பாரம்பரிய நெல் சாகுபடி முறைகள், பாரம்பரிய நெல் இரகங்களில் பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாட்டு முறைகள் பயிற்சி!!
மதுரை மாவட்ட வேளாண் அறிவியல் நிலையமும், துவாக்குடி பாசன மேலாண்மை பயிற்சி நிலையமும் இணைந்து “பாரம்பரிய நெல் சாகுபடி முறைகள்’ குறித்த பயிற்சி வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதன்மையர் முனைவர் பெ.ப.மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
வேளாண் இணை இயக்குநர் T.விவேகானந்தன், முன்னிலையிலும் மத்திய திட்டம், மாநிலத் திட்டம் வேளாண் பாசன மேலாண்மை பயிற்சி நிலையத்தின் வேளாண் துணை இயக்குநர்களும் கலந்து கொண்டு பல்வேறு மத்திய, மாநில அரசின் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.
வேளாண் அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் மு.இராமசுப்பிரமணியன், பாரம்பரிய இரகங்களின் சாகுபடி மற்றும் செயல் விளக்கங்களுக்கான நிலையத்தின் உதவிகள் பற்றி எடுத்துரைத்தார்.
பாரம்பரிய நெல் இரகங்களும், இயற்கை மற்றும் அங்கக வேளாண் இடுபொருட்களும் காட்சியகப்படுத்தப்பட்டிருந்தன. இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம், ஏற்றுமதி வாய்ப்புக்கள், பாரம்பரிய நெல் இரகங்கள் மற்றும் அதன் சிறப்பியல்புகள்,
பாரம்பரிய நெல் சாகுபடி முறைகள், பாரம்பரிய நெல் இரகங்களில் பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாட்டு முறைகள், பாரம்பரிய நெல் இரகங்களில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தாயாரிப்பு மற்றும் இயற்கை வேளாண் இடுபொருட்கள் உற்பத்தி தொழில்நுட்பம் பற்றிய பயிற்சியினை முனைவர். மு. இராமசுப்பிரமணியன், முனைவர் ச. வள்ளல் கண்ணன், முனைவர் பா.உஷாராணி, முனைவர் ச.ஆரோக்கிய மேரி மற்றும் பண்ணை மேலாளர் குமார் ஆகியோர் தொழில்நுட்ப உரையாற்றினர்.
பூங்குழலி, பொன்மணி, நீலவண்ணன் மற்றும் அருள் பிரகாசம் ஆகியோர் விவசாய அனுபவ பகிர்வு வழங்கினர். பயிற்சியில் மதுரை மாவட்டத்தில் உள்ள எல்லா வட்டார விவசாய பிரதிநிதிகளிலும் கலந்து கொண்டு பாரம்பரிய நெல்லை பாதுகாக்கவும் உற்பத்தி முறையை பயன்படுத்தி சந்தையை அதிகரிக்கவும் உறுதி கொண்டுள்ளனர்.
உழவர் உற்பத்தியாளர் சங்கங்கள் மூலமாக உற்பத்தி செய்த நெல்லை தரம் மேம்படுத்த அரசாங்கங்கள் தர கூடிய மானியத்தை பெற்று பயன்பெறும்படி கேட்டுக் கொண்டனர்.
பாசன நீர்மேலாண்மை பயிற்சி நிலையத்தின் உதவி பேராசிரியர் மற்றும் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் அக்ரி நீ.செல்வம் அனைத்து ஏற்பாடுகளையும் ஒருங்கிணைப்பையும் செய்திருந்தார். வேளாண் அறிவியல் நிலையத்தின் தொழில்நுட்ப உதவியாளர் கவிதா அனைத்து உதவிகளையும் செய்தார்.
மேலும் படிக்க....
காவேரி டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு இலவசமாக உரங்கள் தமிழக அரசு அரசாணை வெளியீடு!
PM Kisan விவசாயிகளுக்கு வங்கிக்கணக்கில் பணம் வருவதில் சிக்கல் இந்தத் தவறை உடனே சரிபண்ணுங்க!!
7 நாட்களாகியும் முளைக்காத நெல் விதைகள் விவசாயிகள் வேதனை! விவசாயிகளுக்கான விழிப்புணர்வு தகவல்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...