கிராம மேலாண்மை சிறப்பு குழு கூட்டம் பல்வேறு துறை அதிகாரிகளின் முன்னிலையில் பதிவு செய்யப்பட்டது!!


அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு உட்பட்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பஞ்சாயத்துகளில் சிறப்பு கிராம மேலாண்மை குழு கூட்டம் மதுக்கூர் வட்டாரத்தில் மதுக்கூர் வடக்கு விக்ரமம் அத்திவெட்டி ஆகிய பஞ்சாயத்துகளில், 


இன்றைய தினம் அனைத்து துறை ஒருங்கிணைப்புடன் கிராம முன்னேற்றத்திற்கான தீர்மானங்கள் மற்றும் தேவைகள் விவசாயிகளால் விவசாயிகள் மூலம் பல்வேறு துறை அதிகாரிகளின் முன்னிலையில் பதிவு செய்யப்பட்டது. 



மதுக்கூர் வடக்கு பஞ்சாயத்தில் தஞ்சை மாவட்ட உதவி ஆணையர் ஸ்ரீகாந்த் அவர்கள் தலைமையிலும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேளாண் உதவி இயக்குனர் தோட்டக்கலை அலுவலர் மீன் வளர்ச்சி துறை வருவாய் துறை நீர்வள ஆதாரதுறை உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர். 


உதவி ஆணையர் உரையில் மதுக்கூர் வடக்கு பஞ்சாயத்தில் உள்ள விவசாயிகள் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் தேவையான அனைத்து சாலை வசதிகள் வாய்க்கால் தூர்வாருதல் களம் அமைத்தல் போன்றவைகளை செயல்படுத்தி தன்னிறைவு அடைய கேட்டுக்கொண்டார். 


வேளாண் துணை இயக்குனர் ஈஸ்வர் அவர்கள் தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டங்களின் மூலம் விவசாயிகளுக்கு கிடைக்கப்பெறும் மானியங்கள் பற்றி விவசாயிகளுக்கு விளக்கமாக எடுத்துக் கூறினார். 



வேளாண்மை உதவி இயக்குனர் வேளாண் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் மானியங்கள் அதற்கான தகுதிகள் போன்றவைகள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்து கூறி பயன்பெற கேட்டுக்கொண்டார்.


மதுக்கூர் வடக்கில் விவசாயிகள் சாலை வசதி மற்றும் நெல் கொள்முதல் நிலையத்தில் சேதமுற்ற களத்தினை கட்டித்தர கூறினார். திட்டத்திற்கான பயனாளிகளை மேலாண்மைக் குழு மூலம் தேர்வு செய்ய கேட்டுக் கொண்டனர். 


வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வேந்திரன் மதுக்கூர் வடக்கு பஞ்சாயத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளின் விவரம் பற்றி எடுத்துக் கூறினார்.கால்நடை துறையிலிருந்து மருத்துவர் சங்கர் அவர்கள் கலந்துகொண்டு கோழிகளுக்கான தடுப்பூசி போடுதல் முகாம் பற்றியும் மற்றும் கால்நடை பாதுகாப்பு திட்டம் பற்றியும் எடுத்துக் கூறினார். 


கறவை மாடுகளுக்கு கோமாரி தடுப்பூசி போடுவது அவசியம் பற்றியும் எடுத்துக் கூறினார். மீன்வளத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மானியத் திட்டங்கள் குறித்து பியூலா அவர்கள் எடுத்துக் கூறினார்.



தோட்டக்கலை அலுவலர் கார்த்திகா மற்றும் பொறுப்பு அலுவலர் சரவணன் துறைக்கான மானிய திட்டங்கள் பற்றி எடுத்துக் கூறினார் கிராம நிர்வாக அலுவலர் ஜீவானந்தம் கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகளிடமிருந்து பட்டா மாறுதல் குறித்த விண்ணப்பங்களை பெற்றுக்கொண்டார்.


கூட்டத்திற்கான ஏற்பாடுகளை விவசாய உற்பத்தியாளர் குழு தலைவர் மூர்த்தி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் நாராயணன் ஆகியோர் செய்து இருந்தனர். மேலும் கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் ஞானசேகரன் துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி வேளாண் உதவி அலுவலர் தினேஷ் அட்மா திட்ட அலுவலர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.




அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள் பற்றி உதவி ஆணையர் ஸ்ரீகாந்த் அவர்கள் மதுக்கூர் வடக்கு பஞ்சாயத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்.





வேளாண் துறையில் மத்திய மாநில அரசு திட்டங்கள் அதற்கான மானியங்கள் பற்றி வேளாண் துணை இயக்குனர் ஈஸ்வர் அவர்கள் விவசாயிகளுக்கு விளக்கிக் கூறினார்.




வட்டார வளர்ச்சி அலுவலர் கள் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் செயல்படுத்தி உள்ள திட்டங்கள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்.


விக்ரமம் பஞ்சாயத்தில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டு மண் மாதிரி மற்றும் பிற துறைகள் சார்பான தங்களுடைய மனுக்களை பொறுப்பு அலுவலர் பூமிநாதனிடம் கொடுத்தனர். உடன் ஊராட்சிமன்ற தலைவர் மற்றும் விவசாயிகள் நண்பர் ராமதாஸ் ஆகியோர் உள்ளனர்.



அத்திவெட்டி பஞ்சாயத்தில் விவசாயிகள் விவசாய கடன் அட்டை விண்ணப்பங்கள் மண் மாதிரிகள் மற்றும் பட்டா மாறுதலுக்கான விண்ணப்பங்களையும் அளித்தனர். உடன் பொறுப்பாளர் முருகேஷ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உள்ளனர்.



விவசாயிகளுக்கான வேளாண் தொழில்நுட்பங்கள் கருத்து காட்சியாக அமைத்து வேளாண்மை உதவி இயக்குனர் திலகவதி விளக்கிக் கூறினார்.


தகவல் வெளியீடு


S.திலகவதி,

வேளாண்மை இணை இயக்குனர், மதுக்கூர்

தஞ்சாவூர் மாவட்டம்.


மேலும் படிக்க....


கோடைப்பருவ நெல் சாகுபடியில் தண்டு துளைப்பான் மற்றும் குலைநோய்த் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?


வண்டல் மண்ணை உரமாகப் பயன்படுத்துங்கள்! மண்ணை வளமாக்க வயல்களில் குளத்து வண்டலை இடுங்கள்!!


வேளாண் துறை திட்டங்கள் மற்றும் திட்டங்களுக்கான மானியங்கள் பற்றிய விழிப்புணர்வு முகாம்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post