உங்களிடம் 15,000 ரூபாய் இருந்தால் குறைந்த முதலீட்டில் விவசாயத்தில் 1 லட்சம் வருமானம்!
குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு இந்தத் தொழில் சூப்பராக ஒர்க்கவுட் ஆகும். இதன் மூலம், மூன்றே மாதங்களில் ரூ.3 லட்சம் லாபம் கிடைக்கும். விவசாயத்தில் மிக குறைந்த முதலீட்டில் நீங்கள் சொந்தமாக தொழில் தொடங்க விரும்பினால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இந்தத் தொழில் மூலம் நீங்கள் குறைந்த பணத்தை முதலீடு செய்தால் போதுமானது. லாபமும் பெரிதாகக் கிடைக்கும். அதுதான் துளசி விவசாயம். இந்த விவசாயத்தில் மிகக் குறுகிய காலத்தில் அதிகளவில் வருவாய் ஈட்ட முடியும்.
துளசி என்பது ஆன்மீக வழியிலும் ஆயுர்வேதத வழியிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அதன் காரணமாகவே, இதற்கான தேவையும் அதிகமாக இருக்கிறது. துளசிச் செடி வியாபாரம் செய்வதன் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்.
துளசி செடியில் மருத்துவ குணம் மிக அதிகம். இதன்
வேர், தண்டு, இலை போன்ற அனைத்து பாகங்களும் மருந்துகள் தயாரிக்க பயன்படுகிறது. இதற்கான
தேவை எப்போதுமே அதிகமாக இருக்கும். துளசி செடி என்பது வீட்டு வைத்தியம் மட்டுமின்றி குறிப்பாக யுனானி,
ஹோமியோபதி, அலோபதி மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது.
கொரோனா
காலம் வந்த போது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மக்களிடையே பல்வேறு விழிப்புணர்வு
ஏற்பட்டுள்ளது. எனவே துளசி போன்ற இயற்கை மருந்துப் பொருட்களை மக்கள் அதிகமாகப் பயன்படுத்தத்
தொடங்கியுள்ளனர்.
துளசி
விவசாயம்
துளசி விவசாயம் செய்ய ஜூலை மாதம் உகந்ததாக இருக்கும். துளசி செடிகளை 45 செ.மீ இடைவெளியில் நட்டு வளர்க்க வேண்டும். நடவு செய்த உடன் நீர்ப்பாசனம் அவசியம். துளசிப் பயிரை அறுவடை செய்வதற்கு 10 நாட்களுக்கு முன்பே தண்ணீர் பாய்ச்சலை நிறுத்த வேண்டும்.
துளசி செடியில்
பூக்கள் பூக்கும் தருணத்தில் அதில் உள்ள எண்ணெய்யின் அளவு குறைந்துவிடும் என்பதால், பூ பூக்க ஆரம்பிக்கும்
போதே அறுவடை செய்ய வேண்டும்.
அறுவடை செய்த துளசி பயிரை நேரடியாக சந்தைக்கு கொண்டு சென்று துளசி செடிகளை மக்களிடையே விற்பனை செய்யலாம். இது மட்டுமின்றி மருந்து நிறுவனங்கள் அல்லது மருந்து ஏஜென்சிகளுக்கு ஒப்பந்தத்தின் பெயரில் செடிகளை விற்பனை செய்யலாம்.
ஒப்பந்த அடிப்படையிலும் நீங்கள் துளசி விவசாயத்தில் ஈடுபடலாம். டாபர், பதஞ்சலி உள்ளிட்ட பல மருந்து நிறுவனங்கள் துளசியை ஒப்பந்த பெயரில் விவசாயம் செய்து வருகின்றனர்.
முதலீடு
துளசி
விவசாய தொழிலைத் தொடங்க உங்களிடம் 15,000 ரூபாய் இருந்தால் போதும். துளசி விவசாய தொழிலில்
3 மாதங்களிலேயே ரூ.3 லட்சம் வரை சம்பாதிக்கலாம்.
மேலும்
படிக்க....
வாழையில் ஏற்படும் பாக்டீரியா வாடல் நோயும் விவசாயிகள் பின்பற்ற வேண்டிய மேலாண்மை முறைகளும்!!
மருதாம்பு கரும்பில் கையாள வேண்டிய தொழில்நுட்பங்கள் மற்றும் சாகுபடி குறிப்புகள்!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint
WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
1 Comments
ஓம்சக்தி
ReplyDeleteஇத்துளசி சாகுபடி சம்பந்தமாக யாரை அணுகவேண்டும். விபரம் மற்றும் தொடர்பு எண்களை தெரிவிக்கவும்.
என்னுடைய எண் - 638 112 4889.
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...