வேளாண் பணிகளுக்கு
குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்கள்! ஒரு மணி நேரத்திற்கு
ரூ.340 முதல்!!
மாவட்ட அழைப்பு
விருதுநகர்
மாவட்டத்தில் வேளாண் பணிகளுக்குக் குறைந்த வாடகையில் வேளாண்மைப் பொறியியல் துறை இயந்திரங்கள் வழங்கப்படுவதால்,
விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விவசாயம்
விருதுநகர்
மாவட்டத்தில் மானாவாரி, சீணறு மற்றும் குமாத்துப் பாசன விவசாயம் மேற்கொள்ளப்பட்டு
வருகிறது.
பொறியியல்
துறை முயற்சி
இதில்
நில உழவுப் பணியிலிருந்து அறுவடை பணிகள் வரை இயந்திரங்களைப் பயன்படுத்தி
பணிகளை மேற்கொள்ள வேளாண்மை இயந்திர மயமாக்கல் பணிகளை வேளாண்மைப் பொறியியல் துறை மேற்கொண்டு வருகிறது.
இயந்திரங்கள்
வாடகைக்கு
விருதுநகர்
மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறையில் உழுவை இயந்திரம் 8 எண்களும், மண் தள்ளும் இயற்திரம்
2 எண்களும் ஜெசிபி இயந்திரம் 2 எண்களும், பொக்லைன் இயந்திரம் ஒன்றும், அரசு நிர்ணயம் செய்த
குறைந்த வாடகையில் வழங்கப்பட்டு வருகிறது.
வேளாண்மைப்
பொறியியல் துறையின் மூலம் விவசாய இயந்திரங்கள் வாடகைக்கு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஒரு
மணி நேரத்திற்கு வாடகை என்ன?
இதில்
உழுவை இயந்திரம் ஒரு மணி நேரத்திற்கு
ரூ.340/-க்கும், மண் தள்ளும் இயந்திரம்
ஒரு மணி நேரத்திற்கு ரூ.840/-க்கும் வாடகைக்கு விடப்படும்.
இதேபோல்
ஜெசிபி இயந்திரம் ஒரு மணி நேரத்திற்கு
ரூ.660/-க்கும், பொக்லைன் இயந்திரம் ஒரு மணி நேரத்திற்கு
ரூ.1440/-க்கும் (எரி பொருள் மற்றும்
ஓட்டுநர் செலவு) உட்பட வழங்கப்பட்டு வருகிறது.
பிறக்
இணைப்புக் கருவிகள்
மேலும்
உழுவை இயந்திரங்களில் இணைப்புக் கருவிகளாக, சட்டிக் கலப்பை, 5 கொலுக் கலப்பை 9 கொலுக் கலப்பை, சுழல் கொத்துக் கலப்பை, சோளத்தட்டை அறுவடை கருவி, நேரடி விதை விதைக்கும் கருவி,
தென்னைத் தோகைகளைத் துகள்களாக்கும் கருவி, வாய்க்கால் வெட்டும் கருவி, வைக்கோல் வாரி, வைக்கோல் கட்டும் இயந்திரம், கடலைக் கொடியிலிருந்து கடலை பிரிக்கும் கருவி
என பல்வேறு புதிய புதுமையான தொழில்நுட்பக் கருமிகளும், டிராக்ட்ருடன் சேர்த்து ஒரு மணி நேரத்திற்கு
ரூ.340/- என்கிற குறைந்த வாடகையில் வாடகைக்கு வழங்கப்பட்டு வருகிறது.
நிலத்தடி
நீர் ஆய்வு குறைந்த வாடகை
சிறுபாசனத்
திட்டத்தில் ஒரு பணியிடத்திற்கு ரூ.500/-க்கு அரசு நிர்ணயித்துள்ள
குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு நிலத்தடி நீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு
வருகிறது.
மேலும் தொடர்புக்கு
விருதுநகர்,
காரியாபட்டி, அருப்புக்கோட்டை, திருச்சுழி மற்றும் நரிக்குடி வட்டார விவசாயிகள் உதவி செயற்பொறியாளர் (வே.பெர்), வேளாண்மைப் பொறியியல் துறை, மாவட்ட ஆட்சியரகம், விருதுநகர், அலைபேசி எண் : 98426 76725யைத் தொடர்பு கொள்ளவும்.
மேலும் சில
அறிவிப்புகள்
இதேபோல்,
திருவில்லிப்புத்தூர், இராஜபாளையம், வத்திராயிருப்பு, சிவகாசி, வெம்பக்கோட்டை மற்றும் சாத்தூர் வட்டார விவசாயிகள் உதவி செயற் பொறியாளர்
(வே.பொ), வேளாண்மைப் பொறியியல்
துறை, கலசலிங்கம் பல்கலைக் கழகம் எதிரில், கிருஷ்ணன்கோவில், அலைபேசி எண்: 80563 17476ஐயும் தொடர்பு கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தகவல் வெளியீடு
ஜெ.மேகநாதரெட்டி
மாவட்ட
ஆட்சியர்
விருதுநகர்.
மேலும்
படிக்க....
6 ஆயிரம் ஹெக்டர் பரப்பில் கரும்பு சாகுபடி சொட்டு நீர்ப் பாசனம் ஒரு லட்சத்திற்கு மேல் மானியம்!!
பயறு வகை விதைப்பண்ணைகள் நிறைந்த லாபம் தரும் தொழில்! கூடுதல் லாபம் ஈட்ட இதை செய்யுங்கள்!!
இயந்திர நெல் நடவு செய்ய எக்டேருக்கு ரூ.5000 மானியம்!! விவசாய ஆர்வலர் குழுவுக்கு ரூ.6000 மானியம்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி
மேலும் அறிந்துகொள்ள
TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை
தொடரந்து காணுங்கள்
நன்றி......
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...