நறுமணப் பயிர்கள்
பயிரிட ரூ.20,000 மானியம்!! ஜாதிக்காய்,
கிராம்பு, மிளகு பயிரிட விவசாயிகளுக்கு அழைப்பு!!
மாவட்ட அழைப்பு
நீலகிரி
மாவட்டத்தில் ஜாதிக்காய், மிளகு மற்றும் கிராம்பு பயிர்களை சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.20,000 மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மலைகளின்
ராணி
இயற்கை
எழில் கொட்டிக்கிடக்கும், மலை மாவட்டமான நீலகிரியில்
குளிர் நிறைந்த பகுதிகளான ஊட்டி மற்றும் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாகுபடிக்கு உகந்த பருவநிலை கொண்டவை.
மலைக்காய்கறிகள்
இங்கு
கேரட், பீட்ரூட், டர்னிப், உருளைக்கிழங்கு போன்ற மலைக் காய்கறிகளை விவசாயிகள் அதிக அளவில் பயிரிட்டு
வருகின்றனர்.
நறுமணப்
பயிர்கள்
அதே
போல் இங்குள்ள மித வெப்பமான காலநிலை
நிலவும் மலைச் சரிவு பகுதிகளில் மிளகு, கிராம்பு, ஏலக்காய், ஜாதிக்காய் போன்றவற்றை விவசாயிகள் அதிகமாகப் பயிரிட்டு சாகுபடி செய்து வருகின்றனர்.
நறுமணப்
பயிர்கள் பரப்பளவை
அதிகரிக்க
இந்தப்
பகுதிகளில் மிளகு, கிராம்பு, ஏலக்காய், ஜாதிக்காய் போன்றவற்றுக்கு சந்தைகளில் நல்ல வரவேற்பு இருப்பதால்
இந்தப் பயிர்களின் பரப்பளவை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நறுமணப்
பயிர்கள் சாகுபடி
ரூ.20,000 மானியம்
இதன்
ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்தில் ஜாதிக்காய், மிளகு மற்றும் கிராம்புப் பயிர்களை ஹெக்டேருக்கு ரூ.20,000 மானியத்தில் சாகுபடி செய்ய தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் திவ்யா அவர்கள் கூறிய செய்தி,
செலவைக்
குறைக்க
தோட்டக்கலைப்
பயிர்கள் சாகுபடியில் ஏற்படும் செலவினங்களைக் குறைத்து லாபத்தை அதிகரிக்கும் வகையில் தோட்டக்கலைத்துறையின் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
பல்வேறு வகை மானியங்கள்
இதன்
அடிப்படையில் 2021-2022ம் ஆண்டில் ஒருங்கிணைந்த
தோட்டக்கலை வளர்ச்சி இயக்கத்திட்டத்தின்கீழ் பல்வேறு மானியங்கள் வழங்கப்பட உள்ளன.
125 ஹெக்டேர்
இலக்கு
இந்தத்
திட்டத்தின்கீழ் பல நறுமணப்பயிர்களான மிளகு,
ஜாதிக்காய் மற்றும் கிராம்பு போன்ற பயிர்கள் சாகுபடி செய்ய ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000
வீதம் 125 ஹெக்டேருக்கு மானியம் வழங்க நீலகிரி மாவட்டத்துக்கு இலக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தோட்டக்கலைத்துறை
எனவே,
மிளகு, ஜாதிக்காய் மற்றும் கிராம்பு போன்ற பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்களது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தைத்
தொடர்பு கொண்டும் அல்லது தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தைத்
தொடர்பு கொண்டும் பயனடையலாம் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் தொடர்புக்கு
இதுதொடர்பாக
ஊட்டி தோட்டக்கலை உதவி இயக்குநர் 8489604087, குன்னூர் தோட்டக்கலை
உதவி இயக்குநர் 6381963018, கோத்தகிரி தோட்டக்கலை உதவி இயக்குநர் 9994749166 மற்றும் கூடலூர்
தோட்டக்கலை உதவி இயக்குநர் 8903447744 என்ற தொலைபேசி
எண்களிலும் தொடர்பு கொண்டு தங்கள் விண்ணப்பத்தை அளித்தும் உழவன் செயலியில் விவசாயிகள் தங்கள்பெயரை முன்பதிவு செய்யவும் ஏற்பாடு செய்துள்ளனர்.
மேலும்
படிக்க....
ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க ரூ.45 ஆயிரம் மானியம் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்!!
வேளாண் பணிகளுக்கு குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்கள்! ஒரு மணி நேரத்திற்கு ரூ.340 முதல்!!
6 ஆயிரம் ஹெக்டர் பரப்பில் கரும்பு சாகுபடி சொட்டு நீர்ப் பாசனம் ஒரு லட்சத்திற்கு மேல் மானியம்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி
மேலும் அறிந்துகொள்ள
TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை
தொடரந்து காணுங்கள்
நன்றி......
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...