PKVY: புதிய
முறையில் இயற்கை விவசாயத்திற்கு ரூ.50,000 வழங்கும் மத்திய அரசு! முழு விபரம் உள்ளே!
இயற்கை
விவசாயம் செய்ய விருப்பமா? இயற்கை விவசாய முறைகளை அறிவது எப்படி? அதற்கான தகவல்கள் எங்கே கிடைக்கும்? இவைகளைத்தான் நீங்கள் தேடுகிறீர்கள் என்றால் இந்த செய்தித் தொகுப்பு
உங்களுக்காகத்தான்.
பாரம்பரிய
விவசாயத் திட்டம்
இயற்கை
வேளாண் முறைகளை ஊக்குவிக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், இந்த இயற்கை விவசாயம்
குறித்த ஒரு முழுமையான புரிதல்
பெரும்பாலான விவசாயிகளிடம் இருப்பதில்லை. இதற்கெனவே, மத்திய அரசு பரம்பரகத் கிருஷ்
விகாஷ் யோஜனா (பாரம்பரிய விவசாயத் திட்டம்) ஒன்றை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம்
இயற்கை விவசாயம் செய்யும் வருவர் ஒரு ஹெக்டேருக்கு ரூ.50,000
வரை பெற முடியும்.
PKVY என்றால்
என்ன?
பிரதமர்
நரேந்திர மோடி தலைமையிலான பாஜக
அரசு தொடர்ந்து இயற்கை வேளாண்மையை ஊக்குவித்து வருகிறது, மேலும் பரம்பரகத் கிருஷி விகாஷ் யோஜனா என்ற பாரம்பரிய வேளாண்
திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் 2015-இல்
தொடங்கப்பட்டது. இது மத்திய அரசு
நிதி நிர்வாகம் மற்றும் நிலையான வேளாண்மைக்கான தேசிய மிஷன் ஆகியவற்றின் கீழ் நீடித்த மண்
சுகாதார மேலாண்மை கொண்டுள்ளது.
இந்த
திட்டத்தின் கீழ், 50 அல்லது அதற்கு மேற்பட்ட விவசாயிகள் இயற்க வேளாண் முறையை மேற்கொண்டு 50 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட ஒரு இயற்கை வேளாண்
பண்ணையை (கிளஸ்டர்) உருவாக்குகின்றனர்.
PKVY திட்டத்தில்
நிதியுதவி
இந்த
பாரம்பரிய வேளாண் திட்டத்தின் கீழ் விவசாயம் செய்யும்
விவசாயிகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசால் 60:40 என்ற விகிதத்தில் நிதியுதவி
வழங்கப்படுகிறது. மற்றும் வடகிழக்கு மற்றும் இமயமலை சார்ந்த மாநிலங்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் 90:10 என்ற விகிதத்திலும், மேலும்,
யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு 100% நிதியுதவி வழங்குகிறது.
ரூ.50,000
அள்ளித்தரும் PKVY
புதிதாக
இயற்கை விவசாயம் மேற்கொள்ள விரும்பும் விவசாயிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு ரூ.50,000 வழங்கப்படுகிறது. மத்திய அரசு சார்பில் ரூ.31000
அதாவது 61% வழங்கப்படுகிறது. இயற்கை விவசாயத்திற்கு தேவையான உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் மண்புழு உரம் போன்றவற்ற வாங்குவதற்காக
இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது.
இயற்கை
வேண்மைக்கான சான்றிதழ்
இயற்கை
வேளாண்மைக்கான சான்றிதழைப் பெற, நீங்கள் ஒரு
முகவர் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
PKVY திட்டத்தின்
கீழ், கிளஸ்டர் அணுகுமுறை மற்றும் PGS சான்றிதழ் மூலம் இயற்கை வேளாண் கிராமத்தை உருவாக்குவதன் மூலம் இயற்கை வேளாண்மை ஊக்குவிக்கப்படுகிறது.
PGS சான்றளிக்கும்
செயல்முறை
PGS - பி.ஜி.எஸ் என்பது
இயற்கை விளை பொருட்களை சான்றளிக்கும்
ஒரு செயல்முறையாகும். மேலும் உற்பத்தி மற்றுத் நிர்ணயிக்கப்பட்ட தரச் சான்றுகளை உறுதி
செய்கிறது. இந்த சான்றிதழ் ஒரு
ஆவண அறிக்கையின் வடிவத்தில் வழங்கப்படுகிறது.
நீடித்த
வேளாண்மைக்கான தேசியதிட்டம் NMSA என்ற மிகப்பெரிய திட்டத்தின்
உள்ளே அடங்கி இறக்கும் ஒரு விரிவான பகுதியே பாரம்பரிய விவசாய மேம்பாட்டு திட்டம்
( பரம்பரகத் கிருஷி விகாஷ் யோஜனா ) என்பதாகும். மண்ணின் ஆரோக்கியத்தை
பெருக்கும் உத்தியை பொறுத்து இத்திட்டம் இதன் மூலம் இறக்கை
விவசாயம் ஊக்குவிக்கப்படுகிறது.
இந்த திட்டம்
வணிகத்திற்கான வேளாண் பொருட்களின் உற்பத்தியை சான்றளிக்கப்படும் இயற்கை வேளாண்மை மூலம்
செய்வது
இத்தகைய வேளாண்
விளைபொருட்கள் பூச்சிக்கொல்லி மருந்துபடிவுகள் இல்லாதவையாக நுகர்வோரின் உடல்நலத்ததை
மேம்படுத்த கூடியதாக இருக்கும்.
விவசாயிகளின்
வருமானத்தை அதிகரித்து வணிகர்களுக்கு சாத்தியபாடுள்ள சந்தையை உருவாக்கும். இயற்கை வளங்களை
திரட்டி இடு பொருட்கள் உருவாக்க விவசாயிகளை ஊக்குவிக்கும்.
மேலும்
படிக்க....
குறைந்த செலவில் வெங்காய சாகுபடி!! வெங்காயத்தை பயிர் செய்து முன்பை விட அதிகமாக லாபம் பெறுங்கள்!!
கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக அழைப்பு! அனைத்து மாவட்டங்களிலும் உறுப்பினர் ஆகலாம்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி
மேலும் அறிந்துகொள்ள
TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை
தொடரந்து காணுங்கள்
நன்றி......


0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...