ஒருங்கிணைந்த
பண்ணையம் அமைக்க ரூ.45 ஆயிரம் மானியம் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்!!
மாவட்ட அழைப்பு
சிவகங்கை
மாவட்டம், திருப்பத்தூர், எஸ்.புதூர் ஆகிய
வட்டாரப் பகுதிகளில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த
பண்ணையம்
ஒருங்கிணைந்த
பண்ணையம் என்பது, விவசாயிகளுக்கு, பயிர் கைகொடுக்காத காலங்களில் விதை உற்பத்தி பலன்
அளிக்கும். அதேபோல, நிரந்திர வருமானமாக கால்நடை வளர்ப்பு நன்மை தரும். வருட வருமானம், மாதாந்திர
வருமானம், 6 மாதத்திற்கு ஒரு முறையிலான வருமானம்
இப்படி உங்கள் வருமானத்தை உறுதி செய்துகொள்ளவும் உதவுகிறது ஒருங்கிணைந்தப் பண்ணையம்.
சங்கிலித்
தொடர் பலன்
இதில்
செலவும் குறைவு. ஏனெனில், கால்நடைகளின் கழிவுகளைக் கொண்டு பயிர்சாகுபடிப் பணிகள் என ஒன்றோடு ஒன்று
பின்னிப்பிணைந்து, சங்கிலித் தொடர் பலனைத் தரக்கூடியது. இது குறித்து சிவகங்கை
மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி
வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது:
மானாவாரி பகுதி
மேம்பாட்டுத் திட்டம்
சிவகங்கை
மாவட்டத்தில் நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத்தின் கீழ், மானாவாரி பகுதி மேம்பாட்டுத் திட்டம் செயல் படுத்தப்படுகிறது. இந்தத் திட்டன்படி, தோட்டக்கலை சார்ந்த ஒருங்கிணைந்த பண்ணையம் 200 ஹெக்டேரில், அமைக்க ரூ.90 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
விவசாயிகள்
தேர்வு
திருப்பத்தூர்
மற்றும் எஸ்.புதூர் வட்டாரங்கள்
தேர்வு செய்யப்பட்டு இரண்டு விவசாயக் குழுக்கள் அமைக்க விவசாயிகள் தேர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ரூ.45
ஆயிரம் மானியம்
இத்திட்டத்தின்
கீழ் 1 ஹெக்டேர் அளவுக்கு ஒருங்கிணைந்த தோட்டக்கலை சார்ந்த பண்ணையம் மற்றும் கால்நடை வளர்ப்பிற்கு 50 சதவீத மானியமாக ரூ.45,000 விவசாயிகளுக்கு வழங்கப்பட இருக்கிறது.
தேவைப்படும்
ஆவணங்கள்
1. கணினி
சிட்டா
2. அடங்கல்
3. குடும்ப
அட்டை நகல்
4. ஆதார்
அட்டை நகல்
5. நில
வரைபடம்
6. 3 மார்பளவு
புகைப்படம்
7. மண்
மற்றும் நீர் பரிசோதனை அட்டை
8. வங்கிக்கணக்குப்
புத்தக நகல்
தொடர்புகொள்ள
வேண்டிய முகவரி
இத்திட்டத்தில்
பயன் பெற விரும்பும் மேற்கண்ட
வட்டாரங்களைச் சேர்ந்த விவசாயிகள், இங்குக் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களுடன் திருப்பத்தூர் மற்றும் எஸ்புதூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில்
விண்ணப்பிக்கலாம்.
மேலும்
தொடர்புக்கு
கூடுதல்
விவரங்களுக்கு 82480
08089, 97888 13286 என்ற
எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
படிக்க....
வேளாண் பணிகளுக்கு குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்கள்! ஒரு மணி நேரத்திற்கு ரூ.340 முதல்!!
6 ஆயிரம் ஹெக்டர் பரப்பில் கரும்பு சாகுபடி சொட்டு நீர்ப் பாசனம் ஒரு லட்சத்திற்கு மேல் மானியம்!!
காய்கறி சாகுபடியை அதிகரிக்க 300 ஹெக்டர் பரப்பளவுக்கு பின்னேற்பு மானியம்!! முட்டைகோஸ் சாகுபடி!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி
மேலும் அறிந்துகொள்ள
TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை
தொடரந்து காணுங்கள்
நன்றி......
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...