வெங்காயப்
பட்டறை அமைக்க ரூ.87,500 மானியம்-விவசாயிகளுக்கு அழைப்பு!
மாவட்ட அறிவிப்பு
கோவை
மாவட்டம் தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் உள்ள விவசாயிகள், மானியத்துடன்
வெங்காய பட்டறை அமைக்க முன்வரவேண்டும் என தோட்டக்கலைத்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
வெங்காயத்தின்
சிறப்பு
வெங்காயம்
என்பது சமையலுக்கு மிகவும் இன்றியமையாதது. ஏனெனில், உடலில் உள்ள ரத்தத்தைச் சுத்திகரிக்கும்
தன்மை வெங்காயத்திற்கு உண்டு என்பதால் அதனை அன்றாட உணவில்
சேர்த்துக்கொள்ள வேண்டியதும் அவசியம்.
இதனைக்
கருத்தில் கொண்டும், விவசாயிகளின் நிதிச்சுமையைக் குறைக்கும் வகையிலும், வெங்காய சாகுபடிக்கு பல்வேறு சலுகையை மத்திய - மாநில அரசுகள் வழங்கிவருகின்றன.
வெங்காயப்
பட்டறைக்கு மானியம்
இதன்
ஒருபகுதியாக, வெங்காயப் பட்டறை அமைக்க மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, தொண்டாமுத்தூர் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சித்ரபானு
கூறியதாவது:
தோட்டக்கலைத்துறை
சார்பில், வெங்காய பட்டறை அமைப்பதற்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS
சேமித்து
வைத்து விற்பனை
வெங்காயப்
பட்டறை அமைப்பதன் மூலம், அமைக்க மானியம் தங்களின் வெங்காயங்களை, விலை கிடைக்காத காலங்களில்
பட்டறையில் சேமித்து, உரிய விலை கிடைக்கும்
போது விற்பனை செய்யலாம்.
விதையாகவும்
பயன்படுத்தலாம்
வெங்காயத்தைப்
பட்டறையில் வைத்து, மறு நடவிற்கு விதை
வெங்காயமாகவும் பயன்படுத்தலாம்.
மானிய தொகை
ரூ.87,500
வெங்காயப்
பட்டறை அமைப்பதற்கு, தோட்டக்கலை துறை மூலம், விவசாயிக்கு,
87 ஆயிரத்து, 500 ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது.
மானியம்
பெறுவதற்க்கான தகுதிகள்
இம்மானியத்தைப்
பெற, வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயியாக இருக்க வேண்டும். அதோடு, அந்த விவசாயிக்கு குறைந்தது
5 ஏக்கர் விளைநிலம் இருக்க வேண்டும்.
எவ்வாறு விண்ணப்பிப்பது?
விருப்பமுள்ள
விவசாயிகள், தொண்டாமுத்தூர் தோட்டக்கலைத்துறை அலுவலகம் மற்றும் உழவன் செயலி மூலமாக, பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
படிக்க....
விவசாயிகளே!! தரிசு நிலத்தை விளைநிலமாக்க ரெடியா? மானியம் தருகிறது அரசு!!
இயற்கை விவசாயம் செய்ய விருப்பமா? ஹெக்டேருக்கு ரூ.50,000 வழங்கும் மத்திய அரசு!!
குறைந்த செலவில் வெங்காய சாகுபடி!! வெங்காயத்தை பயிர் செய்து முன்பை விட அதிகமாக லாபம் பெறுங்கள்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி
மேலும் அறிந்துகொள்ள
TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை
தொடரந்து காணுங்கள்
நன்றி......
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...