விவசாயிகளே!! தரிசு நிலத்தை விளைநிலமாக்க ரெடியா? மானியம் தருகிறது அரசு!!


மதுரை மாவட்டம் மேலூர் வட்டாரத்தில் தரிசு நிலங்களை விளை நிலங்களாக்கி சாகுபடி செய்ய மானியம் வேளாண்மை உதவி இயக்குநர் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.


விளைநிலம்


விவசாயத்தில் மிகவும் சவால் மிகுந்த செயல் எதுவென்றால், மிக மிக வறண்டத் தரிசு நிலத்தை விளைநிலமாக மாற்றுவதுதான். நல்ல வளம் மிகுந்த நிலத்திலேயே பயிர் சாகுபடி நாம் நினைக்கும் வகையில் இருக்காது.



ஏனெனில் புழுக்கள் மற்றும் நோய்த் தாக்குதலில் இருந்து பயிர்களைப் பாதுகாப்பதே மிகக் கடினம். இதில் தரிசு நிலமாக இருந்தால், விவசாயம் செய்வது மிக மிகக் கடினம்தான்.


பலத் திட்டங்கள்


அந்த வகையில் மதுரை மாவட்டம், மேலூர் வட்டாரத்தில் உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்காக தமிழ்நாடு அரசு வேளாண்மைத் துறையின் கீழ் பல்வேறு மானியத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


சாகுபடிக்கு மானியம்


இதன் தொடர்ச்சியாக சாகுபடிப் பரப்பை அதிகரிக்கும் நோக்கில் 2021-22ம் ஆண்டிற்கு தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நீண்டகால தரிசு நிலங்களைப் பண்படுத்தி சாகுபடிக்கு ஏற்ற விளைநிலங்களாக மாற்றி சாகுபடி செய்ய தமிழக அரசு வேளாண்மைத் துறையின் மூலம் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.


தரிசாக உள்ள நிலம்  


மேலூார் வட்டாரத்தில் கடந்த 5 ஆண்டுகளாக சாகுபடி செய்யப் படாமல் தரிசாக உள்ள நீண்ட கால இதர தரிசு நிலங்களைக் கண்டறியப்பட்டுள்ளன. இதனைச் சாகுபடிக்கு கொண்டு வருவதற்காக ஒரு தொகுப்பிற்கு 25 ஏக்கர் தரிசு நிலைம் இருக்க வேண்டும்.


தேர்ந்தெடுக்கும் பணி


இதன்படி 5 தொகுப்புகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு (50 ஹெக்டேர்) தற்போது தொகுப்பு கிராமங்கள் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 5 ஏக்கர் வரை இத்திட்டத்தில் மானியம் வழங்கப்படுகிறது.



முட்புதர்களை அகற்றுதல்


இத்திட்டத்தில் பங்கு பெறும் விவசாயிகள் தங்களது நிலங் களில் ஜேசிபி மூலம் முட்புதர்களை அகற்றுதல், அகற்றப்பட்ட முட்புதர்களை அப்புறப்படுத்தி நிலத்தினை சுத்தப்படுத்துதல் மற்றும் சமப்படுத்துதல், இருமுறை உழவு செய்தல் உள்ளிட்டப் பல்வேறு பணிகளை விவசாயிகள் தங்கள் சொந்த செலவில் செய்து கொள்ள வேண்டும்.



மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS


பலவிதப் பணிகள்


இதில், உழுத நிலங்களில் தொழுஉரம் இடுதல், வேலையாட்கள் கூலி மற்றும் பயறு வகைப்பயிர்கள் எண்ணெய் வித்துப்பயிர் மற்றும் சிறு தானியப் பயிர்கள், விதைப்பு செய்தல் போன்ற பணிகளும் இடம்பெறும்.


வங்கிக்கணக்கில் வரவு


அவ்வாறு செய்யும் பணிகளைப் பட்டியலிட்டு, மேலூர் வட்ட வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.


விவசாயிகளுக்கு 50% மானியம்


அப்படி சமர்ப்பித்த பிறகு, 50 சதவீத மானியத்தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வரவு வைக்கப்படும். எனவே மேலூர் வட்டாரத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் இந்த அரிய வாயப்பினை பயன்படுத்திக் கொண்டு நமது நாட்டின் உணவு உற்பத்தியினைப் பெருக்குவதற்கு உறுதுணை யாக இருப்பதோடு தங்களின் வாழ்வாதாரத்தினையும் இதன் மூலம் உயர்த்திக் கொள்ளலாம்.



மேலும் தொடர்புக்கு


கூடுதல் விபரங்களுக்கு தங்கள் பகுதி வேளாண்மை அலுவலர், துணை வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.


முன்பதிவு அவசியம்


வேளாண்மை அலுவலர் கிருஷ்ணகுமார் : 98940 16665 மற்றும் துணை வேளாண்மை அலுவலர் தனலட்சுமி : 94868 24431 என்ற கைபேசி எண்களில் பதிவு செய்து கொள்ளலாம்.


தகவல் வெளியீடு


மா.செல்வி

உதவி இயக்குநர்

மேலூர் வட்டார வேளாண்மை


மேலும் படிக்க....


இயற்கை விவசாயம் செய்ய விருப்பமா? ஹெக்டேருக்கு ரூ.50,000 வழங்கும் மத்திய அரசு!!


குறைந்த செலவில் வெங்காய சாகுபடி!! வெங்காயத்தை பயிர் செய்து முன்பை விட அதிகமாக லாபம் பெறுங்கள்!!


10 கோடி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை இரட்டிப்பாக்கும் புதிய பட்ஜெட் திட்டம்!!


மேலும் தொடர்புக்கு....


எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடரந்து காணுங்கள் நன்றி......

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post