கால்நடைகளின் கழிச்சல் நோயை குணப்படுத்தும் கறிவேப்பிலை! சிறப்பு மருத்துவதொகுப்பு!!


நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் கறிவேப்பிலை பெரும்பாலும் தூக்கி எறியப்படும் இலையாகவே இருக்கிறது. ஆனால் அந்தக் கறிவேப்பிலை, மனிதர்களின் உடல் நலத்திற்கு மட்டுமல்ல, கால்நடைகளின் உடல் நலத்திற்கும் முக்கியமான ஒன்று. 



குறிப்பாகக் கால்நடைகளின் கழிச்சல் நோயை நீக்க, கறிவேற்பிலை சிறந்த மருந்தாகும். கறிவேப்பிலையிலும், அதன் மரப்பட்டைகளிலும் மாவுச்சத்து, புரதம், கொழுப்பில்லாத நார்ச்சத்து, தாது உப்புகள், வைட்டமின் ஏ, சி, கால்சியம், ஆக்சாலிக் அமிலம் ஆகிய சத்துக்கள் உள்ளன. 


இவை சர்க்கரை நோய், புற்று நோய், கல்லீரல் சம்பந்தமான நோய்களுக்கு எதிர்ப்பு சக்தியை தரக்கூடியவை. கால்நடை மருத்துவ பல்கலையின் மூலிகை ஆராய்ச்சியில், கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


கறிவேப்பிலை சிறந்த மூலிகை


மாடுகளில் மலட்டுத்தன்மையை நீக்குவதற்கும், கழிச்சல் நோய்க்கும், கறிவேப்பிலை சிறந்த மூலிகையாகும். சினைப் பிடிக்காத மாட்டுக்கு தினமும் கால் கிலோ முள்ளங்கி ஐந்து நாட்களுக்கும், அடுத்த நான்கு நாட்களுக்கு ஒரு சோற்றுக் கற்றாழை மடல்களை உணவாகக் கொடுக்க வேண்டும்.



தொடர்ந்து அடுத்த நான்கு நாட்களுக்கு தினமும் ஒரு கைப்பிடி அளவுக்கு முருங்கைக்கீரை, அதற்கடுத்த நான்கு நாட்களுக்கு கைப்பிடி அளவு பிரண்டை, கடைசி நான்கு நாட்களுக்கு கைப்பிடி அளவு பனை வெல்லம், உப்பு இவற்றுடன் சேர்த்து கொடுக்க வேண்டும்.இதனால் கருப்பையின் நோய் குறைபாடுகள் நீங்கி மாடுகள் சினைப்பிடிக்க ஏதுவாக இருக்கும்.


ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலையுடன் 10 கிராம் வெந்தயம், 5 சின்ன வெங்காயம், ஒரு பல் பூண்டு, 10 கிராம் மஞ்சள், 5 மிளகு, பெருங்காயம், கசகசா இவற்றுடன் 100 கிராம் பனை வெல்லம் சேர்த்து சிறு உருண்டைகளாக கொடுத்தால் கழிச்சல் நோய் தீரும்.


இக்கலவையைத் தினமும் ஒரு வேளை என்றளவில் நான்கு நாட்களுக்கு கொடுத்தால் நீர் கழிச்சல் குணமாகும்.



தகவல் வெளியீடு


டாக்டர். வீ. ராஜேந்திரன்

முன்னாள் இணை இயக்குனர்

கால்நடை பராமரிப்புத்துறை

 

மேலும் படிக்க....


கோடைப்பருவ நெல் சாகுபடியில் தண்டு துளைப்பான் மற்றும் குலைநோய்த் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?


தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் 'அசானி' புயல் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!!


மண்புழு உரம் பயிர்களுக்கு இட்டு மண் வளத்தையும் உற்பத்தியையும் அதிகரிக்க வேளாண்மை இணை இயக்குநர் வேண்டுகோள்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post