கூட்டுறவு சங்கத்தில்
உறுப்பினராக அழைப்பு! அனைத்து மாவட்டங்களிலும்
உறுப்பினர் ஆகலாம்!!
தமிழகத்தில்
அனைத்து மாவட்டங்களிலும் இயங்கும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினராக
அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவே
நாட்டு உயர்வு
கூட்டுறவே
நாட்டு உயர்வு என்ற நோக்கத்துடன் செயல்பட்டு
வரும் கூட்டுறவுத்துறை, விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு, மாநிலம் முழுவதும் உள்ள கிராமங்களில், தொடக்க
வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களை அமைத்துள்ளது.
பலவிதக்
கடன்கள் வழங்கல்
இந்த
சங்கங்கள் பயிர்க்கடன், நகைக்கடன், தானிய ஈட்டுக்கடன், இயந்திரங்களுக்கான கடன் என பல
வகையான கடன் திட்டங்களைச் செயல்படுத்தி
வருகின்றன.
உரப்பொருட்கள்
விற்பனை
இத்தோடு
நின்றுவிடாமல், உரம், பூச்சிக்கொல்லி, விதை போன்றவற்றையும் விற்பனை
செய்து வருகின்றன. இத்தகைய சங்கங்களில் சில சரிவர இயங்காமல்
இருந்தாலும், தவணை பாக்கி இல்லாமல்
லாபத்தில் இயங்கும் கூட்டுறவு சங்கங்களும் பல உண்டு.
தொடங்கப்பட்டது
எப்போது?
இந்தச்
சங்கம் 1958-ம் ஆண்டு துவங்கப்பட்டது.
உறுப்பினர்கள் மூலமாக விவசாயிகளின் பங்குத்தொகை 67 லட்சம் ரூபாய் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 20 கோடி ரூபாய் அளவுக்குக்
கடன் வரவு-செலவு நடக்கிறது.
8 கோடி ரூபாய் அளவுக்கு வைப்பு நிதி உள்ளது.
எப்படி
வழங்கப்படுகிறது கடன்?
தமிழ்நாடு
மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி மாவட்டம்தோறும் உள்ள மத்திய கூட்டுறவு
வங்கிகளுக்குக் கடன் கொடுக்கிறது.
மத்திய
கூட்டுறவு வங்கி, அந்த மாவட்டம் முழுவதிலும்
உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களுக்கு குறிப்பிட்ட சதவிகிதத்தில் கடன் கொடுக்கிறது.
இந்தக்
கூட்டுறவு சங்கங்கள், விவசாயிகளுக்குக் கடன் கொடுக்கின்றன. கூட்டுறவு
சங்கம் என்பதால், கண்டிப்பாக விவசாயிகளின் பங்களிப்பு இருக்க வேண்டும்.
அதனால்,
கடன் பெறும் தொகையில் 10 சதவிகிதம் விவசாயிகள் பங்குத் தொகையாகச் செலுத்த வேண்டும்.
சங்கம் லாபத்தில் இயங்கினால், இந்தப் பங்குத் தொகைக்கு டிவிடென்ட் கிடைக்கும். எங்கள் சங்கத்தில், விவசாயிகளின் பங்குத் தொகைக்கு லாபத்தில் 14 சதவிகிதம் டிவிடென்ட் கொடுக்கிறோம்.
கூட்டுறவு
சங்கங்களில் உறுப்பினராக வாய்ப்பு
இத்தகைய
சிறப்பு வாய்ந்த கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராகும் வாய்ப்பு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து
கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் திலீப் குமார் கூறுகையில்,
மாவட்டத்தில்
செயல்பட்டு வரும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர்
ஆவதற்குத் தேவையான உறுப்பினர் படிவம், அந்தந்த கூட்டுறவு சங்கங்களில் வழங்கப்படுகிறது.
உறுப்பினர்
ஆக தேவைப்படும் ஆவணங்கள்
1. பாஸ்போர்ட்
புகைப்படம் 2
2. ஆதார்
அட்டை
3. வாக்காளர்
அடையாள அட்டை அல்லது குடும்ப அட்டை நகல்
4. பான்கார்டு
நகல்
5. பங்குத்
தொகை ரூ.100
6. நுழைவுக்
கட்டணம் ரூ.10
உறுப்பினர்
ஆக செய்யவேண்டியவை?
இந்தப்
படிவங்களை முழுமையாகப் பூர்த்தி செய்து, மேற்கூறிய ஆவணங்களையும் இணைத்து, உங்கள் அருகில் உள்ள சங்கங்களில் நேரில்
சென்று அளித்து உறுப்பினர் ஆகலாம்.
நேரில்
செல்ல முடியாதவர்கள் தபால் மூலமும் அனுப்பலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண்மைக்
கூட்டுறவு உறுப்பினர்
விவசாயிகள்
மற்றும் பொதமக்கள் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினராகி,
சங்கம் வழங்கும் அனைத்துச் சேவைகளையும் பெற்று வாழ்வாதாரத்தைப் மேம்படுத்துக்கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும்
படிக்க....
ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க ரூ.45 ஆயிரம் மானியம் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்!!
வேளாண் பணிகளுக்கு குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்கள்! ஒரு மணி நேரத்திற்கு ரூ.340 முதல்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி
மேலும் அறிந்துகொள்ள
TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை
தொடரந்து காணுங்கள்
நன்றி......
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...