களில் இயல்பு நிலை உடனடியாகத் திரும்பியது.


இப்புயலால் ஏற்பட்ட பயிர் சேதத்தை உடனடியாகக் கணக்கீடு செய்யும்படி வருவாய், வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டிருந்தேன். டிச.8-ம் தேதி மற்றும் 9-ம் தேதி ஆகிய நாட்களில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்தியக் குழு ஆய்வு செய்ததுபோல், புரெவி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்தியக் குழு டிச.28 முதல் 30-ம் தேதி வரை ஆய்வு செய்தது. 


நிவர் புயலால் ஏற்பட்ட சேதங்களை தற்காலிகமாக சீரமைக்க ரூ.641 கோடியே 83 லட்சம், நிரந்தரமாக சீரமைக்க ரூ.3,108 கோடியே 55 லட்சம் என மொத்தம் ரூ.3,750 கோடியே 38 லட்சம் தேவைப்படும் என்று மத்திய அரசக்கு தெரிவிக்கப்பட்டு, மத்திய அரசின் நிதி கோரப்பட்டுள்ளது. 



மேலும், புரெவி புயலால் ஏற்பட்ட சேதங்களை தற்காலிகமாக சீரமைக்க ரூ.485 கோடி மற்றும் நிரந்தரமாக சீரமைக்க ரூ.1,029 கோடி என மொத்தம் ரூ.1,514 கோடி தேவைப்படும் என்று தெரிவித்து மத்திய அரசிடம் நிதி கோரப் பட்டுள்ளது. 


தமிழக விவசாயிகளின் மீது எப்போதும் மிகுந்த அக்கறை கொண்ட நான், நிவர் மற்றும் புரெவி புயல்களின் தாக்கத்தால் பாதிப்புக்கு உள்ளான விவசாயிகளின் நலனை காக்கும் பொருட்டும் விவசாயிகள் அதிக உற்பத்தி செலவு செய்து பேரிடரால் பெரும் பாதிப்பு அடைந்துள்ளதை கருத்தில் கொண்டும் தேசிய பேரிடர் நிவாரண நிதியின் வழிகாட்டு நெறிமுறைகள்படி நிவாரணம் வழங்கப்படும்.


அதன் விவரம் வருமாறு:


மானாவாரி மற்றும் நீர்ப்பாசன வசதி பெற்ற நெற்பயிர்களுக்கும் நீர்ப்பாசன வசதி பெற்ற இதர பயிர்களுக்கும் ஹெக்டேர் ஒன்றுக்கு வழங்கப்படும் இடுபொருள் நிவாரணத் தொகையான ரூ.13,500 என்பது, ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. 


மானாவாரி நெற்பயிர் தவிர, அனைத்து மானாவாரி பயிர்களுக்கும் இடுபொருள் நிவாரணத் தொகையான ஹெக்டேர் ஒன்றுக்கு வழங்கப்படும் ரூ.7,410 என்பது ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். பல்லாண்டு கால பயிர்களுக்கு இடு பொருள் நிவாரணத் தொகையாக ஹெக்டேர் ஒன்றுக்கு வழங்கப்படும் ரூ.18 ஆயிரத்தை ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட இடுபொருள் நிவாரணத்துக்கான தொகையை தமிழக அரசு வழங்கும்.



பாதிப்படைந்த விவசாயிகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண வழிகாட்டு நெறிமுறைகளின்படி, அதிகபட்சமாக 2 ஹெக்டேர் என்ற அளவில் மட்டுமே இடுபொருள் நிவாரணம் வழங்க வழிவகை உள்ளது. இந்த பேரிடரில் அனைத்து விவசாயிகளும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ள காரணத்தால், 2 ஹெக்டர் என்ற உச்சவரம்பு தளர்த்தப்பட்டு, பாதிக்கப்பட்ட பரப்பளவு முழுவதுக்கும் உச்சவரம்பின்றி இடுபொருள் நிவாரணம் வழங்கப்படும். 


இதைத்தொடர்ந்து, நிவர் மற்றும் புரெவி புயல்களால் பாதிப்புக்குள்ளான 5 லட்சம் விவசாயிகளின் 3 லட்சத்து 10,589.63 ஹெக்டேர் பரப்பளவிலான வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு ரூ.600 கோடி இடுபொருள் நிவாரணமாக வழங்கப்படும். இந்நிவாரணம் விவசாயிகளின் கணக்கில் ஜன.7-ம் தேதி முதல் நேரடியாக வரவு வைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 


Post a Comment

0 Comments